Thursday, 25 October 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! අග්නිදිග විශ්ව විද්යාලය: රැකියාවක නියැලී සිටි සිසුන් සති දෙකක මතභේදය අවසන් විය! South eastern University: Students arrested in occupation The two-week controversy ended!


தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு ஏற்கனவே, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி, தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்தமையினால், அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிருந்தது. இந்த நிலையில், குறித்த மாணவர்களை கைது செய்யாமல், பொலிஸார், அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றம் சாட்டியிருந்த பல்கலைக்கழக சமூகத்தினர், பொலிஸாருக்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரவு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழு, இதன்போது வருகை தந்திருந்தது. ஆயினும், அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்ட பின்னரே, தாம் ஆக்கிரமித்துள்ள இடத்திலிருந்து விலகிச் செல்வது குறித்து தீர்மானிக்க முடியும் என்று, அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, குறித்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தருவதாக, அந்த மாணவர்களிடம் கூறிச் சென்ற பொலிஸார், இன்று காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், குறித்த மாணவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. பகிடி வதையில் ஈபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.(புதிது) අග්නිදිග විශ්ව විද්යාලය: රැකියාවක නියැලී සිටි සිසුන් සති දෙකක මතභේදය අවසන් විය! පසුගිය සති දෙකක කාලයක් තිස්සේ අග්නිදිග විශ්ව විද්යාලයේ පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගෙන සිටි සිසුන් 15 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ. අක්කරෙයිපත්තුවේ රථවාහන පොලිස් නිලධාරියාගේ ප්රධානියා වූ පොලිස් කොස්තාපල්වරයා, පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගත් සිසුන් අත්අඩංගුවට ගෙන තිබේ. දකුණු ආසියාවේ පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගෙන සිටින සිසුන් ඉවත් කිරීමට නියෝග කර ඇති බව අක්කරෙයිපත්තු විනිසුරු මඩුල්ල පවසයි. එසේ වුවද, පරිපාලන ගොඩනැගිල්ල නිරන්තරව වාඩිවූ නිසා සිසුන් අත්අඩංගුවට ගැනීම සඳහා උසාවි නියෝග කළාය. මෙම අවස්ථාවේ දී ශිෂ්යයන් අත්අඩංගුවට ගැනීම සම්බන්ධයෙන් නොසැලකිලිමත් බව චෝදනා කළ සරසවි ප්රජාව පොලිසිය වෙත එරෙහිව මෑත පැවැත්වූ උද්ඝෝෂණයක නිරත විය. මෙම රාත්රියේ ඊයේ රාත්රියේ පොලීසිය විසින් විශ්වවිද්යාලයට ඇතුළු වූ අතර පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලා ගැනීම සඳහා සිසුන්ගෙන් ඉල්ලා සිටියේ ය. අම්පාර පොලිස් කොට්ඨාසයේ පොලිස් අධිකාරීවරයා සහ අක්කරෙයිපත්තුව පොලිස් දෙපාර්තමේන්තුවේ භාරකාර පොලිස් අධිකාරී විසින් මෙහෙයවන ලද පොලිස් කණ්ඩායම එම ස්ථානයට ගොස් ඇත. කෙසේ වෙතත් සිසුන්ට ඔවුන් ප්රකාශයට පත් කළ හැකි වූයේ අම්පාර දිස්ත්රික්කය තුළ නියෝජ්ය පොලිස්පතිවරයෙකු හා විශ්ව විද්යාලයේ උපකුලපතිවරයා සමඟ සාකච්ඡා කිරීමෙන් පසු තීරණය කළ හැකිය. පසුව මෙම සාකච්ඡාව සංවිධානය කිරීම සඳහා සිසුන්ට උද්ඝෝෂණය කළ සිසුන් පොලීසිය විශ්වවිද්යාලයට ඇතුළු වූ අතර ඔවුන් අත්අඩංගුවට ගත් සිසුන් අත්අඩංගුවට ගෙන ඇත. මෙම නඩුවේදී සිසුන් අධිකරණයට පෙනී සිටියි. එම පීඨයේ සිසුන් කිහිපදෙනෙකු මෙම ආක්රමණයට සම්බන්ධ වූ අතර, තොරතුරු තාක්ෂණ පීඨ සිසුන් කිහිප දෙනෙකුට ලබා දුන් පන්තිකාමරය ඉවත් කිරීම, South eastern University: Students arrested in occupation The two-week controversy ended! Police detained 15 students who had been occupying the South East University administrative building for the past two weeks. Policar, who was headed by the Traffic Police Officer of Akkaraipattu, arrested the students who occupied the administrative building. The Akkaraipattu Judge Court has already ordered to leave the students who occupy the South West University administrative building. Despite this, the court ordered the arrest of the students because they had occupied the administrative building regularly. At this stage, the university community, who had accused the police of negligence in arresting the students, was involved in a recent demonstration against the police. On this night, yesterday night, the police entered the university and urged students from occupying the administrative building to leave. The police team led by the Police Superintendent of Police Ampara Police Division and the Undertaker of the Akkaraipattu Police Department visited the site. However, the students were told that they could decide on their departure from the occupied territories only after a negotiation with the Deputy Inspector General of Police in Ampara district and the Vice-Chancellor of the University. Following this, the police, who told the students to arrange the talks, entered the university and arrested the students who were involved in the occupation. In this case, the students will be appearing in court. The students of the same faculty were involved in this aggression, demanding the removal of the classroom provided to some of the IT faculty students,

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்