Sunday, 21 October 2018


1. பர்ஜ் கலீபா - துபைய் - 2016 ( World tallest ) 2. பர்ஜ் கலீபா மஹிந்த பின் நெலும் குல்லும் - கொழும்பு - 2018 எம் தேசமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது !

இலங்கையினை சேர்ந்த இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் டில்சாட், இங்கிலாந்தை சேர்ந்த லங்லி மில்ஸ் அணிக்கு விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள்!

#கட்டாரில்_பலத்த_மழை கடும் மழை காரணமாக கட்டார் தோஹா நகரம் நீரில் மூழ்கியுள்ளது. வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. -சர்வதேச ஊடகம்

Thursday, 18 October 2018

இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!!


இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!! வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார். இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் 25 கிலோ கிராம் நிறையை கொண்டுள்ளது. மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் ரொக்கட் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தயாரிப்பதற்கான உதவியை தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார். ரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுபதென்றால் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாக கிடைத்துள்ளது. அதற்கமைய நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிஹான் செலவிட்டுள்ளார். அதன் முதலாவது பயணத்திற்கு 9 இலட்சம் ரூபாய் செலவாகும் எனவும், அந்த செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள அண்டை நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Wednesday, 17 October 2018


இப்படிக்கு தந்தை இரு பிள்ளைகளையுடைய 23 வயதுடைய இளம் தாயொருவர் தனக்குத் தெரிந்த ஒரு வயது முதிர்ந்த சகோதரியோடு இன்று எமது கல்லூரிற்கு தனது ஆவணங்களை எடுத்துக் கொண்டு தொழில் தேடி வந்தார். திடீரென நேர்முகத் தேர்வுகளைப் பொதுவாக நாம் வைப்பதில்லை. இருப்பினும் அவரது நிலமைகளை கருத்திற் கொண்டு என்னிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இன்ட வியூவில் அவருக்குரிய தகைமை இருக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அத்தோடு அந்த இளம் தாய் களைத்துப் போயிருந்ததை அவதானித்தேன். வாழ்வில் போராட்டங்களில் சிக்கி தவிக்கும் ஒருவராக இருக்க வேண்டுமென எண்ணி, நேர காலம் பாக்காது கவுன்ஸிலர் பாத்திரம் ஏற்று, அவரோடு உரையாடத் தொடங்கினேன். நான் ஊகித்த பிரச்சினை அவரிடம். இருந்தது. உயர் தரத்தில் ஒரு வருடம் படித்துக் கொண்டிருந்த போதே அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடித்த நாளிலிருந்து பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். இரு சகோதரியோடுள்ள ஒரு மணமகனையே இவருக்கு மணம் முடித்தது வைக்கப்பட்டிருந்தது. மாப்பிளையின் தாய் கஷ்டப்பட்டு வளர்த்த ஒரே மகன் தங்களை மறந்து மனைவியின் பக்கம் சாய்ந்திடுவார் என்ற பயத்தில் அவரது மனைவியை நெருங்க விடாமல், பேச விடாமல் தடுத்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, மனச் சோர்வுக்கு ஒரு மாதம் மருந்து குடித்து ஓரளவு தேறியுள்ளார். விவாகரத்துக்குப் போய் காதி நீதிமன்றத்தில் சமாதானம் ஆகி, மீண்டும் சேர்ந்துள்ளார். மீண்டும் நண்பர்களோடு சேர்ந்து கூத்தடிப்பதோடு, சம்பளத்தை வீண்விரயம் செய்து, குடும்பத்தை பார்க்காது விட்டதோடு மட்டுமல்ல தொடர்பே இல்லாமலும் அவரது கணவன் தற்போது போய்விட்டார். எனவே, இந்த இளம் தாய் கையறு நிலைக்கு ஆளாகி விட்டார். முதல் பிள்ளை தந்தையின் ஏக்கத்தில் உழல்வதாலும் இவர் பெற்றோரில் தங்கி வாழ நேரிட்டதாலும் தொழில் செய்யும் நிலைக்கு தனது ஆறு மாத இரண்டாவது குழந்தையோடு தள்ளப்பட்டதாலும் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு பலவந்தமாக உட்படுத்தப்பட் டதாலும் மேலும் மனச்சோர்வு நிலை அவரிடம் அதிகரிக்க ஏதுவானது. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளோடு அங்குமிங்கும் அவர் அலைந்து தொழில் தேடுகிறார். கற்கின்ற வயதில் திருமணம் முடித்து கொடுத்ததால் தகைமைகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். இவ்வாறான நிலைக்கு தறுதலையான கணவனே மூல காரணம். இதற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க ஊர்களில் எந்த சபைகளும் இல்லை. பள்ளிகளும் இல்லை. இலகுவாக விவாகரத்து இலாபமாக கிடைக்கச் செய்யப்படுவதே தீர்வாக பொதுவாக அமைந்து விடுகின்றது. ஆண்களாலே பொதுவாக அநீதம் இழைக்கப்படும் இந்த அவல நிலை சமூகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த அறப் போரில் ஈடுபட பாரிய வேலைத் திட்டம் ஒன்று ஊர் தழுவிய மட்டத்தில் நியாயமான முறையில் ஏற்படுத்தப்படாத வரை குறிப்பாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தகவள் எம். ரிஸான் ஸெய்ன்.

~*அல்லாஹ்வுக்காக இதை படிக்கவும்*~


~*அல்லாஹ்வுக்காக இதை படிக்கவும்*~ ஹிங்குள்ள பகுதியை வசிப்பிடமாக கொண்ட Shalik என்ற சிறுவன் 3மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தட்போது மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். தூய்மையான உள்ளங்களே!கன்டிப்பாக நீங்கள் இதை share செய்வீர்கள் என நம்புகிறேன்.இந்த சிறுவனுக்கு குணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.நீங்கள் யாருக்காக மன்றாடி துஆ செய்கிறீறோ மலக்குமார் உங்களுக்காக துஆ செய்வார்கள்.இதை பொய் என்று நினைக்காமல் எனது அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே நீங்கள் இதனை பகிர்ந்து அவருக்காக பிரார்த்தியுங்கள். அல்லாஹ் உங்களை பாவங்களில் இருந்து தள்ளிவைப்பான்.

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு


🔘இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு 🔘 வனசீவராசிகள் பாதுக்காப்பு தினைக்களம் 🔘 க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது 🔘 கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதன் விபரங்களும் கல்வி தகமைகளும் ✔️1. பங்களா பொறுப்பாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= ✔️2. இயந்திர இயக்குனர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= ✔️3.உதவி பங்களா பொறுப்பாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 36,410/= ✔️4.வெளிக்கள உதவியாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 36,410/= ✔️படகு செலுத்துனர் க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= 🔘விண்ணப்ப முடிவு திகதி:-30.10.2018 🔘இந்த வேலையினது விபரங்கள் மற்றும் விண்ணப்படிவம் தேவையெனின் நீங்கள் #DWC இன் இணையதலத்தில் Search பன்னுங்கள்
🔘நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #share பண்ணுங்கள் ஏனையோருக்கு உதவியா இருக்கும்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்