Wednesday, 29 August 2018

யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள்


யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள் இன்று குருனாகல் பகுதியில் புத்திசுயாதீனமற்றவராக அலைந்த இச் சகோதரியை, முஸ்லீம் என அடையாளங்கண்ட சிங்கள சகோதரர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குருனாகல் முஸ்லீம் பகுதியில் இறக்கிவிட்டு, அங்குள்ளவர்களிடம் "இப் பெண் பேச முடியாது குருனாகல் பஸ் நிலையம் பக்கம் அலைந்து திரிந்ததால், பாதுகாப்பு கருதி ஏற்றி வந்து தந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்னர் இப் பெண்ணை கரீம் என்ற சகோதரர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபோது, #சாய்ந்தமருது, #தில்லையடி என்ற இருவார்த்தைகளை தவிர எதுவும் பேசுவதாக இல்லையாம் இப் பெண்ணிடம் பஸ்ஸில் பயணித்த டிகட் மட்டுமே இருந்ததாம். அதனையும் பதிவிறக்கம் செய்துள்ளேன். தயவுசெய்து இப் பெண்ணின் உறவினர்களிடம் இச் செய்தி சென்றடைய உதவுங்கள். சகோதரர் கரீமின் தொலைபேசி இலக்கம். Careem Kurunagala 0777157605 இப் பெண்ணை பாதுகாப்பாக முஸ்லீம் பகுதிக்குள் கொண்டு சென்று கையளித்த சிங்கள சகோதரருக்கு எனது சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இது 29/08/2018 இரவு 8.30 க்கு முகநூல்வாயிலாக கிடைத்த செய்தி. பிரதி செய்து பகிர்கிறேன்)

நபி (ஸல்) அவர்கள் பற்றிய சில........


நபி ஸல் 1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு : 20-04-570 திங்கட்கழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 2. பிறந்த இடம் : திரு மக்கா 3. பெற்றோர் : அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா 4. பாட்டானார் : அப்துல் முத்தலீப் 5. தந்தை மரணம் : நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது 6. தாயார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில் 7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில 8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப் 9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி) அவர்கள் 10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையானவர்) 11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம் 12. முதல் திருமணம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன் 13. மஹர் தொகை : 500 திர்ஹங்கள் 14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள் 15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : அன்னை கதீஜா (ரளி), அன்னை ஸவ்தா (ரளி), அன்னை ஆயிஷா (ரளி), அன்னை ஹஃப்ஸா (ரளி), அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி), அன்னை உம்முஸல்மா (ரளி), அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி), அன்னை ஜுவைரிய்யா (ரளி), அன்னை உம்மு ஹபீபா, அன்னை ஸஃபிய்யா (ரளி), அன்னை மைமூனா (ரளி), அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி) 16. ஆண் மக்கள் : காஸிம் (ரளி) அப்துல்லாஹ் (ரளி), இப்றாஹீம் (ரளி) இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள் 17. பெண் மக்கள் : ஜைனப் (ரளி), ருகையா (ரளி), உம்முகுல்தூம் (ரளி), ஃபாத்திமா (ரளி) 18. பேரர்கள் : அலீ (ரளி), உமாமா (ரளி), முஹ்சின் (ரளி), ஹசன் (ரளி) ஹுசைன் (ரளி) 19. ஊழியர்கள் : பிலால் (ரளி), அனஸ் (ரளி), உம்மு அய்மன் மாரியா (ரளி) 20. அடிமை : ஜைதிப்னு ஹாரிதா (ரளி) 21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : மொத்தம் 12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் ஹம்ஜா (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி) 22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய்; உடன் பிறந்தோர் : மொத்தம் 6 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் அம்மாரா (ரளி), ஹள்ரத் ஆத்திகா (ரளி), ஹள்ரத் ஸஃபிய்யா (ரளி) 23. நபிப் பட்டம் கிடைத்தது : 40 – ம் வயதில் (கி.பி. 610) 24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை 25. முதல் வஹீ : 'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம் 26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரளி), ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி), அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி) 27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் : அபிசினியாவிற்கு, நபித்துவம் 5 – ம் ஆண்டில், மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில் 28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரளி), மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர் 29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : நபித்துவ 10 – ம் ஆண்டில், துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி) 30. மக்காவில் தீனழைப்பு : 13 ஆண்டுகள் 31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 14 – ம் ஆண்டில் 32. உடன் சென்றவர் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி) 33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : தௌர் 34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல் 35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம் 36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல் 37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல 38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல் 39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல் 40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல் 41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல் 42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் : உஹது யுத்தம் 43. நபி (ஸல்) அவர்களின் காலத்து போர்களில் சில : பனூ முஸ்தலிக், ஹுனைன், தாயிப், பனூ கைனூக், பனூ நஸீர், பனூ குறைளா, கைபர், மூத்தா, தபூக் யுத்தங்கள் 44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல் 45. மிஃராஜ் : நபித்துவ 12 – ம் ஆண்டில, ரஜப் பிறை 27 திங்கட் கிழமை 46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில் 47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல் 48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது : ஹிஜ்ரி – 10 49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 17 50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : ஹஜ்ஜத்துல் விதாவில் 51. இறுதி வஹி : 110 – ம் அத்தியாயம் 52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை 53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு : அரீஸ் கிணறு 54. நீராட்டியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி), ஹள்ரத் உஸாமா (ரளி), ஹள்ரத் ஷக்ரான் (ரளி), ஹள்ரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரளி) 55. ஜனாஸா தொழுகை : 72

ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் !


ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் ! ஆப்பிள் பழங்களில் மெழுகு பூசுவது காலம் காலமாக நடந்து வந்தாலும், இப்போதுதான் வெளிச்சத்துக்குவ ந்துள்ளது. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மெழுகைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.பழங்கள், காய்கறிகள் நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்க மெழுகு பூசுவது 1920-லிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில வகை மெழுகுகள்தான் இதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை. இவ்வகையான மெழுகுகள் சில சாக்லேட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே.கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரியபங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை. நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்துரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல்தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகுஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்துகிடைக்கும் இயற்கை மெழுகுகள். இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில்"நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கானமுக்கிய காரணி ஆகும்.நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் துரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள். நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர். பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமில வாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம். சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தை விட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும்சீர்கெட்டு வருகிறதாம். ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம். இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.


*ஏழு விதமான ஆச்சரியங்கள்*


*ஏழு விதமான ஆச்சரியங்கள்* 1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்... 2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்... 3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்... 4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்... 5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது ஆச்சரியம்... 6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்... 7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்...! ஆச்சரியம்...! ஆச்சரியம்...! ஆச்சரியம்...!

மிகவும் கவலையான செய்தி வெட்கத்தை இல்லாமாக்கும் கல்வி


👆🌾👆🌾👆🌾👆🌾👆 மிகவும் கவலையான செய்தி வெட்கத்தை இல்லாமாக்கும் கல்வி பாடசாலையில் Bபேன்ட் வாசிப்பது ஹராம் கொழும்பில் மட்டும் சுமார் 11ஆயிரம் பேர் இஸ்லாத்தை விட்டு மதம் மாறியுள்ளார்கள் Moulavy ". Akthar Misbahi 🌈 அல்லாஹ்வின் அடிமைகள் 🌈 எம்முடன் இணைந்து கொள்ள! 0775247572 https://youtu.be/JwONiIB709s 👆👆👆👆👆👆👆👆👆

1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள்


குறிப்பு : புகைப்படம் உரியவர்களின் அனுமதியுடனே பதிவேற்றியுள்ளேன். 1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள். இவர்களின் சொந்த இடம் மரிச்சுக்கட்டி. இவர்கள் மீண்டும் 2009 யுத்தம் முடிந்த பிறகு மரிச்சுக்கட்டி வந்து குடியேறியுள்ளார்கள். இவர்கள் தான் #முதலாவதாக மரிச்சுக்கட்டி வந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #இன்றுவரை இவர்களின் நிலை எவ்வாறானது என்பதை படத்தை பார்த்து விளங்கி கொள்ள முடியும். யார் இவர்களை அரவணைப்பது? யார் இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது? மீள்குடியேறிய எத்தனையோ குடும்பங்கள் வாழ வழியில்லாமல் வலிகளோடு இரவும் பகலுமாக வழி தேடி அலைகிறார்கள்! அரசியல் அதிகாரம் உள்ளவர்களே! கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? உங்களின் ஆதரவாளர்களையும் உறவினர்களையும் மட்டும் அரவணைக்கவா மக்கள் ஆணை தந்தார்கள்? இந்த மக்கள் வாழ்வின் துயர் துடைப்பது உங்களின் பொறுப்பு என்பதை மறந்துவிட்டீர்களா? இவை நேரடியாக சென்று பார்த்து கேட்டு அறிந்து கொண்டவை. அதிகம் இருக்கிறது ஒவ்வொன்றாக எழுதுகிறேன். மனாப் அஹமத் றிசாத் m.t.m.waseem

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது


பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது நவீன உலகில் இஸ்லாம். யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது. யூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார். கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ் தனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது முழுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது. நண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா? எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம். நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா? (பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்) மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம்? தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது. பைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament) ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன. பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குடிகாரர், லூத் அலைஹிஸ்ஸலாம், தாவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார். Old Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது. ‘இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது. அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார். அது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார். எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார். மக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா? என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament ல் ஈஸா (அலை) அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார். மீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட’லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார். பாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா? என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார். அறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார். அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண்டவில்லை. பைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை? என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா? என்ற எச்சரிக்கையுடன் படித்தார். ஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. தான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. “முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்.“ என்று அதிலிருந்தது. அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ். இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான்? இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ். ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார். நண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்? எவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது? நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான். நண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்? எவன்ஸ் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம் என்றாலே அரபியர் தானே? (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்) நண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். என்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ? என்று உள்ளுக்குள் பயமுற்றிருந்தார். இஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும். இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார். அப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும். ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே! பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது. தொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன்றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது. குர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின. யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ். ஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும். இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா? அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக ... ஆமீன் Invite Everyone to ISLAM #SlavesOfAllah

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்