முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்தவர்கள். தன்னுடைய கடைசி இருபத்து மூன்று ஆண்டு காலத்தின் ஒவ்வொரு துளியிலும் மனித சமூகத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள். அதன் ஒவ்வொரு இழையிலும் சமுதாயத்திற்கான செய்திகளை விட்டுச் சென்றவர்கள். இறுதியாக என்னை பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் வெற்றிய்டைவீர்கள் என்று தைரியமாக்ச் சொன்னவர்கள்.
அவர்களைப் போல இந்த உலகிற்கு தன்னைப் பற்றிய தகவல்களை விட்டுச்சென்றர்வர்கள் யாருமில்லை.
அவர்கள் சுய வரலாறு எழுதவில்லை. அவர்களது வரலாறு சுயமாகவே எழுந்து நிற்கிறது.
அவர்களது காலத்தில் திருக்குர்ஆன் எழுதிப் பாதுக்காக்கப் பட்டு வந்த்து. அதில் தன்னுடைய வார்த்தைகள் கலந்து விடக்கூடாது என்பதற்காக “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டாம்” என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். அவருகளுடை வார்த்தைகளோ வரலாற்றுக் சொல்லப்பட்ட உத்தரவுகளாக பன்னூறு தலைமுறைகளைத் தாண்டியும் புது மெருகு குலையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன.
அவரகளது நிழற்படம் எதுவும் இல்லை. கற்பனையாகக் கூட அவருகளுடைய தோற்றம் உருவகப்படுத்தப் படுத்தப்ப்டவில்லை.
சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுகும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் புத்தருக்கும் ஏசுவுக்கும் கூட உருவங்கள் கற்பிக்கப் பட்டுவிட்டன. மூலவர்கள் இனி எழுந்து வந்தால் கூட இந்த முகமூடிகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவு அந்தப் போலி முகங்கள் மக்கள் மனதில் படிந்துவிட்டன.
உலகின் மிக அதிக செல்வாக்கு கொண்ட முஹம்மது (ஸல்) என்றஅந்த பிரம்மாண்ட்த் தலைவரை அடையாளப்படுத்த ஒரு நிழற்படமோ, சித்திரமோ, இல்லை. உலகின் மாபெரிய அதிசயம் இது.
ஒவியர்களோ சித்திரக்காரர்களோ அவர்கள் காலத்தில் இல்லாமலில்லை. சித்திரங்களும் ஓவியங்களும்தான் முந்தைய இறை ஒழுக்கமுள்ள சமுதாயத்தை சீரழித்தன என்பதை உறுதியாக அவர்கள் உணர்ந்தார்கள். சித்திரங்களையும் சிலைகளையும் கண்டு அகமழிந்து போகிற மக்கள் அதைப் பிடித்துக் கொண்டு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கைநழுவ விட்டுவதை தெளிவாக அறிந்தார்கள். அந்த விபத்து இறுதித்தூதை சுமந்து செல்லும் சமுதாயத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். அதனால சித்திரங்களை அவர்கள் எதிர்த்தார்கள். உலகின் இறுதித் துளிவரைக்கும் தனது கருத்துக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்த அவரகளது காலம் கடந்து செல்லும் ஒரு இலட்சியப் பயணத்திகு தனது சித்திரம் தேவை என்று கருதவில்லை. சிந்தனையும் வழிகாட்டுதலும் மட்டுமே போதும் என்று நினைத்தார்கள்
அவரகளது தோழர்கள் அவரது உண்மையான அடையாளத்தை உன்னதமாக பாதுகாத்தார்கள்.
அவர்களை அடையாளப்படுத்த எந்தப் வரைபடமும் தேவையில்லை எனும் அளவு அவர்களைப் பற்றி அணுவிலும் அணுவான தகவல்களை அவரகளது தோழர்கள் சேகரித்துப் பராமரித்துப் பாதுகாத்துப் பரவச்செய்தனர். உலகின் எந்த அதி நவீனக் காமிராவும் இவ்வளவு துல்லியமாக ஒரு மனிதரை படம் பிடிக்க முடியாது.
No comments:
Post a Comment