இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்....
#மைக்கேல் ஜோசஃப் ஜாக்ஸன் பிறந்த தினம்....
*அமெரிக்காவின் இன்டியானா மாகாணம் கேரி (Gary) என்ற இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் (1958).
*தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஒரு இசைக் கலைஞரும்கூட.
*தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்தியக் குழுவில் இசைத்து வந்தார்.
6 வயதில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாடல் போட்டியில் சிறுவன் முதல் பரிசு பெற்றான்.
*இந்த வெற்றி, இசை ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அண்ணன்மார்கள் இணைந்து ஆரம்பித்த ஜாக்ஸன்-5 இசைக் குழுவில் அங்கம் வகித்தான்.
*உலகளவில் பிரபலமான அப்பல்லோ தியேட்டரில் ஜாக்ஸன்-5 குழுவின் முதல் ஆல்பத்தை 1982-ல், பிரபல பாடகி டயானா ராஸ் வெளியிட்டார்.
இந்தச் சிறுவனுடன் இணைந்து தொடர்ந்து பாடி வந்தார். இதனால், உலகம் முழுவதும் இவனது புகழ் பரவியது.
9 வயதிலேயே நட்சத்திர அந்தஸ்து வசப்பட்டது. 24-ம் வயதில் இவர் வெளியிட்ட ‘த்ரில்லர்’ இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம்.
*இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது.
*பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார்.
*கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.
*இவரது ‘பிளாக் அன்ட் ஒயிட்’ என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.
*50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர்.
*இன்றுவரை இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான்.
*இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன.
*த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் ஆகிய ஆல்பங்கள் இன்றும் இளைஞர்களை மெய்மறக்க வைக்கும் இசைப் பொக்கிஷங்கள்.
*நெற்றியின் முன் சரிந்து விழும் முடிக்கற்றையோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் தோன்றிய உடனேயே ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும்.
*பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை, இவர்.
*அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக் கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.
*இவர் குறித்த பல சர்ச்சைகள் வலம் வந்தாலும், எதுவுமே இவரது புகழை மங்கச் செய்ததில்லை.
*இன்றளவும் பாப் இசையுலகின் ஈடுஇணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.
No comments:
Post a Comment