Wednesday, 29 August 2018

இன்று காலை நடைபெற்ற விபத்தும் பஸ் சாரதியின் தவறும் ஒரு முஸ்லிம் சகோதரனின் விட்டுக்கொடுப்பும்...!!


இன்று காலை நடைபெற்ற விபத்தும் பஸ் சாரதியின் தவறும் ஒரு முஸ்லிம் சகோதரனின் விட்டுக்கொடுப்பும்...!! வாழைச்சேனை சேர்ந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் மட்டக்களப்பை நோக்கி சென்றபோது பஸ் சாரதி ஒருவர் இன்னொரு பஸ்சை முந்திச் செல்லும் போது முன்னிலையில் இருந்த மோட்டார் வாகனத்தை தட்டிச் சென்றார். இந்த பஸ் சாரதி ஒரு தமிழ் இளைஞர் ஆவார். படுகாயம் அடைந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செலவு வரும் என்பதையும் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் சாரதி தனது தவறை ஒப்புக்கொண்டு முஸ்லிம் இளைஞரிடம் என்னால் 5000 ரூபாய் மாத்திரமே தர முடியும் எனவும் தான் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வேண்டிக்கொண்டார். 50 ஆயிரம் செலவையாவது கொடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் 14 நாட்கள் சிறைச்சாலை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு சென்று முழுமையாக செய்து கொடுக்கவேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தபோது....!! மோட்டார் வாகன முஸ்லிம் வாலிபர் மன்னிப்புக் கொடுத்து எனக்கு எதுவும் வேண்டாம் எனவும் தானே முன்னின்று போலீஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யோடு கலந்துரையாடி பஸ் சாரதியின் பஸ்சையும் வெளியில் எடுத்துக் கொடுத்தது உதவினார். இதுதான் இன்றைய தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையாகும் இந்த ஒற்றுமையை குலைக்கும் விதமாக இணையதளங்களில் எழுதுவோருக்கு இது சமர்ப்பணம்...!! அல்ஹம்துலில்லாஹ்

சிறிலங்கா கடற்படையின் கையில், அமெரிக்க போர்க்கப்பல்.


சிறிலங்கா கடற்படையின் கையில், அமெரிக்க போர்க்கப்பல். அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றார். 115 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்தக் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படையின் கையகப்படுத்தல் தலைமை அதிகாரியும், உதவித் தளபதியுமான றியர் அட்மிரல் ஹேகொக் அதிகாரபூர்வமாக தமது அணியில் இருந்து நீக்கினார். அதையடுத்து, இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் கப்டன் அனுர தென்னக்கோனிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்வில், அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கடல் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் மார்க் டல்டன், யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி கப்டன் வில்லியம்ஸ், ஹொனொலுலு தளத்தின் கட்டளை அதிகாரி கப்டன் ரஸ்முசென், உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். சிறிலங்கா கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பல், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக பயணத்தை ஆரம்பிக்க முன்னர், அந்தக் கப்பலில் 40 நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். M.waseem.t.m

ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்


ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர் பௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­னைகள் புரியும் போதே குள­று­ப­டி­களும் பிரச்­சி­னை­களும் எழு­கின்­றன. ஏழு, எட்டு வரு­டங்கள் சமயப் படிப்பு பெற்ற பின்­னரே பள்­ளி­வா­சல்­களில் சமயத் தலை­வர்கள் அமர்த்­தப்­ப­டு­கி­றார்கள். இதே முறைமை எங்கள் மத்­தியில் இல்லை. இதனை நாமும் கொண்டு வர வேண்டும் என்று தெஹி­வளை, நெதி­மாலை கலா­சார மத்­திய நிலைய அதி­பதி கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்­துள்ளார். பொது­பல சேனா அமைப்பின் ஆரம்பத் தலை­வ­ரா­க­வி­ருந்து கருத்து வேற்­று­மையால் அதி­லி­ருந்து விலகி தற்­போது சுய­மாக இயங்கி வரும் கிரம விம­ல­ஜோதி தேரரை ராவய சிங்­கள ஊடகம் பேட்டி கண்டு வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது, என்னால் ஏதும் தவ­றுகள் வெளிப்­பட்டு விடுமோ என்ற பீதி­யிலே நான் இப்­போது பௌத்த போத­னை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. வாய்க்கு வந்­த­வா­றெல்லாம் போதனை செய்ய முடி­யாது. திரி­பி­டயை (பௌத்த கிரந்தம்) சரி­யாகப் புரிந்து கொள்­ளாது புத்­த­பெ­ருமான் அப்­படிச் சொல்­லி­யி­ருப்பார் இப்­படி சொல்­லி­யி­ருப்பார் என்று விளக்கம் கொடுப்­பது தவறு. ஞான­சார தேரரை பிர­தான பிக்­குத்­த­லை­வ­ராக ஏற்றுக் கொள்­வோரும் எங்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றார்­களே! இது குறித்து நீங்கள் என்ன கரு­து­கி­றீர்கள் என்று ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு தேரர் பதி­ல­ளிக்­கையில்; அவரை பிர­தம பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது. ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் ஏதும் பிரச்­சி­னைக்கு இவர் முகம் கொடுத்துப் பேசும்­போது எமது இளைய பிக்­கு­மார்கள், இவர் தான் நாட்­டுக்­காக கலா­சா­ரத்தைப் பாது­காக்கும் தலைவர் என்று எடை­போட்டுக் கொள்­கி­றார்கள். இவர் குறித்து மேலி­டங்­க­ளி­லி­ருந்து பேசா­தி­ருப்­பதால் தான் இளையோர் மத்­தியில் இப்­படி தவ­றாக எடை போடப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ளவு தான் ஞான­சார தேர­ருக்கு பொது­பல சேனாவை முன்­னெ­டுத்­த­வர்கள் தானே இத்­த­கைய மதிப்பைக் கொடுத்து கொண்­டி­ருக்­கி­றார்கள் அல்­லவா? என்று எழு­ப்­பப்பட்ட வினா­வுக்கு அளிக்­கப்­பட்ட பதிலில், நானும் அந்த அமைப்பில் இருந்தேன். அவர்கள் பய­ணிக்கும் பாதை தவறு என்­பதை உணர்ந்து கொண்­ட­போது நான் அதி­லி­ருந்து ஒதுங்­கிக்­கொண்டேன். ஒரு சிலரால் பிக்­குமார் தூண்­டப்­பட்­டார்கள் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் நான் இப்­போது அதில் ஈடு­ப­டு­வ­தில்லை. எமக்­கென்று பிர­தான அமைப்­பொன்று இருக்­கையில் சிறு­சிறு அமைப்­புக்கள் அவ­சி­யப்­ப­டாது. பிக்­குகள் நாட்டின் சட்­டத்­திற்­குட்­ப­டா­த­வர்­களா? என்று வின­வப்­பட்­ட­போது, இல்லை, இல்லை நாட்டின் அரச சட்­டத்­திற்கு கீழ்­ப­டியும் படியே புத்­த­பெ­ருமான் போதனை செய்­துள்ளார். பிக்­குகள் தமது கௌர­வங்­களைப் பேணி நடந்தால் அரச சட்­டத்­திற்கு மேலேதான் அவர்கள் இருப்­பார்கள். இதனை விடுத்து சட்­டத்தை மீறு­வதில் தான் பிரச்­சி­னையே எழு­கி­றது. பௌத்த கலா­சார பணி­களில் எப்­போது ஈடு­பாடு காட்ட ஆரம்­பித்­தீர்கள்? 1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் வெளி­நாட்­டிலே தான் இருந்து வந்தேன். அப்­போது நான் எதிர்­பார்க்­கா­த­வாறு பணம் என்னை வந்­த­டைந்­தது. 1989 ஆம் ஆண்­டாகும் போது 75 கோடி ரூபா அளவில் என் கையி­ருப்பில் இருந்­தது. அப்­ப­ணத்­துடன் நான் நாடு திரும்பி மற்­று­மொரு பிக்­கு­வையும் இணைத்துக் கொண்டு தெஹி­வளை, நெதி­மா­லையில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான தியான நிலையம் ஒன்றை நிறு­வினேன். பௌத்தம் தொடர்­பான ஆங்­கில நூல் எதுவும் எமது நாட்டில் இல்­லாத நிலையில் மலே­ஷியா, இந்­தியா நாடு­க­ளுக்குச் சென்று அங்­கி­ருந்து சில பௌத்த நூல்­களை எடுத்து வந்து இங்கு வைத்தோம். பின்னர் 92 ஆம் ஆண்டில் பஸ் வண்டியொன்றை அமர்த்தி நடமாடும் பௌத்த நூலக சேவையொன்றை ஆரம்பித்து வந்தேன். தொடர்ந்து 93 ஆம் ஆண்டு முதல் பொது நூலகத்திலும் கலாபவன நிலையத்திலும் பௌத்த கலாசார கண்காட்சிகளை என்னிடமிருந்து பணத்தை செலவு செய்து நடத்தி வந்தே என் பணி தொடர்கிறது என்றார். JM

சற்றுமுன் ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி இருவர் மரணம்.


#BREAKING #NEWS சற்றுமுன் ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி இருவர் மரணம். ஒருவர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏறாவூர் மத்ரசாவில் கல்விபயிலும் மாணவர்கள் என தகவல். மத்ரஸா விடுமுறை காலமென்பதால் நண்பர்களுடன் சென்றவேளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல். .மரணமடைந்தவர்கள் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தை சேர்ந்த முகம்மது அனஸ் முகம்மது ஷாக்கீர்,மற்றவர் மீராகேணி அசனார் முகம்மது சாதீக் த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் மர்கஸ் மத்ரஸாவின் இறுதி ஆண்டு மாணவர்களாம்.

Tuesday, 28 August 2018

இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.....


இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.. இவர்களுடைய வாழ்வினை இம்மையிலும் மருமையிலும் சிறப்பாக அமையுத்து வைப்பாயாக..#ஆமீன்.

இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்


இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள் ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள். “ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்..?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்..? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அது தான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார். அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி குறை கூறி கொண்டு வந்தார். பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறுமையோடும், புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார். கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெற்றார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள். கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா...? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லி விட்டு செல்லுங்கள்” என்று கூறினார். அப்போது நற்குணத்தின் தாயகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரை விட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான் தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார். இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூதாட்டிக்கு உதவும் போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள். 2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள். 3.கடைசியாக தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார். அன்பினால்: வேதனை சுகமாகும். அன்பினால்: கசப்பு இனிமையாகும். அன்பினால்: இருள் வெளிச்சமாகும். இஸ்லாமிய அழைப்பாளன்...

“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)


https://youtu.be/eBGlUA0GRB8 “மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்) பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர். மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தொிவித்தனர். இந்த விடயத்தை மகளிடத்தில் தொிவிக்க வேண்டாம் என தாய் கேட்டுக்கொண்டாள். இந்த இளம் வயதில் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். மகள் தினம் தோறும் வைத்தியசாலைக்குப் போய் தாயிடம் அமர்ந்து குர்ஆனை ஓதுவாள். ஒரு முறை தன் சின்ன மகளிடம் மறைமுகமாக தனது மரணத்தை சொல்லி வைக்க தாய் நினைத்தாள் - “பராஆ! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன். நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது. அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்...” என்ற கூறி வைத்தாள். முழுமையாக தாயின் நோக்கத்தைப் புாியாது விட்டாலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் பராஆ. ஒரு நாள் காலை வைத்தயாசலையிலிருந்து தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது. செய்தி என்ன என்று முழுமையாகத் தொியாத நிலையில் பராஆவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார் தந்தை. பராஆவிற்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் தொியக் கூடாது என்ற நோக்கில் “பராஆ! நீ வாகனத்திற்குள் இருந்துகொள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பதட்டத்துடன் வேகமாக வீதியைக் கடந்தார். ஆனால்.................... பராஆவின் இரு கண்களுக்கு முன்னாலேயே தந்தை வேகமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு விழுகிறார். அழுகையோடு பராஆ வீதிக்கு ஓடி வந்து தந்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ஆம் தந்தை உயிரை இழந்தார். பராஆவை வேதனையை அதிகாிக்க இருந்த அடுத்த கவலையான செய்தியை வைத்தியர்கள் மறைத்து விட்டனர். ஆனாலும் எத்தனை நாட்கள் மறைக்கலாம் 5 நாட்களில் தாயின் உடல் மண்ணறை நோக்கி சுமந்து செல்லப்படும் செய்தியை அவளுக்குத் தொிவித்தார்கள். கதறியழுதாள் பராஆ. உறவினர்களின்றி ஸஊதியிலே தனித்துப் போன பராஆவை எகிப்தில் அவளது உறவினர்களிடம் அனுப்ப நண்பர்கள் ஆலோசித்தனர். ஆனால்... சில நாட்களில் திடீரென பராஆ நோய்வாய்ப்பட்டாள். வைத்தியாசாலைப் பாிசோதனையில் மிக மோசமான கென்ஸர் தாக்கியுள்ளது என வைத்தியர்கள் தொிவித்தார்கள்.இந்த செய்தி பராஆவுக்கு தொிய வந்ததும் புன்னகைத்தாள். “எனது தந்தையும் தாயையும் பார்க்கப் போறேன்” என்று எல்லோருக்கும் முன்னால் ஆனந்தத்துடன் கூறினாள். செய்தியறிந்த ஸஊதி தனவந்தர் ஒருவர் பராஆவை தனது முழு செலவிலும் யுகேயிற்கு அனுப்பி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட பராஆவின் நோய் முற்றிக்கொண்டே வந்தது. இறுதியில் அந்த இளம் உடலின் இரு கால்களும் வெட்டப்பட்டன. சில மாதங்களில் பராஆவைஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆனாலும் ... அந்த இளம் பிஞ்சு வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அனைத்து மீடியாக்களும் தொடர்பு கொண்டன. அனைத்தையும் யுடியுபில் நீங்கள் காணலாம். அந்த சின்ன மகள் ஓதிய ஓதல்கள் கவிதைகள் அனைவரையும் அழ வைத்தன. ஆம் உங்களையும் அழவைக்கும் கேட்டுப்பாருங்கள். படிப்பினை பெறுவோம்..! (இது 2014ஆம் ஆண்டு வெளியான செய்தி) மீல் பரிசோதனை இதனை அனைவருக்கும் பகிர்ந்து அவர்களுடைய மண்னறைக்கு நன்மைகளை சேர்ப்போம். யா அல்லாஹ் இவர்களை கபூல் செய்து உன்னுடைய மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக! https://youtu.be/eBGlUA0GRB8 (By.m.t.m.waseem)

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்