Wednesday, 21 November 2018

இலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் ! SHARE SHARE SHARE


இலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் ! கடந்த அக்டோபர் 26ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதி வரை திரைக்கு பின்னால் நடந்தவை .... கடந்த அக்டோபர் 26ம் திகதி மாலைப் பொழுதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன முன் பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்தார். அதுவரை ஐதேகவின் பிரதமராக இருந்த ரணில் அல்லது அக் கட்சியின் முக்கிய தரப்புகள் இது குறித்து அறிந்தே இருக்கவில்லை. சிரிசேன , மகிந்த , பசில் ஆகியோரது தொடர்பாளராக ஈடுபட்ட லக்ஸ்மன் பெரேரா ஆகியோர் மட்டுமே இதை அறிந்திருந்தனர். அதைத் தவிர மகிந்த மற்றும் சிரிசேன ஆகியோரது நெருக்கமானவர்கள் ஏதோ ஒரு மாற்றம் நடக்கப் போகிறது என மட்டும் ஊகித்திருந்தினர். ஆனால் அது என்னவென்பது உறுதியாக தெரியாதிருந்தது. அதனால்தான் அவர்கள் மகிந்த - மைத்ரி ஒற்றுமை குறித்து பரப்புரைகளை மேற் கொண்டனர். அத்தோடு தேசாபிமான சுலோகங்களையும் முன் வைக்கத் தொடங்கியிருந்தனர். மகிந்தவின் அவசர தேவை , கோட்டாபய மற்றும் காமினி செனரத் ஆகியரது வழக்குகளிலிருந்து மீள்வதேயாகும். ஏனைய வழக்குகளை விட இவை பார தூரமானவை. அத்தோடு ஏனைய அவரது வழக்குகளும்தான். ஆனால் மைத்ரியின் இலக்கோ 2019 சனவரி 08ம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி எப்படியாவது இன்னொருமுறை வெற்றி பெற்று ஜனாதிபதியாக வேண்டும் என்பதேயாகும். மகிந்த பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததும் ரணில் 1994 மற்றும் 2003 காலப் பகுதியில் தலையணை படுக்கைகளை சுருட்டிக் கொண்டு போனது போல வீட்டுக்கு போவார் என அவர்கள் எண்ணியிருந்தனர். அதன்பின் ஐதேவுக்குள் உள்ள ரணில் விரோதிகளையும் , தம்மோடு முன்னர் நெருக்கமாக இருந்த முஸ்லீம் கட்சிகளையும் வளைத்துப் போட்டுக் கொள்வது பெரிய பிரச்சனையில்லை என மகிந்த மற்றும் பசில் நம்பிக்கையோடு இருந்தார்கள். இதற்கு ரவி கருணாநாயக்கா, அண்மைக் காலமாக ரணில் மேல் கொண்ட கசப்பும் காரணமாக இருந்தது. தனக்கு நிதியமைச்சு பதவியைத் தந்தால் ஐதேகவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களோடு வரத் தயார் என மைத்ரி மற்றும் பசிலிடம் ரவி தெரிவித்திருந்தார். பசில் மற்றும் ரவியின் நட்பு நெடுங்கால உறவாகும். ரவி கருணாநாயக்க 2007ம் ஆண்டு கெலியன் முதலீட்டு ஊழலில் சிக்கிக் கொண்ட போது அஜித் கப்ராலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பசில், ரவியை காப்பாற்றினார். அந்த நன்றிக் கடனாக உருவான நட்பு அரசியல் குரோதங்களைத் தாண்டி தொடர்ந்து வந்தது. அதன்பின் ரவி கருணாநாயக்கவுக்கு சொந்தமாக டார்லி வீதியில் இருந்த பழைய கட்டிடத்தை 660 மிலியன் ரூபாயில் திருத்தியமைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கட்டிடமாக பசில் பாவிக்கவும் தொடங்கினார். தவிர சஜித் மற்றும் சஜித்தின் மனைவியும் , ரிசாட் பதியுதீனும் கூட தன்னோடு இணைவார்கள் என்ற நம்பிக்கை பசிலிடம் இருந்தது. ரிசாட் வந்து விட்டால் , பின்னர் ரவூப் ஹகீமும் அந்த அலையோடு இணைவார் என பசில் எண்ணியிருந்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற கேம் நகர்வுகள் பசிலுக்கு அத்துப்படி என ராஜபக்சக்களும், சிரிசேனாக்களும் ( மைத்ரி மற்றும் டட்லி) நம்பினார்கள். இதனியடையே மைத்ரியிடம் ஒரு துருப்பு சீட்டாக சஜித் பிரேமதாச இருப்பதாக மைத்ரி பெரு நம்பிக்கையோடு இருந்தார். அடிக்கடி பெஜட் வீதியில் அமைந்திருந்த ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இரவு உணவு விருந்துகளில் சஜித் பிரேமதாச , சஜித்தின் மனைவி மற்றும் ஹேமா பிரேமதாச (பிரேமதாசவின் மனைவி /சஜித்தின் தாய் ) ஆகியோர் வந்து போவது வழமையான ஒரு நிகழ்வாக இருந்தது. இது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சஜித்தின் பின் பலமாக மைத்ரியின் பிரசார இயந்திரமாக செயல்பட்ட கிளிமகராசாவின் சிரச (சக்தி/ newsfirst) மற்றும் டிரான் அலசின் மவ்பிம தினசரியும் இருந்தன. டிரான் அலசின் மவ்பிம , ஐதேகவின் மங்கள கம்பெரலியவின் நாயகனாக சஜித்தையே தூக்கி வைத்து புகழத் தொடங்கியிருந்தது. அதன் வீரன் சஜித் என்றே தலைப்புகள் வெளியாகின. அதோடு கடந்த 6 மாதங்களாக கம் உதாவ எனும் நிகழ்ச்சி நிரலுக்காக, 2000 மிலியன் ரூபாய் பணத்தை ஜனாதிபதி சிரிசேனவின் பணிப்பின் பேரில் பெற , மங்கள சமரவீர இடமளித்தார். சிரிசேனவின் பிபிதெமு பொலன்னறுவை நீர் வீழ்ச்சி திட்டத்தை திறந்து வைக்கும் போதும் சிரிசேன , சஜித்துக்கு முதன்மைளித்தார். சஜித் அந்நிகழ்வில் சிரிசேனவுக்கு நிகரான கௌரவத்தோடு மதிப்பளிக்கப்பட்டார். தன் தந்தையைப் போலவே ஏழை மக்களுக்காக உதவுவதில், மைத்ரி முன்னின்று உழைக்கிறார் என சஜித் தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார். மேடைகளில் அதிகமாக ரணிலை விட, மைத்ரியையே சஜித் புகழ்ந்து வந்தார். அதேபோல ஐதேகவினர் மைத்ரியை வசைபாடும் போது, அவர்களது கருத்துகளை எதிர்த்து மைத்ரி சார்பாக பேசி வந்தார். சஜித் - மைத்ரி இருவரிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக, ஐதேவின் ரணில் இல்லாத , சஜித்தை பிரதமராக்கும் ஒரு பிம்பத்தை திரை மறைவில் மைத்ரி உருவாக்கி வந்தார். ரணிலை பதவி விலக்கிய தின இரவில் , ரணில் காலியில் உள்ள உல்லாச பயண விடுதியொன்றில் வார விடுமுறையைக் கழித்துக் கொண்டு இருந்தார். வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்னாயக்கவும் ரணிலோடு அப்போது உரையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போதுதான் ரணிலை பதவியை விட்டு மைத்ரி அகற்றிய செய்தியை கேள்விப்பட்டனர். செய்தியறிந்ததும் இரண்டாம் கட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு வரத் தொடங்கினர். அப்போது இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்போதே முக்கியமான ஐதேகவினர் அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தனர். இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் , அத்தனை கட்சிக்காரர்களும் அலரி மாளிகையை நோக்கி குழுமிய போதும் பிரதித் தலைவரான சஜித் மற்றும் உப தலைவரான ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வருகை தராமையாகும். சஜித் அம்பாந்தோட்டையில் இருப்பதாக தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் சஜித் அந்நேரம் மைத்ரியின் ஜனாதிபதி மாளிகையில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. சஜித் மைத்ரியை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததான விபரங்கள் பின்னர் தெரியவந்தன. ரவி கருணாநாயக்கவோ , பசில் மற்றும் மைத்ரியை மாறி மாறி சந்தித்து தனக்கு நிதியமைச்சை அல்லது முதலீட்டு ஊக்குவிப்பு அல்லது சுற்றுலா அல்லது மெகாபோலிஸ் அமைச்சுகளில் ஒன்றைத் தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார். அன்றைய இரவு ரணிலோடு ஹரின் பெர்னாண்டோ,அஜித் பி. பெரேரா, நளின் பண்டார,முஜிபூர் ரகுமான், ருவான் விஜேவர்த்தன, அகில விராஜ், மங்கள சமரவீர, ராஜித சேனாரட்னே, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த சிலருமே அலரி மாளிகையில் இருந்தனர். 27ம் திகதி ரணிலை அலரி மாளிகையை விட்டு துரத்தப் போவதாக விமல் வீரவங்ச சூழுரைத்த பின்னர்தான் , அங்கிருந்தோர் வெளியேறுவதில்லை என முடிவுக்கு வந்தனர். அதற்கு எதிராக முகம் கொடுப்பதென்றும் தூதுவராலயங்களினூடாக சர்வதேசத்துக்கு தெரிவிப்பதென்றும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதென்றும் முடிவுக்கு வந்தனர். அன்றே பிரதமர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து, சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் கையெழுத்துகள் வாங்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐதேகவின் பலவீனம் எந்த அளவு என்றால்? அந்த காரியத்தை நிறைவேற்ற விஜேதாச ராஜபக்சவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்கள். அன்று இரவு மட்டும் அங்கிருந்த விஜேதாச ராஜபக்ச, அடுத்த நாள் முதல் தனக்கு உடல் நலமில்லை என வீட்டில் தங்கி வஜிர அபேவர்தனவுடன், ஐதேகவுக்கு எதிரான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். பின்னர் விஜேதாச ராஜபக்சவின் சத்தியக் கடதாசிக்கான கையெழுத்தை தயா கமகேயும் அவரது மனைவியும் அவரது வீட்டுக்குச் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்கள். அப்படி கையெழுத்திட்ட விஜேதாச ராஜபக்ச ,அடுத்த நாளே மகிந்த அரசியல் ஒரு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 27ம் திகதி காலையில் ஜனாதிபதி மைத்ரி பிரதமரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்காவை பதவி நீக்கம் செய்திருந்தார். அவருக்கு பதிலாக அமரசேகர என்பவரை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரணில் அமரசேகரவை அழைத்து அலரி மாளிகையினதும் பிரதமர் காரியாலயத்தினதும் சாவிகளைக் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்தார். அவரது அந்த முடிவை சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அஜித் பி. பெரேரா மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து தடுத்தார்கள். அங்கு குழுமியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வெல்லும் வரை எவரும் அலரி மாளிகையை விட்டு அகல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர் அலரி மாளிகையின் நடைமுறைகளை கையாழ்வது குறித்து சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன சில கமிட்டிகள் நியமித்தார்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னேடுப்பதற்கு சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரட்ன மற்றும் அகில காரியவசம் ஆகியோர் முன்வந்தனர். அலரி மாளிகையின் அடிப்படை தேவைகளை கவனிப்பது, சாகல ரத்னாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேசத்துக்கான பரப்புரைகளை கொண்டு செல்லும் பொறுப்பு, மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கரு ஜயசூரிய தலைமையின் மூலமே சர்வதேசத்துக்கு அதிக விடயங்கள் பகிரப்பட்டன. இந்த நேரத்தில் ஐதேகவின் நவீன திசாநாயக்க , அர்ஜூன ரணதுங்க ஆகியோர் உட்பட பலர் வெளிநாடு சென்றிருந்தனர். 27ம் திகதி அலரி மாளிகைக்கு வந்த சஜித்தும், துலாஞ்சலியும் சுற்றி வளைத்து நிலமைகளை அவதானித்தனர். அதன் பின் தலை முடி வெட்டப் போவதாக , சஜித் லக்ஸ்மன் கிரியேல்லவிடம் சொல்லி விட்டு வெளியேறினார். அந்நேரம் துலாஞ்சலியை அங்கு இருக்குமாறு சஜித் விட்டுச் சென்றார். அன்று முதல் இரு நாட்கள் தங்கியிருந்த துலாஞ்சலி முக்கியமான சந்திப்புகளில் கலந்து கெண்டார். அதிகமாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் , தனது மொபைல் போனில் ஒளிப்பதிவு செய்த துலாஞ்சலி, ரொஸ்மிட் பிளேசிலுள்ள டிரான் அலசின் காரியாலத்துக்கு அனுப்பினார். அது எப்படியோ கசிய வரவே , ஆள் இல்லாமல் தலை மறைவானார். அக்டோபர் 26 முதல் 29 வரை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் எடுத்ததோடு, விசேடமாக நிதியமைச்சையும் மகிந்த கையிலெடுத்துக் கொண்டார். அதன்பின் தனது கனவு நியைவேறாது என உணர்ந்த ரவி கருணாநாயக்க அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். தயாசிரி ஜயசேகர மற்றும் சிலர், ரவி கருணாநாயக்கவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என கடுமையாக இருந்தனர். அப்படியான எதிர்ப்புக்கு பின்னரே, ரவி கருணாநாயக்க , திரும்பிஅலரி மாளிகைக்கு வந்தார். அக்டோபர் 30ம் திகதி கொள்ளுப்பிட்டியில் நடந்த ஐதேகவின் ஆர்ப்பாட்டத்துக்கு கூட , கொழும்பு வடக்கிலிருந்து ஒருவரையும் கலந்து கொள்ளாதபடி ரவி கருணாநாயக்க செயல்பட்டார். ஆனால் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துகாக மக்களை திரட்டிக் கொண்டு வந்த பெருமை , முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் மற்றும் கித்சிரி ராசபக்ச ஆகியோரையே சாரும். அன்றைய அத்தனை பலமும் அவர்களுடையதாகும். அம்பாந்தோட்டை பகுதியிலிருந்தும் , எவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற விடாது சஜித் பார்த்துக் கொண்டார். இப்படி பிரச்சனைகள் உக்கிரமான போது, சஜித், டிரான் அலசின் ரொஸ்மிட் பிளேசிலுள்ள காரியாலயத்துக்கும் , கிளி மகராசாவின் பேபுறூக் காரியாலயத்துக்கும் , பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கும் போய் வந்து கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டத்துக்காக மக்கள் நிறைந்து வழிந்த பகல் 2 மணியளவில், சஜித் மற்றும் ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு வந்து , மக்கள் முன் கைகளை உயர்த்தி முன் வரிசையில் நின்று கொண்டு ஐதேக ஆதரவாளர்களை ஏமாற்றினர்கள். அப்பாவிகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் அன்று அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவை, அகில மற்றும் சாகல ரணிலிடம் சொன்ன போது, ரணில் எதிர்கால அரசில், மீண்டும் நிதியமைச்சை ரவிக்கு தருவதாக சொன்னார். இதனால் மங்கள பின் தள்ளப்படதாக பலர் உணர்ந்தார்கள். பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும், ஊடகங்களிலும், எந்த பலமும் இல்லாத நிலையை கொண்ட ஐதேக, ராஜபக்சவினரது தாக்குதலுக்கு உள்ளாகி மைத்ரியின் அதிகாரத்தை வெல்வதற்கு முகம் கொடுத்தவர்கள் என்றால் , அவர்கள் இளம் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். விசேடமாக ரவூப் ஹகீம் மற்றும் ரிசாட் பதியுதீன் போன்றவர்களை , தக்க வைத்துக் கொள்ள , சூரா கவுன்சில் என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பு பெரும் பங்கு வகித்தது. அவர்கள் மெக்காவுக்கு பயணமானதும் அவர்களது அழுத்தத்தின் காரணமேயாகும். சபாநாயகர் கேமை கையிலெடுத்தார். ஆர்ப்பாட்டத்தின் பலத்தை பார்த்த மகிந்த அஞ்சத் தொடங்கினார். தன்னால் பெரும்பான்மையை பெற முடியாது என உணரத் தொடங்கினார். ரணிலோடு டீல் ஒன்றை செய்ய கோட்டாபயவை அனுப்பினார். ஆரம்பத்தில் இசினி விக்ரமசிங்க மூலம் திலித் ஜயவீர ( தெரண உரிமையாளர்) , ரணிலை சந்தித்தார். அதன் பின்னர் கோட்டாபய ரணிலை சந்தித்தார். அதன்பின் ரணில் தொடர்ந்து அலரி மாளிகையில் தங்குவதற்கும் , மகிந்த பிரதமராக தொடர்வதும் என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என ரணில் தெரிவித்தார். அதைக் கேட்டு பலர் குமுறி எழுந்தனர். சிலர் எக்காளமிட்டு சிரித்தனர். எது எப்படியோ சபாநாயகர் இவை எதையும் உணராத நிலையில் உள்ளக - வெளிநாட்டு அமைப்புகளோடும், லக்ஸ்மன் கிரியல்ல, சம்பிக்க ரணவக்க , ரரஜித்த சேனாரத்ன, ரவூப் ஹகீம், ரிசாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசனோடு ஒரு புறமாகவும் , அடுத்த பக்கத்தில் தமிழ் கூட்டமைப்போடும், ஜேவீபீயோடும் இணைந்து , பாராளுமன்றத்தில் ராஜபக்ச ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்பட வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு வெளிநாட்டு தூதுவர்களை பாராளுமன்றத்துக்கு வரச் செய்தும், தனியாக சந்தித்தும் , சர்வதேச ரீதியாக மகிந்தவை தனிமைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். அதற்குள் மூக்கை நுழைக்க முற்பட்ட ரணிலை, வாய் திறக்க வேண்டாம் எனக் கடுமையானார். ரணில தாண்டி செயல்பாடுகள் நகரத் தொடங்கியிருந்தன. மெது மெதுவாக சபாநாயகர் , சிரிசேன மற்றும் மகிந்தவை அரசியலமைப்பினூடாக இறுக்க சாமர்த்தயமானார். கடைசியில் , நவம்பர் 2ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டப் போவதாகத் தெரிவித்தார். அதன்போது 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த தரப்புக்கு எதிராக இருப்பதை அறிவுறுத்தினார். அதைக் கேட்டு கலங்கிப் போன மகிந்தவின் சூழ்ச்சி நீதி ஆலோசகர்களான , டிரிபல் சில்வாக்கள் என அழைக்கப்படும் சரத் சில்வா, மனோகர த சில்வா மற்றும் யூ. ஆர் . சில்வா பாராளுமன்றத்தை சட்டத்துக்கு முரணான விதத்தில் நீடிக்கவும் , கடைசியாக பாராளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையான சட்ட ஓட்டைகளை காட்டி நடைமுறைப்படுத்த முயன்றனர். இதேவேளை கரு ஜயசூரியவின் முயற்சியின் பலனாக, அமெரிக்க தூதுவராலயம் கோட்டா - பசில் ஆகியோரின் சொத்துகளையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கப் போவதாக தெரிவித்தனர். அதைக் கேட்ட பசில் - கோட்டா இருவரும் ஆடிப் போயினர். இதுபோல ரசியாவின் பூட்டினின் நண்பர்களது சொத்துகளையும், வங்கி கணக்குகளையும் , அமெரிக்கா அண்மையில் முடக்கி உள்ளது. அதோடு கோட்டாவின் தேசாபிமான பேச்சுக்கள் நின்று போயின. வியத்மக , எலிய ஆகிய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. பசில் மெதுவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து, மொட்டு கட்சியை பலமாக்க ஆலோசனை வழங்கினார். தேவைப்படும் பட்சத்தில் ஐதேவுடன் இணைந்து மைத்ரிக்கு எதிராக , கண்டன தீர்மானம் ஒன்றையும் கொண்டு வர ஆலோசனை செய்தார். பாராளுமன்றத்தை கலைப்பதாக தெரிவித்ததோடு, வெளிநாடுகளில் வாழும் பிரசைகளின் கடும் கண்டனங்கள் பரவலாக வெளியாகத் தொடங்கியது. தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய, மகிந்தவின் பழைய நண்பர். அவரும் பசிலின் தாளத்துக்கு ஆடத் தொடங்கினார். ஐதேகவினர் அவரை சந்தித்த போது தான், பழைய கொமியூனிஸ்ட்வாதி என்றார். ஆனாலும் பாராளுமன்றத்தை கலைப்பதிலும் புதிய தேர்தலை கொண்டு வருவதற்குமான கெசட்டை தயாரிப்பதிலும் மகிந்த தேசப்பிரிய திரை மறைவில் கடும் பணியொன்றை செய்தார். எது எப்படியோ சிவில் அமைப்புகளும் சபாநாயரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் இருந்த ஏனைய இரு அங்கத்தவர்களுமான ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அனில் ஆபசேகர ஆகியோரின் பிடிக்குள் இறுகிப் போனார். அதனால் உடனடி தேர்தல் ஒன்றை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ராஜன் ஹூல் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கு எதிராக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவை அனைத்தும் உச்ச நீதிபதிகளுக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்தது. உச்ச நீதிமன்ற விசாரணை 12ம் திகதி ஆரம்பமானது. பெரும்பாலும் 15ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என ஐதேவினரால் நம்பப்பட்டது. கடும் சட்ட விவாதங்கள் நடந்தன. 13ம் திகதி இடைக்கால தடையுத்தரவு கிடைத்தால் 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதியின் கெசட் அறிவிப்பு செல்லுபடியாகும் என்பது மகிந்த எதிர்பாளர்களது , எதிர்பார்ப்பாக இருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்ற அடுத்து கட்ட திட்டவாக்கங்களில் ஈடுபட்டனர். 13ம் திகதி தீர்ப்புசாதகமானால், 14ம் திகதி பாராளுமன்றம் செல்வதென்றும் இடைக்கால உத்தரவின் போது, மகிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 13ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதெனக் கனவோடு இருந்த பசில் தரப்புக்கு , உச்ச நீதியரசர் நளின் பெரேரா உட்பட ஏனை இருவரதும் கருத்துக்கமைய கொடுக்கப்பட்ட தீர்ப்பு பேயறையாக வீழ்ந்தது. பாராளுமன்றம் 7ம் திகதி முதல் உயிர் பெற்றதோடு, பாராளுமன்றத்தை மீண்டும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் , ஒரு நாளாவது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனிடையே சர்வதேச அழுத்தங்கள் மைத்ரியின் குரல்வளையை இறுக்கத் தொடங்கியது. தனக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர, ரணில் - மகிந்த தரப்பினர் ஈடுபடுவதாக மைத்ரி உணரவும் தொடங்கினார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நீர்க்கச் செய்து மொட்டு கட்சியை பலமாக்கிய பசிலின் முயற்சிக்கு பின், மைத்ரியின், ஜனாதிபதி கனவு இல்லாமலே போனது. எனவே 13ம் திகதி பாராளுமன்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருந்த, அவரது முயற்சியை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 14ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டடிய போது மகிந்தவின் அனைத்து எதிர்பார்ப்பும் தினேஸ் கையிலிருந்தது. தினேசுக்கு தனிப்பட்ட ரீதியாக ஒரு கறை இருக்கிறது. 2005 - 2010 வரையான காலப்பகுதியில், நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 15 மிலியன் பணத்தைக் கையாடிய பைலை , மகிந்த கையில் வைத்துக் கொண்டு, தினேஸிடம் பாராளுமன்றத்தை சிதைக்கும் சதியை செயல்படுத்த தள்ளிவிட்டார். ஆனால் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒரு சிங்கத்தைப் போல சபையில் செயல்பட்டதோடு, ஐதேகவின் டீல்களுக்கு அடிமையாகாத இளம் உறுப்பினர்கள் அவருக்கு அன்று கவசமானார்கள். அதன் பிரதிபலனாக அனுரகுமார திசாநாயக்க கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேணைக்கு 122 - 0 என வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முன் முகம் கொடுக்க முடியாத, மகிந்த மற்றும் நாமல் பாராளுமன்றத்தை விட்டு பின் கதவால் வெளியேறினர். இருப்பினும் நீதிக்கு தலை வணங்காது பேராசையோடு தனக்கு கிடைத்த பிரதமர் பதவியிலிருந்து விலக மகிந்த இன்னமும் தயாராக இல்லை. அதிரடிப் படையினரை தமது அமைச்சுகளுக்கு அனுப்பி , பாராளுமன்றத்தில் பிரதமராக தொடர்ந்து நிற்பதென 14ம் திகதி முடிவு செய்தார். சிங்களத்தில் : பீ. எம். சந்திரகீர்த்தி தமிழில் : அஜீவன் தொடரும் .........

Monday, 19 November 2018


அவசியம் வாசிக்கவும்,முடிந்தால் பகிரவும் என் உள்ளம் குமுறி அழுத தருணம் நான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு(தெல்லிப்பளை) கடந்த சில நாட்களாக நம் திருமலை மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும்,கவலையையும் நிறைத்தது இன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன் இங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட திருமலை மண்ணின் இளைஞர்கள் இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது இவர்கள் பாவித்த போதைப்பொருள்கள் கஞ்சா,குளிசைகள்,ஒடிக்கலோன்,ஒருவகை ஜெல் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம்,இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை ஆனால் அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எதிர்காலமும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும்,இறைவனிடத்தில் என் கடமைக்காகவுமே இதனை கேட்டுக்கொள்கிறேன். சாராயத்தைவிட பல மடங்கு மிக மோசமானதே இந்த கஞ்சாவும்,குளிசைகள் பாவனையும் இதன் விளைவு குருகிய காலங்களில் உங்கள் மூளையை மந்த நிலைக்கோ,மனநோயாளிகளாகவோ மாற்றும் என்பது நிச்சயம் உங்களைப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதன் முகவர்களும்,விற்பனையாளர்களும் இதன் மூலம் உழைக்கும் பணம் உங்கள் பரம்பரையை நிச்சயம் நாசமாக்கும்,இப்படி பல இளைஞர்களை காவுகொள்ளும் ஒரு தொழில் தேவைதானா? ஒரு சகோதரனாக உங்களிடம் வேண்டுகிறேன்,உங்கள் காலில் விழுந்தேனும் உங்களை கேட்க விரும்புகிறேன் அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த தொழிலை விடுவது மட்டுமல்லாது இவ்வளவு காலம் செய்த தவறுகளுக்காக நீங்களே இதனை தடுக்க முன் வந்து இளைஞர்களையும் எங்கள் எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்போம்j

Saturday, 17 November 2018

இலங்கையின் செய்திகளை வேகமாக பெற இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள், செய்திகளை படியுங்கள் Happy brithday ROSHEN 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்


Happy brithday 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்

Share share share👉 💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...


💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...
💊 முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும் 💊 அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும் ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 💊 ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..காய்ச்சலோட போக்க பாருங்க.. 💊 முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 💊 ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 💊 முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 💊 அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும் 💊 ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 💊 ரூல் நம்பர் ஒன்னு டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும் 💊 ரூல் நம்பர் டூ நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி , ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும். 💊 ரூல் நம்பர் 3 இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுகாகாம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 💊 இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கு போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்💊 பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Wednesday, 7 November 2018

மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன்.


மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன். நானும் எனது கட்சியும், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமருக்கு ஆதரவு என்று வரும் செய்திகளை நான் மறுக்க விரும்புகின்றேன் . பாராளுமன்ற பெரும்பான்மையை புதிய பிரதமர் நிரூபிக்கும்வரை, இந்த பதவி நியமனமானது பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது என்பதே எங்களது தற்போதைய நிலைப்பாடு. #ரஊப்_ஹக்கீம்

Monday, 5 November 2018

உலகின் தலைசிறந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரும், 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இலங்கை வெல்ல காரணமாக இருந்தவரும் ஆன நட்சத்திர சுழல் வீரருமான ரங்கன ஹேரத் நாளைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.


2014 T20 உலகக் கிண்ணம் - இலங்கை அணி செமி பைனல் செல்ல நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலை. இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களையே பெற்றது. அப்போதைய அதிரடி வீரர்களான பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு இது பக்கோடா சாப்பிடுவது போன்ற ஒரு வெற்றி இலக்கு. இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்கள் பெற்ற உடனேயே தோல்வியை தழுவி உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறும் என்றே பலரும் நினைத்தனர். எனினும், இந்த நினைப்புக்கள் அனைத்தினையும் தவிடுபொடியாக்கினான் ரங்கன ஹேரத், தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் எடுத்த ரங்கன ஹேரத் நியூசிலாந்து அணியினை வெறும் 60 ஓட்டங்களுக்குள் மடக்க உதவினார். குறித்த போட்டியில் வெறும் 3 ஓட்டங்களை விட்டுத்தந்து ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரங்கன ஹேரத் கைப்பற்றிய இந்த விக்கெட்டுக்களாலும், தோல்வியடைய வேண்டிய குறித்த நியூசிலாந்து போட்டியில் வென்றதன் காரணமாகவே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்றது. எமக்கு இப்படியான ஒரு மறக்க முடியாத வெற்றியினைப் பெற்றுத் தந்த சாதனைக் கதாநாயகன் நாளை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றான். நன்றி தலைவா!

நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!


நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்