Sunday, 9 September 2018

நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு


நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர். அதற்கு, ”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்


இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக சொல்வதை நான் நம்பவில்லை. ஆயுதக் குழுக்களாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். அமைச்சர்: சரத் பொன்சேகா.

Friday, 31 August 2018

உங்கள் *மெளலவி நண்பர்களுக்கு* அதிகம் பகிருங்கள்


*மெளலவி சான்றிதழைப்* பெற்ற 35 வயதுக்குட்பட்ட நபரா? *நீங்கள்* *ஆம். எனில்,* ௧ல்வி அமைச்சின் கீழ் நீங்களும் ஓர் *இஸ்லாம் பாட ஆசிரியராகலாம்* *௧ல்வித் தகைமைகளாக* +O/L தமிழ் அல்லது சிங்களத்தில் *S* சித்தி +A/L பரீட்சையில் 03 பாடங்களில் *S* சித்தி முடிவுத்திகதி:- *2018-09-28* *வயது எல்லை* 21-35 *உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்* மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள *F Maclanka* (Send to) *40404* விண்ணப்பபடிவங்களை *மெக் லங்கா - கல்வி - தொழில் - வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையினூடாக* தபாலில் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து கல்வி வழிகாட்டல் சம்பந்தமான தகவல்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள *உங்கள் பெயர் மற்றும் ஊரைக் குறிப்பிட்டு* கீழுள்ள ஏதேனும் ஒரு இலக்கத்திற்கு *Add Maclanka* என *type* செய்து *whatsapp* ஊடாக *SMS* செய்யுங்கள். *விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள* 077 180 2 103

முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை


முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் இன்பராசா கந்தசாமி முன்வைத்த கருத்துக்கள் எவ்வித ஆதாரமும் அற்ற, பாராதூரமான போலிக் குற்றச்சாட்டாகும். விடுதலைப் புலிகளிடம் இருந்த 5ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாட்; பதியூதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு? விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குழைத்து சாதாரண மக்களை குழப்பி நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் - முயற்சியுமாகும். இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி முன்வைத்த போலிக் குற்றச்சாட்டினை பெரிதுபடுத்தும் வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ராவன்னா பலய, தேசிய ஒறுங்கமைப்பு ஒன்றியம் மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும் - கட்சிகளும் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களினாலும் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன், இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் ? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியவசியமாகும். இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் - என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 29 August 2018

இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்....


இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்.... #மைக்கேல் ஜோசஃப் ஜாக்ஸன் பிறந்த தினம்.... *அமெரிக்காவின் இன்டியானா மாகாணம் கேரி (Gary) என்ற இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் (1958). *தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஒரு இசைக் கலைஞரும்கூட. *தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்தியக் குழுவில் இசைத்து வந்தார். 6 வயதில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாடல் போட்டியில் சிறுவன் முதல் பரிசு பெற்றான். *இந்த வெற்றி, இசை ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அண்ணன்மார்கள் இணைந்து ஆரம்பித்த ஜாக்ஸன்-5 இசைக் குழுவில் அங்கம் வகித்தான். *உலகளவில் பிரபலமான அப்பல்லோ தியேட்டரில் ஜாக்ஸன்-5 குழுவின் முதல் ஆல்பத்தை 1982-ல், பிரபல பாடகி டயானா ராஸ் வெளியிட்டார். இந்தச் சிறுவனுடன் இணைந்து தொடர்ந்து பாடி வந்தார். இதனால், உலகம் முழுவதும் இவனது புகழ் பரவியது. 9 வயதிலேயே நட்சத்திர அந்தஸ்து வசப்பட்டது. 24-ம் வயதில் இவர் வெளியிட்ட ‘த்ரில்லர்’ இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். *இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. *பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். *கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். *இவரது ‘பிளாக் அன்ட் ஒயிட்’ என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. *50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். *இன்றுவரை இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான். *இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன. *த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் ஆகிய ஆல்பங்கள் இன்றும் இளைஞர்களை மெய்மறக்க வைக்கும் இசைப் பொக்கிஷங்கள். *நெற்றியின் முன் சரிந்து விழும் முடிக்கற்றையோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் தோன்றிய உடனேயே ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும். *பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை, இவர். *அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக் கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம். *இவர் குறித்த பல சர்ச்சைகள் வலம் வந்தாலும், எதுவுமே இவரது புகழை மங்கச் செய்ததில்லை. *இன்றளவும் பாப் இசையுலகின் ஈடுஇணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.

●இது உலமாக்களின் எச்சரிக்கை ●


*(Miu)*எனும் சுருக்க குறியீடு இலங்கையில் அமைந்துள்ள ஒரு {சியா }அமைப்புடைய பல்கலைக்கழகத்துடைய குறியீடாகும் இந்த குறியீடு இடப்பட்டு வரும் அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட அல்லது வேறு மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்கள் இன்னும் போட்டி பரிட்சைகள் அனைத்தையும் தவிரிந்து இருங்கள் ●இது உலமாக்களின் எச்சரிக்கை ●

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்