இன்று காலை நடைபெற்ற விபத்தும் பஸ் சாரதியின் தவறும் ஒரு முஸ்லிம் சகோதரனின் விட்டுக்கொடுப்பும்...!!


வாழைச்சேனை சேர்ந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் மட்டக்களப்பை நோக்கி சென்றபோது பஸ் சாரதி ஒருவர் இன்னொரு பஸ்சை முந்திச் செல்லும் போது முன்னிலையில் இருந்த மோட்டார் வாகனத்தை தட்டிச் சென்றார்.
இந்த பஸ் சாரதி ஒரு தமிழ் இளைஞர் ஆவார்.
படுகாயம் அடைந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டார்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செலவு வரும் என்பதையும் பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் இளைஞர் சாரதி தனது தவறை ஒப்புக்கொண்டு முஸ்லிம் இளைஞரிடம் என்னால் 5000 ரூபாய் மாத்திரமே தர முடியும் எனவும் தான் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வேண்டிக்கொண்டார்.
50 ஆயிரம் செலவையாவது கொடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் 14 நாட்கள் சிறைச்சாலை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு சென்று முழுமையாக செய்து கொடுக்கவேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தபோது....!!
மோட்டார் வாகன முஸ்லிம் வாலிபர் மன்னிப்புக் கொடுத்து எனக்கு எதுவும் வேண்டாம் எனவும் தானே முன்னின்று போலீஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யோடு கலந்துரையாடி பஸ் சாரதியின் பஸ்சையும் வெளியில் எடுத்துக் கொடுத்தது உதவினார்.
இதுதான் இன்றைய தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையாகும் இந்த ஒற்றுமையை குலைக்கும் விதமாக இணையதளங்களில் எழுதுவோருக்கு இது சமர்ப்பணம்...!!
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment