Monday, 26 November 2018

எனது அன்பு இஸ்லாமிய வாலிபர்களே இளைஞர்களே உங்களுக்கு தான் இந்த செய்தி :-


எனது அன்பு இஸ்லாமிய வாலிபர்களே இளைஞர்களே உங்களுக்கு தான் இந்த செய்தி :-- 1970 முதல் தமிழ்நாட்டின் முஸ்லீம் மக்கள் அரபு நாடுகளாகிய துபாய் அபுதாபி சார்ஜா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா பஹ்ரைன் ஓமன் கத்தார் குவைத்து போன்ற நாடுகளுக்கு ஆரம்ப காலம் முதல் கடந்த சில ஆண்டுகள் வரை பிழைப்பு தேடி போனவர்கள் அதில் நன்றாக சம்பாதித்து வெற்றி கண்டவர்கள் பலர் , வீணா போனவர்களும் சிலர் உண்டு தற்போது சவூதிஅரேபியா வின் மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருகின்றது இது யாவரும் அறிந்ததே அரபு நாடுகளுக்கு மாற்றாக வேறு பல இஸ்லாமிய நாடுகள் அதிக பெட்ரோல் வளம் மிக்க நாடுகளும் உள்ளது பலர் இதனை அறியாமல் இருக்கலாம் தற்போது அதில் சில நாடுகளை அறிந்து கொள்ளுங்கள் :-- அஜர்பெயிஜான் - 97% முஸ்லீமகள் கஜகஸ்தான் - 70% முஸ்லீம்கள் உஜ்பெகிஸ்தான் - 96% முஸ்லீமகள் துருக்மேனிஸ்தான் - 89% முஸ்லீம்கள் இந்த நாடுகள் அதிக எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள செழிப்பான நாடுகள் இந்த நாடுகள் பல காலமாக ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தது தற்போது சுதந்திர நாடாக (மக்கள் குடியரசாக ) இருக்கிறது நிறைய வேலை வாய்ப்புகளும் சுதந்திரமான நாடுகள் (அரபு நாடுகள் போன்று அடக்கு முறை இங்கே கிடையாது ) குறைவான மக்கள் தொகையும் அதிக வளமும் உள்ள , நாகரீகமான மென்மையான மனிதர்கள் வாழும் நாடுகள் இனிமேல் வரும் , வளரும் முஸ்லீம் சமுதாயமக்களும் , மற்ற இந்திய ஏழை சமுதாய மக்களும் நமது இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்களும் இது போன்ற வளமான நாடுகளுக்கு சென்று வேலை வாய்பினை பெற முயற்ச்சி செய்யலாம் . முன்பு நமது முஸ்லீம் சமுதாய மக்கள் போதிய கல்வி அறிவு பெறாமலும் , கல்வி அறிவு பெற்றிருந்தாலும் போதிய திறமையை வளர்த்து கொள்ளாமல் அரபு நாடுகளுக்கு கக்கூஸ் கழுவ , ரோடு போட , ஒட்டகம் ஆடு மேய்க்க , பலதியாவில் ரோட்டில் குப்பை கூட்ட போனது போல் போகாமல் போதிய கல்வியும் திறமையும் வளர்த்து கொண்டு இது போன்ற புதிய நாடுகளுக்கு சென்றால் நல்ல வேலை வாய்ப்புகளை பெறலாம் இந்த நாடுகளில் மக்கள் நாகரீகமானவர்கள் மென்மையானவர்கள் அழகானவர்கள் , மனிதர்களை மதிக்க கூடியவர்கள் சூது வாது அறியாதவர்கள் இந்த நாடுகளுக்கு செல்லும் திருமணம் ஆகாத இளம் வயதினர்கள் அந்த நாடுகளிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விடலாம் இந்திய பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு ஆன் லைனில் வருடா வருடம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது மேலும் விபரம் தேவை உள்ளவர்கள் அந்த அந்த நாடுகளின் அரசாங்க வைப் சைட்டில் விரிவான தகவலை பெறலாம் . குறிப்பு :- நான் எந்த நாட்டிற்கும் ஏஜெண்ட் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன் உங்களுக்கு தேவையான எல்லா நாட்டு இமிகிரேஷன் தகவல்களும் அந்த அந்த நாட்டின் அரசாங்க வைப் சைட்டில் உள்ளது M.WASEEM.T.M

Saturday, 24 November 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல்.....


இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல் 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும். 9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்! •• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் •• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும். •• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். •• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. •• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். •• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். •• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும். 10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும். 11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும். 12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும். 13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும். 14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும். 15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் } 16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள். 17. பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள். 18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!! அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம். சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள். 19. சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம். •• சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். •• சீரகப் பொடி மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். •• சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும். •• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். •• தொப்பையைக் குறைக்கும் சீரகம் சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம். •• சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி. google.com, pub-1483268316984932, DIRECT, f08c47fec0942fa0

Friday, 23 November 2018

இலங்கையில் அரசாங்கம் இல்லை In Sri Lanka No government!


இலங்கையில் அரசாங்கம் இல்லை! பிரதமர் இல்லை! ஜனநாயகம் இல்லை! என ஒரு சாரார் ஆனால்? பிரதமருக்கான உத்யோகபுர்வ அலரி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்🤷‍♂️ In Sri Lanka No government! Not prime minister No democracy! But not a single person? The Prime Minister's Approach Member of the House in the Temple Trees

Wednesday, 21 November 2018

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். S H A R E. S H A R E. S H A R E .....


வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.... www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள:: www.govtjobs.allindiajobs.in www.timesjobs.com www.naukri.com www.tngovernmentjobs.in www.sarkariexam.co.in www.govtjobs.net.in www.indgovtjobs.in இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்க்கும் பகிர்ந்து உதவுங்கள்..🏹

இலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் ! SHARE SHARE SHARE


இலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் ! கடந்த அக்டோபர் 26ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதி வரை திரைக்கு பின்னால் நடந்தவை .... கடந்த அக்டோபர் 26ம் திகதி மாலைப் பொழுதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன முன் பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்தார். அதுவரை ஐதேகவின் பிரதமராக இருந்த ரணில் அல்லது அக் கட்சியின் முக்கிய தரப்புகள் இது குறித்து அறிந்தே இருக்கவில்லை. சிரிசேன , மகிந்த , பசில் ஆகியோரது தொடர்பாளராக ஈடுபட்ட லக்ஸ்மன் பெரேரா ஆகியோர் மட்டுமே இதை அறிந்திருந்தனர். அதைத் தவிர மகிந்த மற்றும் சிரிசேன ஆகியோரது நெருக்கமானவர்கள் ஏதோ ஒரு மாற்றம் நடக்கப் போகிறது என மட்டும் ஊகித்திருந்தினர். ஆனால் அது என்னவென்பது உறுதியாக தெரியாதிருந்தது. அதனால்தான் அவர்கள் மகிந்த - மைத்ரி ஒற்றுமை குறித்து பரப்புரைகளை மேற் கொண்டனர். அத்தோடு தேசாபிமான சுலோகங்களையும் முன் வைக்கத் தொடங்கியிருந்தனர். மகிந்தவின் அவசர தேவை , கோட்டாபய மற்றும் காமினி செனரத் ஆகியரது வழக்குகளிலிருந்து மீள்வதேயாகும். ஏனைய வழக்குகளை விட இவை பார தூரமானவை. அத்தோடு ஏனைய அவரது வழக்குகளும்தான். ஆனால் மைத்ரியின் இலக்கோ 2019 சனவரி 08ம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி எப்படியாவது இன்னொருமுறை வெற்றி பெற்று ஜனாதிபதியாக வேண்டும் என்பதேயாகும். மகிந்த பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததும் ரணில் 1994 மற்றும் 2003 காலப் பகுதியில் தலையணை படுக்கைகளை சுருட்டிக் கொண்டு போனது போல வீட்டுக்கு போவார் என அவர்கள் எண்ணியிருந்தனர். அதன்பின் ஐதேவுக்குள் உள்ள ரணில் விரோதிகளையும் , தம்மோடு முன்னர் நெருக்கமாக இருந்த முஸ்லீம் கட்சிகளையும் வளைத்துப் போட்டுக் கொள்வது பெரிய பிரச்சனையில்லை என மகிந்த மற்றும் பசில் நம்பிக்கையோடு இருந்தார்கள். இதற்கு ரவி கருணாநாயக்கா, அண்மைக் காலமாக ரணில் மேல் கொண்ட கசப்பும் காரணமாக இருந்தது. தனக்கு நிதியமைச்சு பதவியைத் தந்தால் ஐதேகவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களோடு வரத் தயார் என மைத்ரி மற்றும் பசிலிடம் ரவி தெரிவித்திருந்தார். பசில் மற்றும் ரவியின் நட்பு நெடுங்கால உறவாகும். ரவி கருணாநாயக்க 2007ம் ஆண்டு கெலியன் முதலீட்டு ஊழலில் சிக்கிக் கொண்ட போது அஜித் கப்ராலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பசில், ரவியை காப்பாற்றினார். அந்த நன்றிக் கடனாக உருவான நட்பு அரசியல் குரோதங்களைத் தாண்டி தொடர்ந்து வந்தது. அதன்பின் ரவி கருணாநாயக்கவுக்கு சொந்தமாக டார்லி வீதியில் இருந்த பழைய கட்டிடத்தை 660 மிலியன் ரூபாயில் திருத்தியமைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கட்டிடமாக பசில் பாவிக்கவும் தொடங்கினார். தவிர சஜித் மற்றும் சஜித்தின் மனைவியும் , ரிசாட் பதியுதீனும் கூட தன்னோடு இணைவார்கள் என்ற நம்பிக்கை பசிலிடம் இருந்தது. ரிசாட் வந்து விட்டால் , பின்னர் ரவூப் ஹகீமும் அந்த அலையோடு இணைவார் என பசில் எண்ணியிருந்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற கேம் நகர்வுகள் பசிலுக்கு அத்துப்படி என ராஜபக்சக்களும், சிரிசேனாக்களும் ( மைத்ரி மற்றும் டட்லி) நம்பினார்கள். இதனியடையே மைத்ரியிடம் ஒரு துருப்பு சீட்டாக சஜித் பிரேமதாச இருப்பதாக மைத்ரி பெரு நம்பிக்கையோடு இருந்தார். அடிக்கடி பெஜட் வீதியில் அமைந்திருந்த ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இரவு உணவு விருந்துகளில் சஜித் பிரேமதாச , சஜித்தின் மனைவி மற்றும் ஹேமா பிரேமதாச (பிரேமதாசவின் மனைவி /சஜித்தின் தாய் ) ஆகியோர் வந்து போவது வழமையான ஒரு நிகழ்வாக இருந்தது. இது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சஜித்தின் பின் பலமாக மைத்ரியின் பிரசார இயந்திரமாக செயல்பட்ட கிளிமகராசாவின் சிரச (சக்தி/ newsfirst) மற்றும் டிரான் அலசின் மவ்பிம தினசரியும் இருந்தன. டிரான் அலசின் மவ்பிம , ஐதேகவின் மங்கள கம்பெரலியவின் நாயகனாக சஜித்தையே தூக்கி வைத்து புகழத் தொடங்கியிருந்தது. அதன் வீரன் சஜித் என்றே தலைப்புகள் வெளியாகின. அதோடு கடந்த 6 மாதங்களாக கம் உதாவ எனும் நிகழ்ச்சி நிரலுக்காக, 2000 மிலியன் ரூபாய் பணத்தை ஜனாதிபதி சிரிசேனவின் பணிப்பின் பேரில் பெற , மங்கள சமரவீர இடமளித்தார். சிரிசேனவின் பிபிதெமு பொலன்னறுவை நீர் வீழ்ச்சி திட்டத்தை திறந்து வைக்கும் போதும் சிரிசேன , சஜித்துக்கு முதன்மைளித்தார். சஜித் அந்நிகழ்வில் சிரிசேனவுக்கு நிகரான கௌரவத்தோடு மதிப்பளிக்கப்பட்டார். தன் தந்தையைப் போலவே ஏழை மக்களுக்காக உதவுவதில், மைத்ரி முன்னின்று உழைக்கிறார் என சஜித் தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார். மேடைகளில் அதிகமாக ரணிலை விட, மைத்ரியையே சஜித் புகழ்ந்து வந்தார். அதேபோல ஐதேகவினர் மைத்ரியை வசைபாடும் போது, அவர்களது கருத்துகளை எதிர்த்து மைத்ரி சார்பாக பேசி வந்தார். சஜித் - மைத்ரி இருவரிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக, ஐதேவின் ரணில் இல்லாத , சஜித்தை பிரதமராக்கும் ஒரு பிம்பத்தை திரை மறைவில் மைத்ரி உருவாக்கி வந்தார். ரணிலை பதவி விலக்கிய தின இரவில் , ரணில் காலியில் உள்ள உல்லாச பயண விடுதியொன்றில் வார விடுமுறையைக் கழித்துக் கொண்டு இருந்தார். வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்னாயக்கவும் ரணிலோடு அப்போது உரையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போதுதான் ரணிலை பதவியை விட்டு மைத்ரி அகற்றிய செய்தியை கேள்விப்பட்டனர். செய்தியறிந்ததும் இரண்டாம் கட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு வரத் தொடங்கினர். அப்போது இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்போதே முக்கியமான ஐதேகவினர் அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தனர். இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் , அத்தனை கட்சிக்காரர்களும் அலரி மாளிகையை நோக்கி குழுமிய போதும் பிரதித் தலைவரான சஜித் மற்றும் உப தலைவரான ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வருகை தராமையாகும். சஜித் அம்பாந்தோட்டையில் இருப்பதாக தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் சஜித் அந்நேரம் மைத்ரியின் ஜனாதிபதி மாளிகையில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. சஜித் மைத்ரியை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததான விபரங்கள் பின்னர் தெரியவந்தன. ரவி கருணாநாயக்கவோ , பசில் மற்றும் மைத்ரியை மாறி மாறி சந்தித்து தனக்கு நிதியமைச்சை அல்லது முதலீட்டு ஊக்குவிப்பு அல்லது சுற்றுலா அல்லது மெகாபோலிஸ் அமைச்சுகளில் ஒன்றைத் தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார். அன்றைய இரவு ரணிலோடு ஹரின் பெர்னாண்டோ,அஜித் பி. பெரேரா, நளின் பண்டார,முஜிபூர் ரகுமான், ருவான் விஜேவர்த்தன, அகில விராஜ், மங்கள சமரவீர, ராஜித சேனாரட்னே, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த சிலருமே அலரி மாளிகையில் இருந்தனர். 27ம் திகதி ரணிலை அலரி மாளிகையை விட்டு துரத்தப் போவதாக விமல் வீரவங்ச சூழுரைத்த பின்னர்தான் , அங்கிருந்தோர் வெளியேறுவதில்லை என முடிவுக்கு வந்தனர். அதற்கு எதிராக முகம் கொடுப்பதென்றும் தூதுவராலயங்களினூடாக சர்வதேசத்துக்கு தெரிவிப்பதென்றும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதென்றும் முடிவுக்கு வந்தனர். அன்றே பிரதமர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து, சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் கையெழுத்துகள் வாங்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐதேகவின் பலவீனம் எந்த அளவு என்றால்? அந்த காரியத்தை நிறைவேற்ற விஜேதாச ராஜபக்சவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்கள். அன்று இரவு மட்டும் அங்கிருந்த விஜேதாச ராஜபக்ச, அடுத்த நாள் முதல் தனக்கு உடல் நலமில்லை என வீட்டில் தங்கி வஜிர அபேவர்தனவுடன், ஐதேகவுக்கு எதிரான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். பின்னர் விஜேதாச ராஜபக்சவின் சத்தியக் கடதாசிக்கான கையெழுத்தை தயா கமகேயும் அவரது மனைவியும் அவரது வீட்டுக்குச் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்கள். அப்படி கையெழுத்திட்ட விஜேதாச ராஜபக்ச ,அடுத்த நாளே மகிந்த அரசியல் ஒரு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 27ம் திகதி காலையில் ஜனாதிபதி மைத்ரி பிரதமரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்காவை பதவி நீக்கம் செய்திருந்தார். அவருக்கு பதிலாக அமரசேகர என்பவரை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரணில் அமரசேகரவை அழைத்து அலரி மாளிகையினதும் பிரதமர் காரியாலயத்தினதும் சாவிகளைக் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்தார். அவரது அந்த முடிவை சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அஜித் பி. பெரேரா மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து தடுத்தார்கள். அங்கு குழுமியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வெல்லும் வரை எவரும் அலரி மாளிகையை விட்டு அகல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர் அலரி மாளிகையின் நடைமுறைகளை கையாழ்வது குறித்து சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன சில கமிட்டிகள் நியமித்தார்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னேடுப்பதற்கு சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அகில காரியவசம் ஆகியோர் முன்வந்தனர். அலரி மாளிகையின் அடிப்படை தேவைகளை கவனிப்பது, சாகல ரத்னாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேசத்துக்கான பரப்புரைகளை கொண்டு செல்லும் பொறுப்பு, மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கரு ஜயசூரிய தலைமையின் மூலமே சர்வதேசத்துக்கு அதிக விடயங்கள் பகிரப்பட்டன. இந்த நேரத்தில் ஐதேகவின் நவீன திசாநாயக்க , அர்ஜூன ரணதுங்க ஆகியோர் உட்பட பலர் வெளிநாடு சென்றிருந்தனர். 27ம் திகதி அலரி மாளிகைக்கு வந்த சஜித்தும், துலாஞ்சலியும் சுற்றி வளைத்து நிலமைகளை அவதானித்தனர். அதன் பின் தலை முடி வெட்டப் போவதாக , சஜித் லக்ஸ்மன் கிரியேல்லவிடம் சொல்லி விட்டு வெளியேறினார். அந்நேரம் துலாஞ்சலியை அங்கு இருக்குமாறு சஜித் விட்டுச் சென்றார். அன்று முதல் இரு நாட்கள் தங்கியிருந்த துலாஞ்சலி முக்கியமான சந்திப்புகளில் கலந்து கெண்டார். அதிகமாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் , தனது மொபைல் போனில் ஒளிப்பதிவு செய்த துலாஞ்சலி, ரொஸ்மிட் பிளேசிலுள்ள டிரான் அலசின் காரியாலத்துக்கு அனுப்பினார். அது எப்படியோ கசிய வரவே , ஆள் இல்லாமல் தலை மறைவானார். அக்டோபர் 26 முதல் 29 வரை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் எடுத்ததோடு, விசேடமாக நிதியமைச்சையும் மகிந்த கையிலெடுத்துக் கொண்டார். அதன்பின் தனது கனவு நியைவேறாது என உணர்ந்த ரவி கருணாநாயக்க அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். தயாசிரி ஜயசேகர மற்றும் சிலர், ரவி கருணாநாயக்கவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என கடுமையாக இருந்தனர். அப்படியான எதிர்ப்புக்கு பின்னரே, ரவி கருணாநாயக்க , திரும்பிஅலரி மாளிகைக்கு வந்தார். அக்டோபர் 30ம் திகதி கொள்ளுப்பிட்டியில் நடந்த ஐதேகவின் ஆர்ப்பாட்டத்துக்கு கூட , கொழும்பு வடக்கிலிருந்து ஒருவரையும் கலந்து கொள்ளாதபடி ரவி கருணாநாயக்க செயல்பட்டார். ஆனால் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துகாக மக்களை திரட்டிக் கொண்டு வந்த பெருமை , முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் மற்றும் கித்சிரி ராசபக்ச ஆகியோரையே சாரும். அன்றைய அத்தனை பலமும் அவர்களுடையதாகும். அம்பாந்தோட்டை பகுதியிலிருந்தும் , எவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற விடாது சஜித் பார்த்துக் கொண்டார். இப்படி பிரச்சனைகள் உக்கிரமான போது, சஜித், டிரான் அலசின் ரொஸ்மிட் பிளேசிலுள்ள காரியாலயத்துக்கும் , கிளி மகராசாவின் பேபுறூக் காரியாலயத்துக்கும் , பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கும் போய் வந்து கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டத்துக்காக மக்கள் நிறைந்து வழிந்த பகல் 2 மணியளவில், சஜித் மற்றும் ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வந்து , மக்கள் முன் கைகளை உயர்த்தி முன் வரிசையில் நின்று கொண்டு ஐதேக ஆதரவாளர்களை ஏமாற்றினர்கள். அப்பாவிகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் அன்று அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவை, அகில மற்றும் சாகல ரணிலிடம் சொன்ன போது, ரணில் எதிர்கால அரசில், மீண்டும் நிதியமைச்சை ரவிக்கு தருவதாக சொன்னார். இதனால் மங்கள பின் தள்ளப்படதாக பலர் உணர்ந்தார்கள். பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும், ஊடகங்களிலும், எந்த பலமும் இல்லாத நிலையை கொண்ட ஐதேக, ராஜபக்சவினரது தாக்குதலுக்கு உள்ளாகி மைத்ரியின் அதிகாரத்தை வெல்வதற்கு முகம் கொடுத்தவர்கள் என்றால் , அவர்கள் இளம் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். விசேடமாக ரவூப் ஹகீம் மற்றும் ரிசாட் பதியுதீன் போன்றவர்களை , தக்க வைத்துக் கொள்ள , சூரா கவுன்சில் என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பு பெரும் பங்கு வகித்தது. அவர்கள் மெக்காவுக்கு பயணமானதும் அவர்களது அழுத்தத்தின் காரணமேயாகும். சபாநாயகர் கேமை கையிலெடுத்தார். ஆர்ப்பாட்டத்தின் பலத்தை பார்த்த மகிந்த அஞ்சத் தொடங்கினார். தன்னால் பெரும்பான்மையை பெற முடியாது என உணரத் தொடங்கினார். ரணிலோடு டீல் ஒன்றை செய்ய கோட்டாபயவை அனுப்பினார். ஆரம்பத்தில் இசினி விக்ரமசிங்க மூலம் திலித் ஜயவீர ( தெரண உரிமையாளர்) , ரணிலை சந்தித்தார். அதன் பின்னர் கோட்டாபய ரணிலை சந்தித்தார். அதன்பின் ரணில் தொடர்ந்து அலரி மாளிகையில் தங்குவதற்கும் , மகிந்த பிரதமராக தொடர்வதும் என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என ரணில் தெரிவித்தார். அதைக் கேட்டு பலர் குமுறி எழுந்தனர். சிலர் எக்காளமிட்டு சிரித்தனர். எது எப்படியோ சபாநாயகர் இவை எதையும் உணராத நிலையில் உள்ளக - வெளிநாட்டு அமைப்புகளோடும், லக்ஸ்மன் கிரியல்ல, சம்பிக்க ரணவக்க , ரரஜித்த சேனாரத்ன, ரவூப் ஹகீம், ரிசாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசனோடு ஒரு புறமாகவும் , அடுத்த பக்கத்தில் தமிழ் கூட்டமைப்போடும், ஜேவீபீயோடும் இணைந்து , பாராளுமன்றத்தில் ராஜபக்ச ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்பட வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு வெளிநாட்டு தூதுவர்களை பாராளுமன்றத்துக்கு வரச் செய்தும், தனியாக சந்தித்தும் , சர்வதேச ரீதியாக மகிந்தவை தனிமைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். அதற்குள் மூக்கை நுழைக்க முற்பட்ட ரணிலை, வாய் திறக்க வேண்டாம் எனக் கடுமையானார். ரணில தாண்டி செயல்பாடுகள் நகரத் தொடங்கியிருந்தன. மெது மெதுவாக சபாநாயகர் , சிரிசேன மற்றும் மகிந்தவை அரசியலமைப்பினூடாக இறுக்க சாமர்த்தயமானார். கடைசியில் , நவம்பர் 2ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டப் போவதாகத் தெரிவித்தார். அதன்போது 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த தரப்புக்கு எதிராக இருப்பதை அறிவுறுத்தினார். அதைக் கேட்டு கலங்கிப் போன மகிந்தவின் சூழ்ச்சி நீதி ஆலோசகர்களான , டிரிபல் சில்வாக்கள் என அழைக்கப்படும் சரத் சில்வா, மனோகர த சில்வா மற்றும் யூ. ஆர் . சில்வா பாராளுமன்றத்தை சட்டத்துக்கு முரணான விதத்தில் நீடிக்கவும் , கடைசியாக பாராளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையான சட்ட ஓட்டைகளை காட்டி நடைமுறைப்படுத்த முயன்றனர். இதேவேளை கரு ஜயசூரியவின் முயற்சியின் பலனாக, அமெரிக்க தூதுவராலயம் கோட்டா - பசில் ஆகியோரின் சொத்துகளையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கப் போவதாக தெரிவித்தனர். அதைக் கேட்ட பசில் - கோட்டா இருவரும் ஆடிப் போயினர். இதுபோல ரசியாவின் பூட்டினின் நண்பர்களது சொத்துகளையும், வங்கி கணக்குகளையும் , அமெரிக்கா அண்மையில் முடக்கி உள்ளது. அதோடு கோட்டாவின் தேசாபிமான பேச்சுக்கள் நின்று போயின. வியத்மக , எலிய ஆகிய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. பசில் மெதுவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து, மொட்டு கட்சியை பலமாக்க ஆலோசனை வழங்கினார். தேவைப்படும் பட்சத்தில் ஐதேவுடன் இணைந்து மைத்ரிக்கு எதிராக , கண்டன தீர்மானம் ஒன்றையும் கொண்டு வர ஆலோசனை செய்தார். பாராளுமன்றத்தை கலைப்பதாக தெரிவித்ததோடு, வெளிநாடுகளில் வாழும் பிரசைகளின் கடும் கண்டனங்கள் பரவலாக வெளியாகத் தொடங்கியது. தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய, மகிந்தவின் பழைய நண்பர். அவரும் பசிலின் தாளத்துக்கு ஆடத் தொடங்கினார். ஐதேகவினர் அவரை சந்தித்த போது தான், பழைய கொமியூனிஸ்ட்வாதி என்றார். ஆனாலும் பாராளுமன்றத்தை கலைப்பதிலும் புதிய தேர்தலை கொண்டு வருவதற்குமான கெசட்டை தயாரிப்பதிலும் மகிந்த தேசப்பிரிய திரை மறைவில் கடும் பணியொன்றை செய்தார். எது எப்படியோ சிவில் அமைப்புகளும் சபாநாயரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் இருந்த ஏனைய இரு அங்கத்தவர்களுமான ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அனில் ஆபசேகர ஆகியோரின் பிடிக்குள் இறுகிப் போனார். அதனால் உடனடி தேர்தல் ஒன்றை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ராஜன் ஹூல் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கு எதிராக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவை அனைத்தும் உச்ச நீதிபதிகளுக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்தது. உச்ச நீதிமன்ற விசாரணை 12ம் திகதி ஆரம்பமானது. பெரும்பாலும் 15ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என ஐதேவினரால் நம்பப்பட்டது. கடும் சட்ட விவாதங்கள் நடந்தன. 13ம் திகதி இடைக்கால தடையுத்தரவு கிடைத்தால் 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதியின் கெசட் அறிவிப்பு செல்லுபடியாகும் என்பது மகிந்த எதிர்பாளர்களது , எதிர்பார்ப்பாக இருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்ற அடுத்து கட்ட திட்டவாக்கங்களில் ஈடுபட்டனர். 13ம் திகதி தீர்ப்புசாதகமானால், 14ம் திகதி பாராளுமன்றம் செல்வதென்றும் இடைக்கால உத்தரவின் போது, மகிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 13ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதெனக் கனவோடு இருந்த பசில் தரப்புக்கு , உச்ச நீதியரசர் நளின் பெரேரா உட்பட ஏனை இருவரதும் கருத்துக்கமைய கொடுக்கப்பட்ட தீர்ப்பு பேயறையாக வீழ்ந்தது. பாராளுமன்றம் 7ம் திகதி முதல் உயிர் பெற்றதோடு, பாராளுமன்றத்தை மீண்டும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் , ஒரு நாளாவது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனிடையே சர்வதேச அழுத்தங்கள் மைத்ரியின் குரல்வளையை இறுக்கத் தொடங்கியது. தனக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர, ரணில் - மகிந்த தரப்பினர் ஈடுபடுவதாக மைத்ரி உணரவும் தொடங்கினார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நீர்க்கச் செய்து மொட்டு கட்சியை பலமாக்கிய பசிலின் முயற்சிக்கு பின், மைத்ரியின், ஜனாதிபதி கனவு இல்லாமலே போனது. எனவே 13ம் திகதி பாராளுமன்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருந்த, அவரது முயற்சியை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டடிய போது மகிந்தவின் அனைத்து எதிர்பார்ப்பும் தினேஸ் கையிலிருந்தது. தினேசுக்கு தனிப்பட்ட ரீதியாக ஒரு கறை இருக்கிறது. 2005 - 2010 வரையான காலப்பகுதியில், நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 15 மிலியன் பணத்தைக் கையாடிய பைலை , மகிந்த கையில் வைத்துக் கொண்டு, தினேஸிடம் பாராளுமன்றத்தை சிதைக்கும் சதியை செயல்படுத்த தள்ளிவிட்டார். ஆனால் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒரு சிங்கத்தைப் போல சபையில் செயல்பட்டதோடு, ஐதேகவின் டீல்களுக்கு அடிமையாகாத இளம் உறுப்பினர்கள் அவருக்கு அன்று கவசமானார்கள். அதன் பிரதிபலனாக அனுரகுமார திசாநாயக்க கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேணைக்கு 122 - 0 என வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முன் முகம் கொடுக்க முடியாத, மகிந்த மற்றும் நாமல் பாராளுமன்றத்தை விட்டு பின் கதவால் வெளியேறினர். இருப்பினும் நீதிக்கு தலை வணங்காது பேராசையோடு தனக்கு கிடைத்த பிரதமர் பதவியிலிருந்து விலக மகிந்த இன்னமும் தயாராக இல்லை. அதிரடிப் படையினரை தமது அமைச்சுகளுக்கு அனுப்பி , பாராளுமன்றத்தில் பிரதமராக தொடர்ந்து நிற்பதென 14ம் திகதி முடிவு செய்தார். சிங்களத்தில் : பீ. எம். சந்திரகீர்த்தி தமிழில் : அஜீவன் தொடரும் .........

Monday, 19 November 2018


அவசியம் வாசிக்கவும்,முடிந்தால் பகிரவும் என் உள்ளம் குமுறி அழுத தருணம் நான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு(தெல்லிப்பளை) கடந்த சில நாட்களாக நம் திருமலை மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும்,கவலையையும் நிறைத்தது இன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன் இங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட திருமலை மண்ணின் இளைஞர்கள் இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது இவர்கள் பாவித்த போதைப்பொருள்கள் கஞ்சா,குளிசைகள்,ஒடிக்கலோன்,ஒருவகை ஜெல் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம்,இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை ஆனால் அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எதிர்காலமும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும்,இறைவனிடத்தில் என் கடமைக்காகவுமே இதனை கேட்டுக்கொள்கிறேன். சாராயத்தைவிட பல மடங்கு மிக மோசமானதே இந்த கஞ்சாவும்,குளிசைகள் பாவனையும் இதன் விளைவு குருகிய காலங்களில் உங்கள் மூளையை மந்த நிலைக்கோ,மனநோயாளிகளாகவோ மாற்றும் என்பது நிச்சயம் உங்களைப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதன் முகவர்களும்,விற்பனையாளர்களும் இதன் மூலம் உழைக்கும் பணம் உங்கள் பரம்பரையை நிச்சயம் நாசமாக்கும்,இப்படி பல இளைஞர்களை காவுகொள்ளும் ஒரு தொழில் தேவைதானா? ஒரு சகோதரனாக உங்களிடம் வேண்டுகிறேன்,உங்கள் காலில் விழுந்தேனும் உங்களை கேட்க விரும்புகிறேன் அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த தொழிலை விடுவது மட்டுமல்லாது இவ்வளவு காலம் செய்த தவறுகளுக்காக நீங்களே இதனை தடுக்க முன் வந்து இளைஞர்களையும் எங்கள் எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்போம்j

Saturday, 17 November 2018

இலங்கையின் செய்திகளை வேகமாக பெற இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள், செய்திகளை படியுங்கள் Happy brithday ROSHEN 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்


Happy brithday 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்

Share share share👉 💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...


💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...
💊 முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும் 💊 அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும் ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 💊 ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..காய்ச்சலோட போக்க பாருங்க.. 💊 முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 💊 ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 💊 முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 💊 அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும் 💊 ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 💊 ரூல் நம்பர் ஒன்னு டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும் 💊 ரூல் நம்பர் டூ நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி , ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும். 💊 ரூல் நம்பர் 3 இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுகாகாம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 💊 இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கு போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்💊 பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Wednesday, 7 November 2018

மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன்.


மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன். நானும் எனது கட்சியும், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமருக்கு ஆதரவு என்று வரும் செய்திகளை நான் மறுக்க விரும்புகின்றேன் . பாராளுமன்ற பெரும்பான்மையை புதிய பிரதமர் நிரூபிக்கும்வரை, இந்த பதவி நியமனமானது பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது என்பதே எங்களது தற்போதைய நிலைப்பாடு. #ரஊப்_ஹக்கீம்

Monday, 5 November 2018

உலகின் தலைசிறந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரும், 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இலங்கை வெல்ல காரணமாக இருந்தவரும் ஆன நட்சத்திர சுழல் வீரருமான ரங்கன ஹேரத் நாளைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.


2014 T20 உலகக் கிண்ணம் - இலங்கை அணி செமி பைனல் செல்ல நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலை. இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களையே பெற்றது. அப்போதைய அதிரடி வீரர்களான பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு இது பக்கோடா சாப்பிடுவது போன்ற ஒரு வெற்றி இலக்கு. இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்கள் பெற்ற உடனேயே தோல்வியை தழுவி உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறும் என்றே பலரும் நினைத்தனர். எனினும், இந்த நினைப்புக்கள் அனைத்தினையும் தவிடுபொடியாக்கினான் ரங்கன ஹேரத், தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் எடுத்த ரங்கன ஹேரத் நியூசிலாந்து அணியினை வெறும் 60 ஓட்டங்களுக்குள் மடக்க உதவினார். குறித்த போட்டியில் வெறும் 3 ஓட்டங்களை விட்டுத்தந்து ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரங்கன ஹேரத் கைப்பற்றிய இந்த விக்கெட்டுக்களாலும், தோல்வியடைய வேண்டிய குறித்த நியூசிலாந்து போட்டியில் வென்றதன் காரணமாகவே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்றது. எமக்கு இப்படியான ஒரு மறக்க முடியாத வெற்றியினைப் பெற்றுத் தந்த சாதனைக் கதாநாயகன் நாளை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றான். நன்றி தலைவா!

நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!


நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!

Sunday, 4 November 2018

#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா


#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !?????


AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி ! உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் ? இல்லை இவையில்லாம் வேற யார் ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கப்பட்டதற்க்கு ! ! ! A.R ரஹ்மான் கூறிய பதில்:- இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் ! ! சுதந்திரத்தை எழுதி கொடுத்த பின்ஆங்கிலேய அதிகாரிசுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க ஆசைபடுகிறீர்கள் என கேட்ட போது, காந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : - அரேபி தேசத்தில் ஜனாதிபதி உமர் என்பவரின் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன். கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, கெஜிர்வால் அழித்த பதில் : - உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன். இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் ? உமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் , அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். உமர் அவர்கள் ஆட்சிகாலத்தில் பாலஸ்தின் யுதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீன்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர் அவர்களானார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர். இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துனையாக ஆட்சியின் பனியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தினம் புறப்பட்டு சென்றார். சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர் அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ? உமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பனியாளிடம் ஓரு குறிபிட்ட அளவை சொல்லி அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன், பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள். உமர் அவர்களே ஒட்டகத்தில் முழவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்க முடியாது இருந்தும் சம உரீமையை பேணினார். அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தின எல்லையை நெருங்கிவிட்டார்கள். பாலஸ்தின எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள். அவர்களை முஸ்ஸீம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார், உமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது, உமர் அவர்கள் ஒட்டகத்தை பனியாளிடம் தந்தார். பனியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார். மேலும் மக்கள் கானும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார். ஆனால் உமர் அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன். அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்து கொல் என்று பனியாள் அமர்ந்திருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டுபாலஸ்தினத்தில் புகுந்தார். மக்கள் அனைவரும் பனியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சியி ஓட்டகத்தில்இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள். மக்கள் பனியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பனியாளின் சட்டையில் மூன்று கிளிச்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிச்சல்கள், அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பனியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள். அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பனியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார். அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம். மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வருகீறார் எனக் கூறினார். அப்போது அங்கிருந்த மக்கள் உமரின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம் என்றனர். தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக பனி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள்....

குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ...


குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ... கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவுதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்டது சவுதி விமானம். இதில் ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று பயணித்தது. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இது விமானிக்கு தெறியபடுத்தவே தனது விமனத்தின் பயணபாதையை உடனடியாக மாற்றி விமானத்தை அவர் மஸ்கட் விமான நிலையத்தில் உடனடியாக தரை இறக்கி அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை அல்லாஹ்வின் உதவையை கொண்டு காப்பாற்றினார். மஸ்கட்டில் அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யபட்டது. இப்போது அந்த குழந்தை சீரான நிலைக்கு வந்த பிறகு விமானம் மறுபடியும் ரியாத்தை நோக்கி பயணித்தது. சவுதி விமானியின் இந்த மனிதநேய பணி அனைத்து பயணிகளின் ஆதரவையும் பெற்றது.

Saturday, 3 November 2018

முஹம்மது (ஸல்) அவர்கள்..


முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்தவர்கள். தன்னுடைய கடைசி இருபத்து மூன்று ஆண்டு காலத்தின் ஒவ்வொரு துளியிலும் மனித சமூகத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள். அதன் ஒவ்வொரு இழையிலும் சமுதாயத்திற்கான செய்திகளை விட்டுச் சென்றவர்கள். இறுதியாக என்னை பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் வெற்றிய்டைவீர்கள் என்று தைரியமாக்ச் சொன்னவர்கள். அவர்களைப் போல இந்த உலகிற்கு தன்னைப் பற்றிய தகவல்களை விட்டுச்சென்றர்வர்கள் யாருமில்லை. அவர்கள் சுய வரலாறு எழுதவில்லை. அவர்களது வரலாறு சுயமாகவே எழுந்து நிற்கிறது. அவர்களது காலத்தில் திருக்குர்ஆன் எழுதிப் பாதுக்காக்கப் பட்டு வந்த்து. அதில் தன்னுடைய வார்த்தைகள் கலந்து விடக்கூடாது என்பதற்காக “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டாம்” என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். அவருகளுடை வார்த்தைகளோ வரலாற்றுக் சொல்லப்பட்ட உத்தரவுகளாக பன்னூறு தலைமுறைகளைத் தாண்டியும் புது மெருகு குலையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன. அவரகளது நிழற்படம் எதுவும் இல்லை. கற்பனையாகக் கூட அவருகளுடைய தோற்றம் உருவகப்படுத்தப் படுத்தப்ப்டவில்லை. சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுகும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் புத்தருக்கும் ஏசுவுக்கும் கூட உருவங்கள் கற்பிக்கப் பட்டுவிட்டன. மூலவர்கள் இனி எழுந்து வந்தால் கூட இந்த முகமூடிகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவு அந்தப் போலி முகங்கள் மக்கள் மனதில் படிந்துவிட்டன. உலகின் மிக அதிக செல்வாக்கு கொண்ட முஹம்மது (ஸல்) என்றஅந்த பிரம்மாண்ட்த் தலைவரை அடையாளப்படுத்த ஒரு நிழற்படமோ, சித்திரமோ, இல்லை. உலகின் மாபெரிய அதிசயம் இது. ஒவியர்களோ சித்திரக்காரர்களோ அவர்கள் காலத்தில் இல்லாமலில்லை. சித்திரங்களும் ஓவியங்களும்தான் முந்தைய இறை ஒழுக்கமுள்ள சமுதாயத்தை சீரழித்தன என்பதை உறுதியாக அவர்கள் உணர்ந்தார்கள். சித்திரங்களையும் சிலைகளையும் கண்டு அகமழிந்து போகிற மக்கள் அதைப் பிடித்துக் கொண்டு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கைநழுவ விட்டுவதை தெளிவாக அறிந்தார்கள். அந்த விபத்து இறுதித்தூதை சுமந்து செல்லும் சமுதாயத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். அதனால சித்திரங்களை அவர்கள் எதிர்த்தார்கள். உலகின் இறுதித் துளிவரைக்கும் தனது கருத்துக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்த அவரகளது காலம் கடந்து செல்லும் ஒரு இலட்சியப் பயணத்திகு தனது சித்திரம் தேவை என்று கருதவில்லை. சிந்தனையும் வழிகாட்டுதலும் மட்டுமே போதும் என்று நினைத்தார்கள் அவரகளது தோழர்கள் அவரது உண்மையான அடையாளத்தை உன்னதமாக பாதுகாத்தார்கள். அவர்களை அடையாளப்படுத்த எந்தப் வரைபடமும் தேவையில்லை எனும் அளவு அவர்களைப் பற்றி அணுவிலும் அணுவான தகவல்களை அவரகளது தோழர்கள் சேகரித்துப் பராமரித்துப் பாதுகாத்துப் பரவச்செய்தனர். உலகின் எந்த அதி நவீனக் காமிராவும் இவ்வளவு துல்லியமாக ஒரு மனிதரை படம் பிடிக்க முடியாது.

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா? அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!! தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.. இன்றும் பல உயிர்களின் நினைவுகளில் லிங்கன்

Friday, 2 November 2018

ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.!


ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.! – சபைக்குள் நெருக்கடி ஏற்பட்டால் தோள்கொடுக்க முடிவு அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவே தற்போது சட்டபூர்வமான பிரதமராக இருக்கின்றார். அவரையே எமது கட்சி பிரதமராக ஏற்றுள்ளது” – என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. M.waseem.t.m

Thursday, 1 November 2018

ஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம்கள் பெற வேண்டியே பாடமும்...


*W.A.M. MEDIA* *ஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம்கள் பெற வேண்டியே பாடமும்...* *ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் வாசிக்க வேண்டியது.* அது 1609 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி... ஸ்பெயினின் கட்டலோன் பகுதியில் அமைச்சரவையை கூட்டுகிறார் மன்னர் மூன்றாவது பிலிப். 800 வருடங்களுக்கு மேலாக ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் வேளியேற வேண்டும் அல்லது அங்கேயே இருக்க வேண்டுமானால் கிருஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்கிற அரச கட்டளை பிறப்பிக்கப்படுகிறது . அமைச்சர் அவையில் பலத்த கரகோஷம். மன்னர் நல்ல முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்தோர் பேசிக்கொள்ளுகிறார்கள். காட்டுத்தீயாக செய்தி அப்போதைய ஸ்பெய்ன் முழுவதுமே பரவுகிறது. நேற்றுவரை தேசிய கீதம் பாடி,நமது நாடு நாம் கட்டலோனியர்கள் என்கிற தேசிய வாத பெருமை கொண்டிருந்த முஸ்லிம்கள், 'நாம் பிறந்த இதே மண்ணிலே இருந்து வெளியேற்றப்பட போகிறோமா ?...' என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் . 1609 தொடக்கம் 1614 வரை 10 இலட்சத்த்துக்கும் அதிகமான பரம்பரையின் எண்ணிக்கை தெரியாமலே வாழ்ந்த முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் முற்றுமுழுதாக அங்கிருந்து துடைத்து எறியப்பட்டனர். உள்ளே இஸ்லாத்தை பின்பற்றி வெளியே கிருஸ்தவர்களாக வேடம் போட நினைத்த அப்போதைய ஸ்பெயினில் இருந்த 40 வீதமான முஸ்லிம்கள் ,கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு நிரந்தர கிருஸ்தர்களாக மதம் மாற்றப்பட்டனர். அது நடந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே.. இப்போதைய ஸ்பெயின் அப்போது பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. வெலன்சியா பகுதியில் 1502 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆரம்பமானது என்று வரலாற்று சான்றுகள் கூறுகிற போதும் பொதுவாக நோக்குகின்ற போது லைபீரியா தீபகற்பத்தில் இருந்து கடைசியாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 1614 என்றே காண முடிகின்றது. எது எப்படியோ ? 800 வருடங்களுக்கும் மேலாக ஓரு நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முடியுமானால் பல நூறு வருடங்கள் வாழ்ந்து வருகிற முஸ்லிம்கள் நிலை என்ன..? ஸ்பெய்ன் முஸ்லீம்களின் இந்த வெளியேற்றம் ஓரு இரு நாட்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கவோ திட்டமிட்டோ பட்டிருக்கவில்லை. நீண்ட காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டத்தை விளைவே அவர்களின் வெளியேற்றம். காலத்துக்கு காலம் முஸ்லிம்களுடன் செய்து கொள்ளப்பட்ட பல உடன்படிக்கைகள் மீறப்பட்டன ; முஸ்லீம்களுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற நூல்கள் , நூல்நிலையங்கள் கிரனடா உட்பட பல பகுதிகளில் எரித்துச் சாம்பலைக்கப்பட்டன. 1567 ஆம் ஆண்டில் மன்னர் இரண்டாவது பிலிப் அரபி மொழியை சட்ட விரோதமாக பிரகடனப்படுத்தினார் ; இஸ்லாம் மதத்தை தடை செய்தார் ;முஸ்லீம் கலாசாரத்துக்கு மரபுகளுக்கு தடை விதித்தார் ;இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட்டன ; முஸ்லீம்களின் ஆடைகளை பகிரங்கமாக அணிவது தடை செய்யப்பட்டது. இவை இடம்பெற்று வெறும் 50 ஆண்டுகளுக்குள் முஸ்லிம்கள் முழு லைபீரிய தீபகற்பத்திலும் இருந்து துடைத்து எறியப்பட்டிருந்தனர். முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவது என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல . நபிகள் நாயகம் (ஸல் ) பிறந்த மண்ணிலே இருந்து வெளியேறிய ஹிஜ்ரத்தை யாவரும் அறிந்ததே . சரி இப்போது சம காலத்துக்கு வருவோம் பர்மாவில் ,பலஸ்தீனத்தில் , சிரியாவில் , இலங்கையில் இன்று தொடர்கிறது வெளியேற்ற தொடர்கதை ... அந்தலூசில் நானூறு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம் ; பலஸ்தீனத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெளியேற்றம் ;மன்னாரில், யாழ்ப்பாணத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இதே வெளியேற்றம் ;பர்மாவில் பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற அதே வெளியேற்றம் ஏன் நாளை காத்தான் குடியிலோ அல்லது பேருவலையிலோ அல்லது அக்குரணையிலோ இடம் பெற முடியாது என்பதில் என்ன நிச்சயம் ? நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் இல்லை, மறுமைக்காக வாழ வந்தவர்கள். ஆனால் நமது நோக்கங்கள் தடம் பிறழும் போது மண்ணில், பொன்னில் ஆசைகள் அதிகரிக்கும் போது சொத்துக்களை குவிக்கிறோம். குவித்த சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு பொறுமை என்கிற பேரில் கோழையான விட்டுக்கொடுப்புகளை செய்கின்றோம் . இந்த விட்டுக்கொடுப்புகளுக்கு மார்க்கத்தை மாற்ற மார்க்க அறிஞர்களிடம் பத்வா கேட்டு பயணம் செய்கிறோம். ஆனால் நம்மை சுற்றுயுள்ள மரணத்தையும் சூழவுள்ள அந்நியர்களின் சதிகளையும் மறந்து விடுகிறோம் . அப்போதைய ஸ்பைனிலும் இதே பத்வாக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன . போராடுங்கள் என்கிற பத்வா வழங்கப்படாமல் பாதுகாப்பு பெறுவதற்காக பகிரங்கமாக பன்றி இறைச்சியை , மதுபானத்தை ,கிறிஸ்தவ உடைகளை உடுக்கலாம் என மார்க்க அறிஞர்களால் கூறப்பட்டிருந்தது ;பத்வாக்களை வழங்கப்பட்டிருந்தன. சம காலத்தில் ஐரோப்பாவில் , வட அமெரிக்காவில் வாழுகின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல தமது தாய் நாடு என்கிற தேசிய வாத வரட்டு பிடிவாதத்துடன் இலங்கை உட்பட முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் ஒன்றை மட்டும் உணர வேண்டும் ஸ்பெயினில் வெறும் 400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம் ஏன் உங்களுக்கும் இடம்பெற முடியாது ? இலங்கையிலே முஸ்லிம்கள் முதன்முதலில் குடியேறிய யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்கள் பல தடவைகள் வெளியேற்றப்பட்டனர் . ஒவ்வொரு முறையும் அவர்கள் கடந்த கால வெளியேற்ற நிஜத்தை மறந்தனர் . 1990 ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஓரு நாளுக்கு முன்னர் நீங்கள் நாளை வெளியற்றப்படுவீர்கள் என அவர்களிடம் கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் அதை நம்பி இருக்க மாட்டார்கள். இதே யதார்த்த சூழ்நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். நிச்சயம் இல்லாத இந்த உலகிலே ஏதுவும் நடக்கும் சாத்தியம் உள்ளது.விசேடமாக முஸ்லிம்களான நமக்கு பிற மதத்தவர்களில் நேரடி நண்பர்களாக இருப்பவர்களை விட மறைவில் விரோதிகளாக இருப்பவர்களே அதிகம் . எனவே இன்னொரு கட்டாய வெளியேற்றம் என்பது நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை. அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும் ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி ஐரோப்பிய நாடுகளிலும் சரி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நம்மை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் ஸ்பெயின் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறது. அதாவது அன்றைய ஸ்பெயினில் வெளியேற்றதுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரபி மொழி தடை ,மதரஸா தடை ,இஸ்லாமிய ஆடை தடை , இஸ்லாமிய கலாசார தடை போன்றன போன்றே சம காலத்தில் நுகர்வுப்பொருட்களில் ஹலால் முத்திரை இட தடை ,பாங்கு சொல்ல தடை ,பகிரங்கமாக பெண்கள் நிக்காப் அணிய தடை ,பள்ளிகள் கட்ட தடை ,மாடு அறுக்க தடை,உண்ணத்தடை தலாக் மற்றும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுவதில் தடை என தடை பட்டியல் தொடர்கின்றன. இது கதையல்ல கற்பனையான அச்சுறுத்தலும் அல்ல, இது விளித்தெழ வேண்டிய தருணம். கட்டாய வெளியேற்றதை கண்ணால் கண்டு அனுபவித்து அதன் பாடங்களை பெற்றவன் என்கிற அடிப்படையில் அவ்வாறான நிலைகள் ஏற்படும் போது அதன் பாதிப்புக்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை முன்கூட்டி எடுக்க முடியும் என்பதை இங்கே தருகிறேன். *1.இறைவனோடு உள்ள தொடர்பை அதிகரிப்பது ..* நமது அமல்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருமானங்களை ஹலாலானதாக ஆக்கி பாவங்களில் இருந்து நம்மை தூரமாக்கும் போது நமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். நாம் துன்பத்தில் இருக்கும் போது முதலில் உதவுவது அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வே. எனவே நமது உதவிக்கான முதல் தொடர்பே அல்லாஹ்வே . ஹராமான வருமானங்களை புசிக்கும் போது இக்கட்டான நிலையில் பிரார்த்தனைகள் எப்படி அங்கீகரிக்கப்படும் ? *2 . நமது சந்ததிகளை கற்பிப்பது ..* மார்க்க கல்வி இல்லாத அறிஞரும் கடலின் நடுவே பெய்கின்ற மழையும் சமம் .எனவே மார்க்க கல்வியுடன் சேர்த்து உலக கல்வி அறிவை ,மொழிகளை கற்பிப்பது காலத்தின் அவசியம் ஆகும்.வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து பெரும் பெரும் செல்வந்தர்கள் நடுத்தெருவுக்கு வந்த அதே வேளை, ஆசிரியர்கள் ,வைத்தியர்கள் போன்ற கல்வி சார் தொழிலில் இருந்தவர்கள் ஒப்பீட்டளவில் சிரமத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட யூதர்கள் சொத்துக்களை கொண்டு சென்று முன்னேறவில்லை மாறாக கற்ற கல்வி அறிவை கொண்டு பழைய நிலையை விட செல்வத்திலும் அறிவிலும் மேலான நிலைக்கு திரும்பினர். *3.ஓரே இடத்தில் அல்லது ஓரே நாட்டுக்குள் அபரிமிதமாக சொத்துக்களில் முதலீடு செய்வதை முஸ்லீம் செல்வந்தர்கள் தவிர்க்க வேண்டும் .* மலேசியா ,துருக்கி ,இந்தோனேசியா ,போன்ற முஸ்லீம் நாடுகளில் மற்றும் அரபு நாடுகளில் முதலீடுகளை பரவலாக்க வேண்டும் . யாழ்ப்பாண முஸ்லீம்களும் ஏன் அந்தலூசியா முஸ்லிம்களும் செய்த மிகப்பெரிய தவறு வெளி இடங்களில் முதலீட்டை தவிர்த்தது.யூதர்கள் இதே தவறை இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் செய்த போதும் அதன் பின்னர் படித்த பாடத்தில் தம்மைத்தாமே திருத்திக்கொண்டுள்ளனர்.முதலீடுகளை பன்முகப்படுத்தி சர்வதேச மயப்படுத்தி வருகின்றனர். *4. வெளியூர் அல்லது வெளிநாட்டு முஸ்லீம் தொடர்புக்களை அதிகரிப்பது .* யாழ்ப்பாண முஸ்லிம்கள் செய்த தவறும் இதுதான். யாழ்பாணத்துக்குள்ளேயே திருமண பந்தம் வைத்துக்கொள்ளுவதை பெருமையாக கருதினர். வெளியூர்களில் திருமணம் செய்து கொண்டவர்களை சிறுமையான கண்ணோட்டத்தில் 'ஊரில முடித்தவர் ' என்கிற வார்த்தையுடன் நோக்கினார்கள் . இரண்டு மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட போது வெளியுலக தொடர்புகள் இன்றி நிலைகுலைந்து போயிருந்தார். எனவே அரசியல் எல்லைகள் கடந்து முஸ்லீம்களுக்கு இடையே திருமண பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் கூட வெவ்வேறு கோத்திரத்தவர்களுடன் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். சம கால சமூகத்தில் உள்ள வெளிநாடுகளில் திருமணம் செய்கின்ற நேர் மறையான மனோநிலைமை மாற்றப்பட வேண்டும் . *5. தற்பாதுகாப்பு பயிற்சிகளின் அவசியம் உணர்த்தப்படல் வேண்டும்.* முஸ்லீம்களுக்கு தற்பாதுகாப்பு என்பது முக்கியமான விடயமாக மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் எத்தனை பேர் அதில் பயிற்சி பெறுகிறோம் எத்தனை பேரின் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புகிறோம் ?.குதிரை ஓட்டுதல் ,இலக்கு நோக்கி சுடுதல் ,நீச்சல் ஆகியன நபிகள் நாயகம் (ஸல் )அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் ஆகும். இவ்வாறான பயிற்சிகள் நம்மை வெளியேற்றத்தின் போதோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களில் இருந்தோ நம்மை பாதுகாக்க உதவுவதுடன் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. *6.ஒற்றுமையை வலுப்படுத்துதல் அவசியம் .* நமக்கிடையே உள்ள ஜமாத்து குரூப்பு பேதங்கள்,பிரதேச வாதம் ,ஈகோக்கள் , அரசியல் பிரிவினைகள் ,தேசியவாதம் ஆகியவற்றை களைந்து முஸ்லிம்கள் என்கிற நோக்கிலே இணைய வேண்டியது காலத்தின் அவசியம். கடந்த காலங்களிலே ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளும் ஆக்கிரம்பிக்கப்பட்டமைக்கு பின்னால் இருந்த பிரதான காரணம் நமக்குள் ஒற்றுமை இன்மையே. ஸ்பெயினில் இடம்பெற்ற முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் இது முக்கியமான காரணமாக இடம் பெருகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றதுக்கு சில வருடங்களுக்கு முன்னர் தமக்குள்ளே ஜமாஅத்து குரூப்புகளாக பிரிந்து கை கலப்பில் ஈடுபட்டு காபிர்களான புலிகளிடம் நீதி கேட்ட நிலையே அவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இதேபோல அந்தலூசியாவின் முஸ்லிம்கள் பிரதான கிலாபாவில் இருந்து பிரிந்து தமக்குள்ளேயே கிலாபாவை ஏற்படுத்தினார்கள். ஒரே காலத்தில் இரு கிலாபாக்கள் இருந்த பிரிவினை நிலை அப்போது காணப்பட்டது. *7.பிற மொழி கற்பித்தலில் அவசியம்* சர்வதேச மொழியான ஆங்கிலம் உட்பட அரபு மொழியை நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதன் மூலம் கட்டாய வெளியேற்றம் ஒன்றின் பாதிப்பில் இருந்து நம்மை தவிர்ந்து கொள்ள முடியும் .இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் தனியே தமிழை மற்றும் பேசி வந்தார்கள் .1990 இன் பின்னரான வெளியேற்றதை அடுத்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த அவர்கள் மொழி ரீதியாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர் .புத்தளம் நோக்கி பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தமைக்கும் மொழியே முக்கியமான காரணமாக அமைந்தது. என்வே பிரதான மொழிகளான ஆங்கிலம் அரபு ஆகியவற்றை நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதில் பொதுநல அமைப்புக்கள் முதலிடு செய்வது அவசியம் . மேற்கூறியது போல கட்டாய வெளியேற்றம் என்பது கற்பனைக்கதை அல்ல நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை . நம்மை நாம் மாற்றாத வரை நமது நிலைமையை அல்லாஹூ தஆலா மாற்ற மாட்டான் எனவே வரும் முன் நம்மை காக்க முயற்சி எடுக்க வேண்டியது தற்கால அவசியம் ஆகிறது . எல்லாம் வல்ல அல்லாஹூ தஆலா நம்மை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பானாக ... -முஹம்மது வசீம்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்