'Copy and paste
மைத்திரி ஐயா ஒருமுறை
இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்தபோது ....
"உங்கள் குடும்பம் எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மைத்திரி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது, நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே ....
இண்டர்காம் பொத்தானை அழுத்தி,
"டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே கேட்டார்,
"டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மைத்திரி பக்கம் திரும்பி ......"பார்த்தீர்களா?" என்றார்.
மைத்திரி தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கை வந்தவுடன் ....
சம்பிக்கவை அழைத்து,
"சம்பிக உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல, நாளைக்கு சொல்றேன்" என்ற சம்பிக அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் அனுர குமாரவிடம் ஓடிச்சென்று......
"நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
அனுர குமார, "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட சம்பிக மைத்திரியிடம் உடனே ஓடிச்சென்று
"எனக்கு விடை தெரியும்" என்றார்....
"சொல்லு".
#அனரகுமாரதான் அது".
மைத்திரி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,.....
முட்டாள்!
அது #டேவிட்_கேமரூன்டா!"😁😁😁😁
முட்டாப்பயலுக கிட்ட நாட்ட கொடுத்துட்டு நாம படுற பாடிருக்கே..........
யாருக்கிட்ட சொல்லி அழுறது.....


No comments:
Post a Comment