Saturday, 6 October 2018


#Halal_என்பது_என்ன? சிலர் நினைக்கிறார்கள் ஹலால் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமென்று, அப்படி அல்ல அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் மாற்று மத சகோதரர்களும் ஹலாலை தேடி தான் செல்வார்கள். ஒரு மாற்று மத சகோதரரின் பதிவு 👌 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! அறியாதவர்கள் அறிந்துக் கொள்ளுங்கள்! புரியாதவர்கள புரிந்துக் கொள்ளுங்கள்! இஸ்லாம் கூறுகின்ற முறையில் (ஹலால்) உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

"தயவுசெய்து பிள்ளைகளை ஏசாதீர்கள்"!!!""


"தயவுசெய்து பிள்ளைகளை ஏசாதீர்கள்"!!!"" 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளை விமர்சிக்க முன்னர் நீங்கள் அறியவேண்டிய அடிப்படை உண்மைகள். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் Pass marks (சித்தி பெறும் புள்ளி) என்பது வேறு Cut off marks (வெட்டுப்புள்ளி) என்பது வேறு. Pass marks- (சித்தி பெறும் புள்ளி)- ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல் அல்லது மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் pass marks பெற்று சித்தியடைந்தவராவார். Cut off marks (வெட்டுப்புள்ளி )- அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையை பெற தெரிவு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையில் இறுதி மாணவர் பெறும் புள்ளியாகும். இது பற்றி தெளிவாக கல்வி அமைச்சின் இணைய தளத்தில் காணலாம். http://www.moe.gov.lk/english/index.php?option=com_content&view=article&id=1382:pass-ம rks-and-the-cut-off-ம rks-of-the-scholarship-examination&catid=344&Itemid=771 இங்கு விடயம் என்னவென்றால் வெட்டுப்புள்ளியைத்தான் Pass marks என கருதி நாம் எமது இளம் சந்ததியினரை விமர்சிக்கின்றோம். வெட்டுப்புள்ளியினை பெற்று புலமைப்பரிசில் பெற தகுதியான மாணவர்களை பாராட்டுவதில் தவறில்லை. மாறாக வெட்டுப்புள்ளிக்கும் Pass marks க்கும் இடைப்பட்ட புள்ளிகளை பெற்ற சிறந்த மாணவர்கள் பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களாக அடையாளம் காட்டப்படுவதுதான் மிகவும் தவறான விடயமாகும். இம்மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று உதவித் தொகை பெற மட்டுமே தகுதி பெறவில்லை . எனவே இவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுக்காக இவர்களை பாராட்டப்போகின்றோமா? அல்லது புலமைப்பரிசில் பணத்தை பெற தகுதி பெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை விமர்சிக்கப்போகின்றோமா? கடந்த கால O/L  A/L பெறுபேறுகளை ஒப்பீடு  செய்யும் போது 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற வெட்டுப்புள்ளி என்பது குறிப்பிட்டளவு  செல்வாக்கு    செலுத்தவில்லை என்பதை  அறிய  முடியும். எனவே வெட்டுப்புள்ளிக்கு குறைவாக  பெற்றாலும்  pass marks இனை  பெற்ற மாணவர்களையும்  பாராட்டுவோம்.  அவர்களை  மேலும் உச்சகமூட்டி எதிர்கால வாழ்க்கையின்  துறையினை தீர்மானிக்கும்  பிரதான பரீட்சைகளில்  (O/L,A/L) சிறந்த பெறுபேறுகளைப்பெற  அவர்களை தயார்படுத்துவோம். "කරුණාකර දරුවන්ට යෝජනා කරන්න !!! !!!"  ශිෂ්යයාගේ 5 වන ශ්රේණියේ ශිෂ්යත්ව විභාගයට පෙර දැන ගැනීමට අවශ්ය මූලික කරුණු විවේචනයට ලක් වේ. 5 වන ශ්රේණියේ ශිෂ්යත්ව විභාගයේ ලකුණු ලකුණු වෙනස් කපන ලකුණු (කැපුම් ලක්ෂ්යය). ලකුණු ලකුණු - ලකුණු 35 ක් හෝ ඊට වැඩි ලකුණු 70 ක් එක් එක් ප්රශ්න පත්රයේ ලකුණු. කැපුම් ලකුණු (කැපීම) - අවසාන ශිෂ්යය රජයේ ප්රදාන ලබා ගැනීමට ශිෂ්යයාගේ තේරීම වේ. අධ්යාපන අමාත්යාංශයේ වෙබ් අඩවියෙන් මෙය පැහැදිලිව දැක ගත හැකිය. http://www.moe.gov.lk/english/index.php?option=com_content&view=article&id=1382:pass- ඌ ඌ rks-සහ-ද-සැපයුම අත්හිටුවන-off- rks-of-the-ශිෂ්යත්ව-විභාග සහ catid = 344 & Itemid = 771 මෙන්න අපි අපේ තරුණ පරම්පරාව කපා ලකුණු සලකුණු ලකුණු ලෙස සලකමු. ශිෂ්යත්ව ලබා ගැනීම සඳහා සුදුස්සන් ශිෂ්යයින්ට සුබපැතුම් දීම වැරදි නැත. ඊට ප්රතිවිරුද්ධව, කැපුම් සලකුණු සහ ලකුණු අතර ලකුණු ලබා ගන්නා හොඳම ශිෂ්යයන් වන්නේ විභාගයේ අසමත්වීම් ලෙස හඳුනාගත හැකි වඩාත් නොමඟ යවන අයයි. ශිෂ්යත්ව විභාගය සඳහා මෙම දෙමව්පියන් සුදුසුකම් ලබන්නේ ශිෂ්යත්වයට පමණි. ඔවුන් ලැබුණු හොඳම ප්රතිඵලය ඔවුන් අගය කරමු ද? නැත්නම් ශිෂ්යත්ව මුදල් ලැබීමට සුදුසුකම් නොලබන එකම හේතුව නිසාද?

Friday, 5 October 2018

ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது.


ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நூல் (புகாரி )1039)

Monday, 1 October 2018


விபச்சாரம் சம்பந்தமாக எழுத கூடாது என நினைத்து மறைத்து வந்த எனக்கு சில வாரங்களாகவும் சில நாட்களாகவும் எனது கண்கூடாகக் காணும் சில அருவருக்கத்தக்க விடயங்களையும் ஒரு சிங்கள பெண்ணின் பதிவேற்றத்தின் பின்னரும் மறைமுகமாக சில விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி தான் ஆக வேண்டும் என நினைக்கின்றேன்....!! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் வாலிப பெண்களும், முஸ்லிம் வாலிபர்களும் ரயில் பயணம் லீலைகளும் என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆதாரபூர்வமாக கீழ்காணும் படங்களுடன் விமர்சித்திருந்தார். இதற்கான காரணம் என்ன என நான் ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன் மறைமுகமாக. காரணம் மார்க்க அறிவு நமது சந்ததிகளுக்கு கொடுக்கப்படாமல் அறிவை பல கோணங்களில் பெறுவதால் எமது பெண்களால் பல கோணங்களில் தற்போது மிகப்பெரும் அவமானங்கள் ஏற்பட்டு வருவதை பல ரூபங்களில் நாம் அவதானிக்கலாம் அதில் ஒரு உண்மைச்சம்பவம் இதோ...!! கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒரு இஸ்லாம் அல்லாத ஒரு வாலிபர் என்னை சந்தித்தார். அவர் ஆரம்ப காலங்களில் என்னுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார். சில காலங்களாக அவர் என்னை சந்திப்பதை என்னோடு வியாபாரம் செய்வதை முற்று முழுதாக நிறுத்திக்கொண்டார் தற்போதும் அது ஏற்பட்டுள்ளது. திடீரென எனக்கு தொலைபேசி ஊடாக ஒரு அழைப்பை விடுத்தார் உங்களை சந்தித்து பேச வேண்டுமென. நானும் அவரும் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து சந்திப்பை ஏற்படுத்தினோம் அந்த சந்திப்பில் அந்த வாலிபர் எனக்கு முன் வைத்த முதல் கட்டளை உங்களுடைய தொலைபேசியை முற்று முழுதாக நிறுத்துமாறும் வீடியோ ரெக்கார்ட் எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். சரி என நானும் சென்று விடயத்தை கூறுமாறு கேட்டுக் கொண்டேன் தொடர்ந்து உரையாற்றுகையில் நான் ஒரு முஸ்லிம் மாணவியை காதல் செய்வதாகவும் அப்பெண் என்னை காதல் செய்வது ஆகும் பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டோம் என்றார். சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என வினவியபோது நீங்கள் தான் எங்கள் திருமணத்திற்கு உதவ வேண்டும் எனக் கூறினார். இதற்கு எப்படி நான் உதவ முடியும் அவர் தாய் தந்தையை அல்லவா இதற்கு முடிவு எடுக்க வேண்டும் என்றேன். தொடர்ந்து உரையாற்றுகையில் அந்த மாணவியை உங்களுக்கு எப்படி தெரியும் என வினவினேன்..? அவர் கூறிய பதில் முஸ்லிம் பிரதேசத்திலிருந்து அம்மாணவி எங்களது பிரதேசத்திற்கு வகுப்புக்கு வருவதாகவும் அந்த வகுப்புக்கு வந்து செல்லும் போது தான் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொடர்பு கொண்டதாகவும் பின்னர் நாங்கள் பேஸ்புக் வாட்ஸ்அப் ஊடாக எங்களது காதலை பரிமாறிக் கொண்டோம் என கூறினார். உங்கள் காதலை முதலில் கூறியது யார் என வினவினேன்..?? உங்கள் முஸ்லிம் மாணவி தான் முதலில் என்னை காதலிப்பதாக கூறினார். என பதிலளித்தார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் சரி நீங்கள் இருவரும் என்ன திட்டம் தீட்டினீர்கள் நீங்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு உள்ளீர்களா என வெட்கத்தைவிட்டு நான் வினவினேன். அதற்கு அந்த வாலிபர் சொன்ன பதில் நாங்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து எங்களது பிரதேசத்துக்குள் காதலை பரிமாறியபோது நான் அழைத்துள்ளேன் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த போது ஏன் நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் என நான் வினவியதாகவும் கூறினார். தொடர்ந்து அப்பெண் கூறியதாகவும் நீங்கள் இஸ்லாத்துக்குள் வந்தால் நான் அனுமதிப்பேன் என கூறியதாக கூறினார். உடனே அவ்வானவர் சரி நான் இஸ்லாத்துக்குள் வருகின்றேன் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்..?? அதற்கு அந்த மாணவி சொன்ன பதில் இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் சுன்னத் வைத்துக்கொண்டாள் உடனே இஸ்லாத்தை தழுவி விடுவீர்கள் என்றுள்ளார். அது போன்று இன்னொரு விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது அந்த ஊரில் முஸ்லிம்,முஸ்லிமல்லாதவர்களை ஒரு பிரதான வீதி எல்லையை பிரிக்கின்றது. நீங்கள் இஸ்லாத்துக்குல் வருவதென்றால் முஸ்லிம் எல்லையை ஒரு தடவை வந்தடைந்தால் போதுமெனவும் முஸ்லிம்மாணவி கூறியுள்ளார். நான் இஸ்லாத்தை வந்தடைய இது இரண்டும் செய்தால் போதுமா..?? என என்னிடம் கேள்வி எழுப்பினார். நண்பரே சுன்னத் வைப்பதென்று ஒன்று இஸ்லாத்தில் என்றால் அது சுத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் முஸ்லிம் முஸ்லிமல்லாத நபர்களை பிரிக்கும் எல்லை தாண்டுவது என்பது இஸ்லாத்தில் அப்படி ஒன்று இல்லை என்பது தான் என்னுடைய கருத்தாகும். ஆகவே இஸ்லாத்துக்குள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நபருக்கு தெளிவாக சுட்டிக் காட்டி விட்டு. இந்தக் காதலினால் வரும் பின்விளைவுகளையும் அவரிடம் எடுத்துக்கூறி தற்போதைய சூழல்களையும் எடுத்துக்கூறி அந்த மாற்றுமத நபருக்கு இஸ்லாத்துக்குள் வருவது எப்படி என தூரநோக்குச் சிந்தனையோடும் எடுத்துரைத்தேன். பின்னர் அந்த மாணவியின் குடும்பத்தாரோடு கலந்துரையாட ஒரு சந்தர்ப்பத்தை தேடினேன். அந்த முஸ்லிம் மாணவியும் இருக்கும்போது ஒரு சில விடயங்களை அங்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் கலந்துரையாட கிடைத்தது. அப்போது தான் எனக்கு தெரிந்தது இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் கூட குடும்பத்தாரும் அந்த இஸ்லாமிய மாணவியும் படிக்கவில்லை என்றும் மாஷா அல்லாஹ் உலக அறிவு அனைத்தையும் தேடிப் படித்து உள்ளார் என்பதும் தெளிவாகிறது. நான் அந்த இடத்தில் வினயமாக வேண்டிக் கொண்டது காதல் என்ற பெயரில் ஓர் அந்நிய மதத்தவரை திருமணம் செய்து இஸ்லாத்தை விட்டு சென்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் கீழ்த்தரமாக பேச வைத்து விடாதீர்கள் இதற்கான வழிகளை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நான் அமைத்து தருவேன் என்றும். தற்போது நடக்கும் இஸ்லாமிய சம்பந்தமான பெண்களுடைய விடயத்தையும் இணையத்தில் நடக்கும் விடயங்களையும் கூறி பொறுமையாக இருக்குமாறு எடுத்து வைத்தேன். அந்த மாணவியின் இஸ்லாமிய சம்பந்தமான அலட்சிய கருத்துக்களும் காதல் என்ற விடயமும் மேலோங்கி நிற்பதை அவதானித்து இந்த மாணவியுடன் பேசுவதை விட அந்த மாற்றுமத சகோதரர்களுடன் பேசி இதற்கு தீர்வு காணலாம் என்று விட்டு வந்து விட்டேன். பின்னர் அந்த மாற்றுமத சகோதரர் உடன் ஒருநாள் சந்திப்பை ஏற்படுத்தி பொறுமையாக இருக்குமாறும் கூறி அவருடைய facebook லிங்கையும் எடுத்து வந்தேன். அவருடைய ஃபேஸ்புக் லிங்க் ஐ எடுத்து ஆராய்ச்சி செய்தது தான் தாமதம் சுபஹானல்லாஹ் 60க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் அவருக்கு நண்பர்களாக இருப்பதை கண்டேன். இங்கு எடுத்துக்கூற வேண்டிய விஷயம் என்னவென்றால் பேஸ்புக் மூலமாக யாரிடமும் யாரும் பெண்கள் பெயரில் நண்பர் வட்டத்தில் இருந்தாலும். இந்த உண்மைச் சம்பவத்தை பார்வையிடும் ஒவ்வொருவருக்கும் முதல் சிந்திக்க வேண்டியது உலக அறிவை கொடுப்பதோடு நமது வீட்டுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மார்க்க அறிவை முதன்மையாக கொடுக்க வேண்டும் இஸ்லாம் இஸ்லாம் அல்லாத அவர்களின் செயல்பாடு என்ன இஸ்லாம் என்ன கூறுகின்றது இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் இஸ்லாம் அல்லாதவர்களை திருமணம் செய்ய முடியுமா ஹதீஸ்களை எடுத்து விடயங்களை எடுத்துக் கூறுங்கள். இஸ்லாத்தை ஏற்கும் நபர்கள் அதிகரித்தாலும் இஸ்லாத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை விட்டு போவது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது இதற்கு முதன்மை காரணம் நாம் நமது வீட்டுப் பெண்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை வரலாறுகளை வரையறைகளை ஹதீஸ்களைக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் இந்த விடயங்கள் சுட்டிக் காட்டுகின்றது. இன்று இலங்கையில் மாத்திரம் அல்ல உலகம் பூராவும் இஸ்லாத்தையும் இஸ்லாமியப் பெண்களையும் கேவலப்படுத்தும் ஏமாற்றுவதிலும் அந்நிய மத வெறியர்கள் ஒரு சிலர் குறிக்கோளாக இருப்பதை இணையத்தளம் ஊடாக நாம் அவதானிக்கலாம். இது போன்ற பல விடயங்களை ஆதாரபூர்வமாக இங்கே பதிவிடலாம் இருந்த போதும் மறைமுகமாக இந்த சம்பவங்களை கூறுவதற்கான காரணம். எமது மார்க்கத்தை எமது பெண்கள் ஊடாகவோ எமது ஆண்கள் மார்க்கத்தில் சரியாக இருப்பவர்களை கேவலப்படுத்தக் கூடாது என்பதே இந்தப் பதிவுக்கான காரணம். எனது அருமை இஸ்லாமிய சகோதரர்களே இந்த பதிவை கண்டு நீங்கள் எனக்கு எதிராக என்ன விமர்சனம் செய்தாலும் எனக்கு கவலை அளிக்கப் போவதில்லை. என்னால் முடிந்த வரை பல விடயங்களை தடுத்தாலும் எழுத்து மூலமாக அது உங்களுக்கு சில விடயங்களை மார்க்கத்தை விட்டு தூரமாக கூடாது என்பதற்கு எடுத்துரைக்கின்றது. இலங்கையில் கல்வித் தகமை 90% அதிகரித்தாலும் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு மாவட்டம் விபச்சாரத்தில் முன்னிலை வகிக்கின்றது என்பது ஒரு புள்ளிவிவரம் குறிக்கின்றது. ஆகவே இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்றான விபச்சாரம் அதிகரிக்கும் விடயத்தில் நீங்களும் சிக்கித் தவிக்காமல் அல்லாஹ்வுக்காக விலகிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக. எங்கு விபச்சாரம் வட்டி அதிகரிக்குமோ அங்கு வாழும் அனைத்து சமூகங்களிலும் அனைத்து பரக்கத்துகளும் உயர்த்தப்பட்டு வறுமைகள் தலைவிரித்தாடும். இன்றைய சூழலில் பணக்காரன் கடன்காரனாகவும் நடுத்தர வாதி ஏழை ஆகும் ஏழை தற்கொலை செய்யும் அளவுக்கு வறுமை தலைவிரித்தாடுகிறது. இதற்கு இஸ்லாம் கூறுகின்றது விபச்சாரங்கள் வட்டிகளை நிறுத்தி விடுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். மேல் கூறிய சம்பவம் ஒரு மஸ்ஜித் நிர்வாகியிடம் கூறி அதற்கான தீர்வை பெற்று வருகின்றோம். ஊர் தலைமைகளே விழித்துக்கொள்ளுங்கள் இந்த சமூகத்தில் அக்கறை செலுத்துங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். Sehu Kabeer Kabeer Sons valaichenai m.t.m waseem.

Saturday, 22 September 2018


நாளை ஆரம்பிக்கவுள்ள இந்தியா அணிக்கு எதிரான போட்டிக்காக பாகிஸ்தான் வீரர்கள் குமார சங்ககாரவிடம் ஆலோசனை இந்தியா அணியினை வீழ்த்தி பழிதீர்த்து கொள்ள சங்ககாரவோடு ஆலோசனை பெற்று கொள்வற்காக பாகிஸ்தான் சில இளம் வீரர்கள் சென்றுள்ளனர். எதுவாக இருந்தாலும் நாளைய போட்டியில் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது. சங்ககாரவை பிடித்தவர்கள் அதிகம் செயார் செய்து கொள்ளுங்கள்.

Friday, 21 September 2018


ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்கியே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்.. அன்ப‌ரே. இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார். அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை. இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன். ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து. ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான். ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும். ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன். வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான். அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான். அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது. குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான். இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம். மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர். ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது. ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம். இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான். சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து. இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும். ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு ம‌த‌ம் இஸ்லாமாகும்.

இலங்கை அணியின் இப்போதைய நிலையை கண்டால் கவலையாக உள்ளது. நான் எனது அணியினை நல்ல நிலையில் வைத்து விட்டே ஓய்வு பெற்றதாக இருந்தேன். இப்போது உள்ளூர் போட்டிகளில் ஆடி எனது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது சவலான விடயம் கிடையாது. எனக்கூறியுள்ள டில்சான் இலங்கை அணியினை பலப்படுத்த மீண்டும் கிரிக்கெட் வீரராக வரவும் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்