இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம் என்று அழைக்கப்படும் கண்டி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமமான மீமுர கிராமம்
மீமுர கிராமம் என அழைக்கப்படும் இக்கிராமம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும், இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 324 மீ உயரத்தில் அமைந்துள்ளது இது முற்றுமுழுதாக 3 மலைகளால் மறைக்கப்பட்டுள்ளது
சுமார் 100 அல்லது 120 குடும்பங்களைக்கொண்ட இக்கிராமத்தின் அண்மைய சனத்தொகை கணெக்கெடுப்பின் படி சுமார் 400 பேர்களே வசித்து வருகின்றனர்
இலங்கையின் பண்டைய பழக்கவழக்கங்கள், உணவு, வாழ்வாதாரங்கள், விவசாய முறைகள், விவசாய உபகரணங்கள், பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட
இந்த கிராமத்து மக்கள் ஒரு அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இன்றைய நவீன உலகில் டெக்னாலஜி தவிர நம்மால் அடைய முடியாத பல சாதனைகளை இக்கிராம மக்களின் வாழ்வியலில் புரிந்து கொள்ள முடியும்
இந்த கிராமம் பிரதான சாலையான நக்கல்ஸ் வனத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
கிராமத்திற்கு செல்லும் வழியில், இலங்கையின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய காடுகளையும் காணலாம். ரம்மியமான பல காட்டு நீர்வீழ்ச்சிகளையும்
பல சரிவுகள் சிகரங்களையும் கொண்ட இந்த கிராமத்திற்கு செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கிறது.
இயற்கையாகவே அமையப்பெற்ற குளங்கள், சாய்வான நீர்வீழ்ச்சிகள், ஏறும் மலைகள், மேடுகள் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றால் உண்டாகும் திகில், ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியின் அதிசயங்களை அனுபவிக்க மிமுரா மிக பொருத்தமான இடமாகும்
கிராமத்தின் கிழக்கே பிரமிட் வடிவிலான லேகலா மலை அமைந்துள்ளது; மேற்குப்பாகம் அழகிய நக்கல்ஸ் வரம்பினால் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் வடக்கு எல்லையானது ‘பிடாவாலா பதானா’ என்ற புள்வெளிக்கு செல்லும் ஒரு காடுகளின் எல்லையாகும்; தெற்குப்பாகம் ஹீன் என்கின்ற நதியால் முற்றுமுழுதாக சூழப்பட்டுள்ளது.
2004 ம் ஆண்டு வரை மீமூர கிராமத்திற்கு சென்றடைய போக்குவரத்து முறையாக கால் நடைகள் மட்டுமே பயன்படுத்தப்படு வந்தன.
கால்நடைகள், மந்தைகள் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் நிறைந்த சாக்குகளை கிராமத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன . தற்போது , முச்சக்கர வண்டிகள், ஜீப்புகள் மற்றும் சிறிய லாரிகளை அனுமதிக்க பாதைகள் சற்று அகலப்படுத்தப்படு புனரமைக்கப்பட்டுள்ளன.
இந்தக்கிராமத்தின் உள்ளே Camping அல்லது Hiking செல்வதாயின் நன்கு அனுபவம் வாய்ந்த அந்த கிராமவாசிகளுடன் மட்டுமே செல்ல முடியும் இந்த கிராமத்தை சூழவுள்ள வீதிகள் மலைகள் மிகவும் பயங்கரம் வாய்ந்தவை ஆகவே உங்களது பாதுகாப்பை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்.


















No comments:
Post a Comment