Sunday, 4 November 2018

குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ...


குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ... கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவுதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்டது சவுதி விமானம். இதில் ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று பயணித்தது. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இது விமானிக்கு தெறியபடுத்தவே தனது விமனத்தின் பயணபாதையை உடனடியாக மாற்றி விமானத்தை அவர் மஸ்கட் விமான நிலையத்தில் உடனடியாக தரை இறக்கி அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை அல்லாஹ்வின் உதவையை கொண்டு காப்பாற்றினார். மஸ்கட்டில் அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யபட்டது. இப்போது அந்த குழந்தை சீரான நிலைக்கு வந்த பிறகு விமானம் மறுபடியும் ரியாத்தை நோக்கி பயணித்தது. சவுதி விமானியின் இந்த மனிதநேய பணி அனைத்து பயணிகளின் ஆதரவையும் பெற்றது.

Saturday, 3 November 2018

முஹம்மது (ஸல்) அவர்கள்..


முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்தவர்கள். தன்னுடைய கடைசி இருபத்து மூன்று ஆண்டு காலத்தின் ஒவ்வொரு துளியிலும் மனித சமூகத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள். அதன் ஒவ்வொரு இழையிலும் சமுதாயத்திற்கான செய்திகளை விட்டுச் சென்றவர்கள். இறுதியாக என்னை பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் வெற்றிய்டைவீர்கள் என்று தைரியமாக்ச் சொன்னவர்கள். அவர்களைப் போல இந்த உலகிற்கு தன்னைப் பற்றிய தகவல்களை விட்டுச்சென்றர்வர்கள் யாருமில்லை. அவர்கள் சுய வரலாறு எழுதவில்லை. அவர்களது வரலாறு சுயமாகவே எழுந்து நிற்கிறது. அவர்களது காலத்தில் திருக்குர்ஆன் எழுதிப் பாதுக்காக்கப் பட்டு வந்த்து. அதில் தன்னுடைய வார்த்தைகள் கலந்து விடக்கூடாது என்பதற்காக “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டாம்” என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். அவருகளுடை வார்த்தைகளோ வரலாற்றுக் சொல்லப்பட்ட உத்தரவுகளாக பன்னூறு தலைமுறைகளைத் தாண்டியும் புது மெருகு குலையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன. அவரகளது நிழற்படம் எதுவும் இல்லை. கற்பனையாகக் கூட அவருகளுடைய தோற்றம் உருவகப்படுத்தப் படுத்தப்ப்டவில்லை. சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுகும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் புத்தருக்கும் ஏசுவுக்கும் கூட உருவங்கள் கற்பிக்கப் பட்டுவிட்டன. மூலவர்கள் இனி எழுந்து வந்தால் கூட இந்த முகமூடிகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவு அந்தப் போலி முகங்கள் மக்கள் மனதில் படிந்துவிட்டன. உலகின் மிக அதிக செல்வாக்கு கொண்ட முஹம்மது (ஸல்) என்றஅந்த பிரம்மாண்ட்த் தலைவரை அடையாளப்படுத்த ஒரு நிழற்படமோ, சித்திரமோ, இல்லை. உலகின் மாபெரிய அதிசயம் இது. ஒவியர்களோ சித்திரக்காரர்களோ அவர்கள் காலத்தில் இல்லாமலில்லை. சித்திரங்களும் ஓவியங்களும்தான் முந்தைய இறை ஒழுக்கமுள்ள சமுதாயத்தை சீரழித்தன என்பதை உறுதியாக அவர்கள் உணர்ந்தார்கள். சித்திரங்களையும் சிலைகளையும் கண்டு அகமழிந்து போகிற மக்கள் அதைப் பிடித்துக் கொண்டு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கைநழுவ விட்டுவதை தெளிவாக அறிந்தார்கள். அந்த விபத்து இறுதித்தூதை சுமந்து செல்லும் சமுதாயத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். அதனால சித்திரங்களை அவர்கள் எதிர்த்தார்கள். உலகின் இறுதித் துளிவரைக்கும் தனது கருத்துக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்த அவரகளது காலம் கடந்து செல்லும் ஒரு இலட்சியப் பயணத்திகு தனது சித்திரம் தேவை என்று கருதவில்லை. சிந்தனையும் வழிகாட்டுதலும் மட்டுமே போதும் என்று நினைத்தார்கள் அவரகளது தோழர்கள் அவரது உண்மையான அடையாளத்தை உன்னதமாக பாதுகாத்தார்கள். அவர்களை அடையாளப்படுத்த எந்தப் வரைபடமும் தேவையில்லை எனும் அளவு அவர்களைப் பற்றி அணுவிலும் அணுவான தகவல்களை அவரகளது தோழர்கள் சேகரித்துப் பராமரித்துப் பாதுகாத்துப் பரவச்செய்தனர். உலகின் எந்த அதி நவீனக் காமிராவும் இவ்வளவு துல்லியமாக ஒரு மனிதரை படம் பிடிக்க முடியாது.

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா? அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!! தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.. இன்றும் பல உயிர்களின் நினைவுகளில் லிங்கன்

Friday, 2 November 2018

ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.!


ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.! – சபைக்குள் நெருக்கடி ஏற்பட்டால் தோள்கொடுக்க முடிவு அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவே தற்போது சட்டபூர்வமான பிரதமராக இருக்கின்றார். அவரையே எமது கட்சி பிரதமராக ஏற்றுள்ளது” – என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. M.waseem.t.m

Thursday, 1 November 2018

ஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம்கள் பெற வேண்டியே பாடமும்...


*W.A.M. MEDIA* *ஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம்கள் பெற வேண்டியே பாடமும்...* *ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் வாசிக்க வேண்டியது.* அது 1609 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி... ஸ்பெயினின் கட்டலோன் பகுதியில் அமைச்சரவையை கூட்டுகிறார் மன்னர் மூன்றாவது பிலிப். 800 வருடங்களுக்கு மேலாக ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் வேளியேற வேண்டும் அல்லது அங்கேயே இருக்க வேண்டுமானால் கிருஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்கிற அரச கட்டளை பிறப்பிக்கப்படுகிறது . அமைச்சர் அவையில் பலத்த கரகோஷம். மன்னர் நல்ல முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்தோர் பேசிக்கொள்ளுகிறார்கள். காட்டுத்தீயாக செய்தி அப்போதைய ஸ்பெய்ன் முழுவதுமே பரவுகிறது. நேற்றுவரை தேசிய கீதம் பாடி,நமது நாடு நாம் கட்டலோனியர்கள் என்கிற தேசிய வாத பெருமை கொண்டிருந்த முஸ்லிம்கள், 'நாம் பிறந்த இதே மண்ணிலே இருந்து வெளியேற்றப்பட போகிறோமா ?...' என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் . 1609 தொடக்கம் 1614 வரை 10 இலட்சத்த்துக்கும் அதிகமான பரம்பரையின் எண்ணிக்கை தெரியாமலே வாழ்ந்த முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் முற்றுமுழுதாக அங்கிருந்து துடைத்து எறியப்பட்டனர். உள்ளே இஸ்லாத்தை பின்பற்றி வெளியே கிருஸ்தவர்களாக வேடம் போட நினைத்த அப்போதைய ஸ்பெயினில் இருந்த 40 வீதமான முஸ்லிம்கள் ,கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு நிரந்தர கிருஸ்தர்களாக மதம் மாற்றப்பட்டனர். அது நடந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே.. இப்போதைய ஸ்பெயின் அப்போது பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. வெலன்சியா பகுதியில் 1502 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆரம்பமானது என்று வரலாற்று சான்றுகள் கூறுகிற போதும் பொதுவாக நோக்குகின்ற போது லைபீரியா தீபகற்பத்தில் இருந்து கடைசியாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 1614 என்றே காண முடிகின்றது. எது எப்படியோ ? 800 வருடங்களுக்கும் மேலாக ஓரு நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முடியுமானால் பல நூறு வருடங்கள் வாழ்ந்து வருகிற முஸ்லிம்கள் நிலை என்ன..? ஸ்பெய்ன் முஸ்லீம்களின் இந்த வெளியேற்றம் ஓரு இரு நாட்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கவோ திட்டமிட்டோ பட்டிருக்கவில்லை. நீண்ட காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டத்தை விளைவே அவர்களின் வெளியேற்றம். காலத்துக்கு காலம் முஸ்லிம்களுடன் செய்து கொள்ளப்பட்ட பல உடன்படிக்கைகள் மீறப்பட்டன ; முஸ்லீம்களுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற நூல்கள் , நூல்நிலையங்கள் கிரனடா உட்பட பல பகுதிகளில் எரித்துச் சாம்பலைக்கப்பட்டன. 1567 ஆம் ஆண்டில் மன்னர் இரண்டாவது பிலிப் அரபி மொழியை சட்ட விரோதமாக பிரகடனப்படுத்தினார் ; இஸ்லாம் மதத்தை தடை செய்தார் ;முஸ்லீம் கலாசாரத்துக்கு மரபுகளுக்கு தடை விதித்தார் ;இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட்டன ; முஸ்லீம்களின் ஆடைகளை பகிரங்கமாக அணிவது தடை செய்யப்பட்டது. இவை இடம்பெற்று வெறும் 50 ஆண்டுகளுக்குள் முஸ்லிம்கள் முழு லைபீரிய தீபகற்பத்திலும் இருந்து துடைத்து எறியப்பட்டிருந்தனர். முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவது என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல . நபிகள் நாயகம் (ஸல் ) பிறந்த மண்ணிலே இருந்து வெளியேறிய ஹிஜ்ரத்தை யாவரும் அறிந்ததே . சரி இப்போது சம காலத்துக்கு வருவோம் பர்மாவில் ,பலஸ்தீனத்தில் , சிரியாவில் , இலங்கையில் இன்று தொடர்கிறது வெளியேற்ற தொடர்கதை ... அந்தலூசில் நானூறு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம் ; பலஸ்தீனத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெளியேற்றம் ;மன்னாரில், யாழ்ப்பாணத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இதே வெளியேற்றம் ;பர்மாவில் பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற அதே வெளியேற்றம் ஏன் நாளை காத்தான் குடியிலோ அல்லது பேருவலையிலோ அல்லது அக்குரணையிலோ இடம் பெற முடியாது என்பதில் என்ன நிச்சயம் ? நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் இல்லை, மறுமைக்காக வாழ வந்தவர்கள். ஆனால் நமது நோக்கங்கள் தடம் பிறழும் போது மண்ணில், பொன்னில் ஆசைகள் அதிகரிக்கும் போது சொத்துக்களை குவிக்கிறோம். குவித்த சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு பொறுமை என்கிற பேரில் கோழையான விட்டுக்கொடுப்புகளை செய்கின்றோம் . இந்த விட்டுக்கொடுப்புகளுக்கு மார்க்கத்தை மாற்ற மார்க்க அறிஞர்களிடம் பத்வா கேட்டு பயணம் செய்கிறோம். ஆனால் நம்மை சுற்றுயுள்ள மரணத்தையும் சூழவுள்ள அந்நியர்களின் சதிகளையும் மறந்து விடுகிறோம் . அப்போதைய ஸ்பைனிலும் இதே பத்வாக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன . போராடுங்கள் என்கிற பத்வா வழங்கப்படாமல் பாதுகாப்பு பெறுவதற்காக பகிரங்கமாக பன்றி இறைச்சியை , மதுபானத்தை ,கிறிஸ்தவ உடைகளை உடுக்கலாம் என மார்க்க அறிஞர்களால் கூறப்பட்டிருந்தது ;பத்வாக்களை வழங்கப்பட்டிருந்தன. சம காலத்தில் ஐரோப்பாவில் , வட அமெரிக்காவில் வாழுகின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல தமது தாய் நாடு என்கிற தேசிய வாத வரட்டு பிடிவாதத்துடன் இலங்கை உட்பட முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் ஒன்றை மட்டும் உணர வேண்டும் ஸ்பெயினில் வெறும் 400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம் ஏன் உங்களுக்கும் இடம்பெற முடியாது ? இலங்கையிலே முஸ்லிம்கள் முதன்முதலில் குடியேறிய யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்கள் பல தடவைகள் வெளியேற்றப்பட்டனர் . ஒவ்வொரு முறையும் அவர்கள் கடந்த கால வெளியேற்ற நிஜத்தை மறந்தனர் . 1990 ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஓரு நாளுக்கு முன்னர் நீங்கள் நாளை வெளியற்றப்படுவீர்கள் என அவர்களிடம் கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் அதை நம்பி இருக்க மாட்டார்கள். இதே யதார்த்த சூழ்நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். நிச்சயம் இல்லாத இந்த உலகிலே ஏதுவும் நடக்கும் சாத்தியம் உள்ளது.விசேடமாக முஸ்லிம்களான நமக்கு பிற மதத்தவர்களில் நேரடி நண்பர்களாக இருப்பவர்களை விட மறைவில் விரோதிகளாக இருப்பவர்களே அதிகம் . எனவே இன்னொரு கட்டாய வெளியேற்றம் என்பது நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை. அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும் ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி ஐரோப்பிய நாடுகளிலும் சரி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நம்மை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் ஸ்பெயின் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறது. அதாவது அன்றைய ஸ்பெயினில் வெளியேற்றதுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரபி மொழி தடை ,மதரஸா தடை ,இஸ்லாமிய ஆடை தடை , இஸ்லாமிய கலாசார தடை போன்றன போன்றே சம காலத்தில் நுகர்வுப்பொருட்களில் ஹலால் முத்திரை இட தடை ,பாங்கு சொல்ல தடை ,பகிரங்கமாக பெண்கள் நிக்காப் அணிய தடை ,பள்ளிகள் கட்ட தடை ,மாடு அறுக்க தடை,உண்ணத்தடை தலாக் மற்றும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுவதில் தடை என தடை பட்டியல் தொடர்கின்றன. இது கதையல்ல கற்பனையான அச்சுறுத்தலும் அல்ல, இது விளித்தெழ வேண்டிய தருணம். கட்டாய வெளியேற்றதை கண்ணால் கண்டு அனுபவித்து அதன் பாடங்களை பெற்றவன் என்கிற அடிப்படையில் அவ்வாறான நிலைகள் ஏற்படும் போது அதன் பாதிப்புக்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை முன்கூட்டி எடுக்க முடியும் என்பதை இங்கே தருகிறேன். *1.இறைவனோடு உள்ள தொடர்பை அதிகரிப்பது ..* நமது அமல்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருமானங்களை ஹலாலானதாக ஆக்கி பாவங்களில் இருந்து நம்மை தூரமாக்கும் போது நமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். நாம் துன்பத்தில் இருக்கும் போது முதலில் உதவுவது அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வே. எனவே நமது உதவிக்கான முதல் தொடர்பே அல்லாஹ்வே . ஹராமான வருமானங்களை புசிக்கும் போது இக்கட்டான நிலையில் பிரார்த்தனைகள் எப்படி அங்கீகரிக்கப்படும் ? *2 . நமது சந்ததிகளை கற்பிப்பது ..* மார்க்க கல்வி இல்லாத அறிஞரும் கடலின் நடுவே பெய்கின்ற மழையும் சமம் .எனவே மார்க்க கல்வியுடன் சேர்த்து உலக கல்வி அறிவை ,மொழிகளை கற்பிப்பது காலத்தின் அவசியம் ஆகும்.வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து பெரும் பெரும் செல்வந்தர்கள் நடுத்தெருவுக்கு வந்த அதே வேளை, ஆசிரியர்கள் ,வைத்தியர்கள் போன்ற கல்வி சார் தொழிலில் இருந்தவர்கள் ஒப்பீட்டளவில் சிரமத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட யூதர்கள் சொத்துக்களை கொண்டு சென்று முன்னேறவில்லை மாறாக கற்ற கல்வி அறிவை கொண்டு பழைய நிலையை விட செல்வத்திலும் அறிவிலும் மேலான நிலைக்கு திரும்பினர். *3.ஓரே இடத்தில் அல்லது ஓரே நாட்டுக்குள் அபரிமிதமாக சொத்துக்களில் முதலீடு செய்வதை முஸ்லீம் செல்வந்தர்கள் தவிர்க்க வேண்டும் .* மலேசியா ,துருக்கி ,இந்தோனேசியா ,போன்ற முஸ்லீம் நாடுகளில் மற்றும் அரபு நாடுகளில் முதலீடுகளை பரவலாக்க வேண்டும் . யாழ்ப்பாண முஸ்லீம்களும் ஏன் அந்தலூசியா முஸ்லிம்களும் செய்த மிகப்பெரிய தவறு வெளி இடங்களில் முதலீட்டை தவிர்த்தது.யூதர்கள் இதே தவறை இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் செய்த போதும் அதன் பின்னர் படித்த பாடத்தில் தம்மைத்தாமே திருத்திக்கொண்டுள்ளனர்.முதலீடுகளை பன்முகப்படுத்தி சர்வதேச மயப்படுத்தி வருகின்றனர். *4. வெளியூர் அல்லது வெளிநாட்டு முஸ்லீம் தொடர்புக்களை அதிகரிப்பது .* யாழ்ப்பாண முஸ்லிம்கள் செய்த தவறும் இதுதான். யாழ்பாணத்துக்குள்ளேயே திருமண பந்தம் வைத்துக்கொள்ளுவதை பெருமையாக கருதினர். வெளியூர்களில் திருமணம் செய்து கொண்டவர்களை சிறுமையான கண்ணோட்டத்தில் 'ஊரில முடித்தவர் ' என்கிற வார்த்தையுடன் நோக்கினார்கள் . இரண்டு மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட போது வெளியுலக தொடர்புகள் இன்றி நிலைகுலைந்து போயிருந்தார். எனவே அரசியல் எல்லைகள் கடந்து முஸ்லீம்களுக்கு இடையே திருமண பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் கூட வெவ்வேறு கோத்திரத்தவர்களுடன் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். சம கால சமூகத்தில் உள்ள வெளிநாடுகளில் திருமணம் செய்கின்ற நேர் மறையான மனோநிலைமை மாற்றப்பட வேண்டும் . *5. தற்பாதுகாப்பு பயிற்சிகளின் அவசியம் உணர்த்தப்படல் வேண்டும்.* முஸ்லீம்களுக்கு தற்பாதுகாப்பு என்பது முக்கியமான விடயமாக மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் எத்தனை பேர் அதில் பயிற்சி பெறுகிறோம் எத்தனை பேரின் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புகிறோம் ?.குதிரை ஓட்டுதல் ,இலக்கு நோக்கி சுடுதல் ,நீச்சல் ஆகியன நபிகள் நாயகம் (ஸல் )அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் ஆகும். இவ்வாறான பயிற்சிகள் நம்மை வெளியேற்றத்தின் போதோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களில் இருந்தோ நம்மை பாதுகாக்க உதவுவதுடன் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. *6.ஒற்றுமையை வலுப்படுத்துதல் அவசியம் .* நமக்கிடையே உள்ள ஜமாத்து குரூப்பு பேதங்கள்,பிரதேச வாதம் ,ஈகோக்கள் , அரசியல் பிரிவினைகள் ,தேசியவாதம் ஆகியவற்றை களைந்து முஸ்லிம்கள் என்கிற நோக்கிலே இணைய வேண்டியது காலத்தின் அவசியம். கடந்த காலங்களிலே ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளும் ஆக்கிரம்பிக்கப்பட்டமைக்கு பின்னால் இருந்த பிரதான காரணம் நமக்குள் ஒற்றுமை இன்மையே. ஸ்பெயினில் இடம்பெற்ற முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் இது முக்கியமான காரணமாக இடம் பெருகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றதுக்கு சில வருடங்களுக்கு முன்னர் தமக்குள்ளே ஜமாஅத்து குரூப்புகளாக பிரிந்து கை கலப்பில் ஈடுபட்டு காபிர்களான புலிகளிடம் நீதி கேட்ட நிலையே அவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இதேபோல அந்தலூசியாவின் முஸ்லிம்கள் பிரதான கிலாபாவில் இருந்து பிரிந்து தமக்குள்ளேயே கிலாபாவை ஏற்படுத்தினார்கள். ஒரே காலத்தில் இரு கிலாபாக்கள் இருந்த பிரிவினை நிலை அப்போது காணப்பட்டது. *7.பிற மொழி கற்பித்தலில் அவசியம்* சர்வதேச மொழியான ஆங்கிலம் உட்பட அரபு மொழியை நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதன் மூலம் கட்டாய வெளியேற்றம் ஒன்றின் பாதிப்பில் இருந்து நம்மை தவிர்ந்து கொள்ள முடியும் .இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் தனியே தமிழை மற்றும் பேசி வந்தார்கள் .1990 இன் பின்னரான வெளியேற்றதை அடுத்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த அவர்கள் மொழி ரீதியாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர் .புத்தளம் நோக்கி பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தமைக்கும் மொழியே முக்கியமான காரணமாக அமைந்தது. என்வே பிரதான மொழிகளான ஆங்கிலம் அரபு ஆகியவற்றை நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதில் பொதுநல அமைப்புக்கள் முதலிடு செய்வது அவசியம் . மேற்கூறியது போல கட்டாய வெளியேற்றம் என்பது கற்பனைக்கதை அல்ல நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை . நம்மை நாம் மாற்றாத வரை நமது நிலைமையை அல்லாஹூ தஆலா மாற்ற மாட்டான் எனவே வரும் முன் நம்மை காக்க முயற்சி எடுக்க வேண்டியது தற்கால அவசியம் ஆகிறது . எல்லாம் வல்ல அல்லாஹூ தஆலா நம்மை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பானாக ... -முஹம்மது வசீம்

Wednesday, 31 October 2018

சங்காவைப்பிடித்தவர்கள் மட்டும் லைக் , share பண்ணுங்கள்


சங்காவைப்பிடித்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள் ஹேட்டர்ஸ் இல்லாத கிரிக்கெட் வீரரொருவரின் பெயரைச் சொல்லுமாறு கேட்டால் பலர் "சங்கா" என்பார்கள். "சங்கா" என்று சொல்லும்போதே மனதில் கொண்டாட்டம். சங்கா பற்றி எழுதும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியிலிருந்த சிரேஷ்ட வீரர்கள் ரணதுங்க, குறுசிங்க ஓய்வின் பின்னர், கிரிக்கெட் வரலாற்றில் அழியாப் புகழ் பெறப்போகும் இரு இளைஞர்கள் இலங்கையணிக்கு உள்வாங்கப்படுகிறார்கள். மஹேல, சங்கா. சச்சினை கிரிக்கெட் கடவுளென்று கருதியவர்களெல்லாம், பிற்காலத்தில் சச்சினுக்கு போட்டியாக; சச்சினை விஞ்சும் வகையில் ஒருவன் வருவானென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அவன் அறிமுகமாகிறான். புன்னகை முகம், நிதானமான துடுப்பாட்டம், நேர்த்தியான ஷாட்ஸ், ஏராளமான சாதனைகள் என்று கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரரானார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் கடைப்பிடிக்கும் கண்ணியம்தான் சங்கா இவ்வளவு தூரம் உயரக் காரணமாய் அமைந்தது. இலங்கை அணியை பிடிக்காதவர்களைக் கூட இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கச் செய்தார். பலருக்கு கிரிக்கெட் மேல் அடங்காக் காதலை உண்டாக்கிய 'கிரிக்கெட்டின் கியூபிட்' சங்கா. சங்காவின் காலத்தில் கிரிக்கெட் பார்த்தேன் என்று மார்தட்டிக் கொள்வோர் ஏராளமானோர்! 2015 உலகக்கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாகக் குவித்த நான்கு சதங்கள், சங்கா மஹேல பெற்ற 624 ரன்கள் இணைப்பாட்டம், டெஸ்ட் போட்டிகளில் குவித்த இரட்டைச் சதங்கள் என்று நீளும் சங்காவின் எல்லா சாதனைகளும் ஒவ்வொரு ரசிகனுக்கும் மனப்பாடம். 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோனி, யுவ்ராஜ் வெற்றியை கட்டியணைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, பின்னால் புன்னகையுடன் நடந்துவரும் சங்காவின் முகத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் மறந்துபோக மாட்டான். சங்காவின் இறுதி ஒருநாள் போட்டியில் வருண பகவான் கண்ணீர் விட்டது தற்செயல் நிகழ்வென்று கடந்து போகமுடியாத நிலை. சங்காவின் ஓய்வுக்கு யார்தான் கவலையுற மாட்டார்கள்! கிரிக்கெட் வீரனொருவன் பெறக் கூடிய உச்சக்கட்ட மரியாதை என்னவென்றால் ஓய்வு பெற்ற பின்னர், "கடவுளே! இவர் மீண்டும் களமிறங்க வேண்டும்" என்று ரசிகர்கள் அங்கலாய்ப்பது. அது சங்காவுக்கு மாத்திரம் கிடைத்த வரம்! தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட போர்மில் இருக்கும்போது ஓய்வு பெறும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. சங்காவின் கவர் ட்ரைவை மீண்டும் பார்க்க மாட்டோமா? என்று ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள் ஏராளம். சங்காவின் கையில் தவழ்வதற்காக துடுப்பும் ஏங்கித்தவிக்கக் கூடும்! இரண்டு வருடங்கள் மேலதிகமாக விளையாடியிருந்தால் பல சாதனைகளின் பட்டியலில் சங்காவின் பெயரே முதலிடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும். சச்சின், பிரட்மனின் பல சாதனைகளை 'எங்கே காணவில்லை?' என்று தேடும் நிலை தோன்றியிருக்கும். பிரட்மன், சச்சினை விட சங்கா ஒருபடி மேல்!

பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டும்.


பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டும். தேசிய சூரா சபையின் அறிக்கை கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஜனநாயக மேம்பாட்டை கருத்திற் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய ஷுரா சபையானது தற்போது நாட்டில் உருவகியுள்ள அசாதாரண அரசியல் நிலைபற்றி கரிசனை கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடருமாயின் வேண்டத்தகாத பல சூழ்நிலைகள் மென்மேலும் உருவாகலாம்.கடந்த 29ஆம் திகதி கூடிய தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட, நாட்டில் பொதுவாக மாற்றம் வேண்டப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் கட்சி பேதங்களை மறந்து தேசத்தின் நலன்கருதி தமது வாக்குப் பலத்தைப் பிரயோகித்துள்ளனர் என்பதை தேசிய ஷுரா நினைவுகூருகிறது. எனவே தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு அப்பால் தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவத்தை ஒர் அமானிதமாகக் கருதி, தனிநபர் கட்சித் தாவல்களைத் தவிர்த்து தேசத்தின் ஜனநாயகப் பண்புகளை உறுதிசெய்வதில் தமது கட்சி வரம்புகளுக்குள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஷுரா சபை வேண்டிக்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரை நாட்டின் அரசியலமைப்புக்கும் பொதுவான ஒழுங்கு விதிமுறைகளுக்கும் புறம்பான வகையில் திடீரென பதிவியில் இருந்து நீக்கியதையும் மக்கள் இறைமைக்குப் புறம்பான வகையில் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்ததையும் ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகளாகவே தேசிய ஷுரா சபை கருதுகிறது. 72 வருட பாராளுமன்ற முறைமையுடனான அதி உயர் ஜனநாயக கலாசாரத்தைக் கொண்ட நாம், சர்வதேச அழுத்தங்களுக்கு உட்படாத வகையில், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்றும், இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில் பொது மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களை தேசிய ஷுரா சபை வேண்டுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கவனத்திற்கொண்டு அனைவரது பாதுகாப்பு விடயத்தில் விஷேட கவனம் செலுத்துவதுடன், நாட்டில் அமைதியும் நல்லாட்சியும் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கிறது. நமது தாயகமாம் இலங்கையை அல்லாஹ் சகலவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன். ஜே. தாரிக் மஹ்மூத் தலைவர் தேசிய சூரா சபை 2018.10.31, புதன்கிழமை - கொழும்பு

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்