Wednesday, 14 March 2018

‘பொஹோம ஸ்தூதி’ (ஆதில் அலி சப்ரி) ‘முஸ்லிம்கள் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதை விரும்பாதவர்களே கடைகளை அடையாளம் காட்டி, தாக்குதலுக்கு உதவினர். அவை தினமும் சந்தித்துக்கொள்ளும் முகங்கள். அவர்கள் அடுத்தநாளே எம் முன் வந்துசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாம் அவர்களுக்கு கூறியதெல்லாம் ‘பொஹோம ஸ்தூதீ’ (மிக்க நன்றி) என்பது மாத்திரமே!’ கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று கண்டியில் சிங்கள இனவாதிகளால் தாக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கும் விஜயம்செய்து- சம்பவங்களை ஆவணப்படுத்தவும், அதிகமான போலி செய்திகளுக்கு மத்தியில் மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவும் முயற்சித்தோம். அதனடிப்படையில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள், வீடுகள், வியாபார நிலையங்களை பார்வையிட்டோம். நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களிடம் உரையாடினோம். அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்தோம். முடியுமானவரை அவர்களுக்கு ஆறுதலும் கூறினோம். கண்டியில் தாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் குரல்களை இங்கே தொகுத்து தருகின்றேன். நான் கட்டுரையை ஆரம்பித்துள்ள பொஹோம ஸ்தூதீ என்ற பகுதி, கண்டி மெனிக்ஹின்ன பள்ளிவாசல் தலைவர் அப்துல் றவூப் என்னிடம் உரையாடியபோது தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதியாகும். கட்டுகஸ்தோட்டையில் இருந்து வத்தேகம பாதையில் இருக்கும் ஊரே மெனிக்ஹின்ன. இங்கு 18 முஸ்லிம் குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 22 கடைகள் உள்ளன. மெனிக்ஹின்ன பள்ளிவாசலுக்கு தீவைக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் உடன் செயற்பட்டதால் குறைந்த பாதிப்புகளுடன் பள்ளிவாசல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெனிக்ஹின்ன பள்ளிவாசலின் தலைவர் அப்துல் றவூப் மேலும் கருத்து தெரிவித்ததாவது, ‘இந்த பள்ளிவாசல் 114 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகும். பள்ளிவாசலை அழிக்கும் முயற்சியை பொலிஸார் முறியடித்தனர். சம்பவத்தில் பொலிஸார் பொறுப்புடன் நடந்துகொண்டதை தெரிவிக்க விரும்புகின்றேன். இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாதென்பதே இனவாதிகளின் நோக்கம். மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவும் மெனிக்ஹின்னவைத் சேர்ந்தவர். இங்கிருந்த சிங்களவர்கள் முஸ்லிம் கடைகளை அடையாளம் காட்டினர். அதனடிப்படையில் 4 கடைகளும் 1 வீடும் தாக்கப்பட்டன. நாம் நாளாந்தம் முகம் பார்த்து கதைப்பவர்களே எமக்கு இவ்வாறு செய்தனர். அவர்களிடம் கூறவேண்டியது போஹோம ஸ்தூதி (மிக்க நன்றி) என்பதே-’ என்று கூறிமுடித்தார். முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள் குறித்து வெளியான செய்திகளில் பல உண்மைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. அதுகுறித்து நம்பகத்தன்மையான அறிக்கையொன்றை முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கண்டி பிராந்தியத்தில் முஸ்லிம் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 300க்கு அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 62 வீடுகள் முற்றாக வும், 79 வீடுகள் பகுதியாகவும், 17 பள்ளிவாசல்கள், 91 வியாபார நிலையங்கள் முற்றாகவும், 22 வியாபார நிலையங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 60 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. திகன மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து திகன ரஜவெல பிரதேசவாசி எஸ்.எம்.நியாஸ் கான் கருத்து தெரிவிக்கும்போது, ‘ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இனவாதிகள் ஊர்வலமாக வந்தனர். பள்ளிவாசல் பாதுகாப்புக்கு இருந்த ஊர் மக்களை விசேட அதிரடிப் படையினர் வீடுகளுக்கு அனுப்பினர். எனது வீடு பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்ததால் நான் பள்ளிவாசலில் இருந்தேன். அவர்களின் ஊர்வலத்தை வீடியோ செய்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு விரட்டி வந்தனர். பள்ளிவாசல் அருகே இருந்த நான் அவர்களிடம் பிடிபட்டதும் இளைஞன் தப்பிவிட்டான். என்னை அதிகமானோர் சூழ்ந்து தாக்கினர். ஒரேயொரு பொலிஸ் உத்தியோகத்தரைத் தவிர வேறு யாரும் என்னைக் காப்பாற்றவில்லை. 20க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கடமையில் இருக்கும்போதே மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலை தாக்கி தீயிட்டனர். அல்குர்ஆன் பிரதிகளை தீயிட்டு, அதன்மேல் சிறுநீர் கழித்துள்ளனர். பள்ளிவாசலில் 45 நிமிடங்களுக்கு மேல் அட்டகாசம் அரங்கேறியுள்ளது. சம்பவ தினத்தன்று அதிகாலை 5மணியில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கான காலை உணவும், பகல் உணவும் பள்ளிவாசலில், ஊர் மக்கள் இணைந்து சமைத்து வழங்கினர். அனைத்தும் முடிந்தபின்னரே ஆகாயத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். விசேட அதிரடிப் படையினர் பள்ளிவாசலில் சாப்பிட்ட சாப்பாட்டுக்காவது விசுவாசமாக இருந்திருக்கவேண்டுமே!’ என்றார். பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் எறியப்பட்டுள்ளன. வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறிருக்கையில் பள்ளிவாசலை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்காக விடுவது ஆபத்தானதாகும். முழுமையாக புனர்நிர்மாணம் செய்வதே வணக்கவழிபாடுகளுக்காக ஒன்றுதிரளும் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும். பள்ளிவாசலின் சேத விபரங்களை வெளிப்படையாக நோக்குவதைவிட, தர நிர்ணய அறிக்கையொன்று பெறுவதே பாதுகாப்பானதாகும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இங்கு வந்த பிரதமரும், அமைச்சர்களும் நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக வாக்களித்தனர். அவை பேச்சுக்களுடன் மாத்திரம் நின்றுவிடாது செயற்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக திகன மஸ்ஜிதுன் நூர் பரிபாலன சபைத் தலைவர் அஹமத் ஷிப்லி தெரிவித்தார். இனவாதிகளின் அட்டூழியங்களால் பல வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள அறிக்கையில் பார்த்தோம். கடைகள் தீக்கிரையாக்கப்பட்டவர்களின் பொருளாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித தடையும் இன்றி உழைத்து, வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளன. அவர்களில் சிலரது குரல்களுக்கு செவிதாழ்த்தக் கிடைத்தது. முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட திகன ஷாக்கிரா மோட்டர்ஸ் உரிமையாளர்களுள் ஒருவரான முஹம்மத் நிலாம் கருத்து தெரிவிக்கும்போது, ‘நாம் ஷாக்கிரா மோட்டர்ஸ் என்று எமது தங்கையின் பெயரில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்தோம். நான், நானா மற்றும் தந்தையும் இணைந்தே இந்த கடையை நடத்தி வந்தோம். அவர்களின் ஊர்வலம் வரும் போது கடையை அடைக்க கூறினர். நாம் கடைகளை மூடிவிட்டோம். அவர்கள் எமது பொருளாதாரத்தை முழுமையாக அழித்துவிட்டனர். ஊரின் வியாபாரிகள் பலரினதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டஈடு தருவதாக வாக்களித்துச் செல்கின்றனர். நாம் இன்னுமே பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.’ 17 வருட உழைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலைமைக்கு தனது வியாபாரத்தை கொண்டுவர மேலும் 17 அல்லது 20 வருடங்களை செலவழிக்கவேண்டியேற்படும் என வியாபாரி முஹம்மத் மலிக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும்போது, ‘செவ்வாயன்று 6ஆம் திகதி இரவு 11மணிக்கு எனது வியாபார நிலையத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஊரார் தீயணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரிப்பாகங்கள் அனைத்துமே தீக்கிரையாகியுள்ளன. கடையின் 95 வீதமான பொருட்கள் தீக்கிரையான பின்னரே தீயணைப்புப் படையினர் தலத்தை வந்தடைந்துள்ளனர். ஒரு கோடிக்கு அதிகமான பொருட்கள் அழிந்துபோயுள்ளன. எனது 17 வருட உழைப்பு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு முரணான காரணத்தால் எவ்வித காப்புறுதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அமைச்சர் றவூப் ஹக்கீம் மடவளையில் தங்கியிருந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருந்தார். எனது வியாபார நிலையம் எரிக்கப்பட்டபோதும், நான் ஸ்தலத்திற்கு வரமுன்னர் அமைச்சரவர்கள் இங்கு வந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.’ திகன இனவாத சம்பவத்தின் கோர நிகழ்வாக பதிவாகியிருந்தது மஸ்ஜித் லாபிர் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீட்டில் உயிரிழந்திருந்த 24 வயதுமிக்க அப்துல் பாசித்தின் சம்பவமே திகன இனவாத அட்டூழியத்தின் உச்சமாகும். நாம் அப்துல் பாசித்தின் தந்தையை சந்தித்தோம். விடயங்கள் குறித்து பேசினோம். எமது ஸலாத்திற்கு பதில் கூறிய அவரது வாயிலிருந்து அழுகையைத் தவிர வேறேதும் வெளிப்படவில்லை. அப்துல் பாசித்தின் சகோதரன் பாஸில் மௌலவி எங்களுடன் உரையாட ஆரம்பித்தார். சம்பவம் குறித்து பாஸில் மௌலவி தெரிவித்ததாவது, ‘இது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும். எமது தந்தை ஓர் இருதய நோயாளி. தம்பியின் மரணம் அவரை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெறும் போது, வயோதிபர்களான எம் தாய், தந்தை மற்றும் அப்துல் பாசித் ஆகியோர் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். இனவாதிகள் எமது வீட்டு முன்கதவை உடைத்து வீட்டிற்கு தீவைத்துள்ளனர். வீட்டின் பின்புறமாக வெளியேற வாயில்கள் இல்லை. வீட்டிற்குப் பின்னால் தோட்டத்தில் இருந்த மற்றுமோர் சகோதரன் இவர்களை காப்பாற்ற, வீட்டு பின்பக்க கூரையை உடைத்துள்ளார். தாய், தந்தையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீக்காயங்களுக்கு உள்ளான சகோதரன், அப்துல் பாசித் வீட்டினுள் அகப்பட்டுள்ள விடயத்தை பாதுகாப்பு தரப்பினரிடம் கூறியுள்ளார். எனினும் அப்துல் பாசித்தை மீட்க முடியாது போயுள்ளது. தீக்காயங்களுக்கு உள்ளான சகோதரன் கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது இரண்டு கைகள், கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் இந்த திடீர் சம்பவம் மற்றும் தம்பியின் மரணத்தால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அருகாமையில் உள்ள வீடுகள் தாக்கப்படுகின்றது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. என் வீட்டு கதவையும் உடைக்கிறார்கள் என்பதே அப்துல் பாசித் இவ்வுலகத்தில் பேசிய கடைசி வார்த்தைகள். இப்பிரதேசத்திற்கு வந்த பிரதமர் எம் வீட்டிற்கு வரவில்லை. நாம் அவர்களிடம் பொருளாதாரத்தை கேட்கவில்லை. விரக்திடைந்துள்ள எம் பெற்றோருக்கு ஆறுதலையும், நீதியையும் நிலைநாட்டுங்கள் என்றே கேட்கின்றோம்- என்றார்.’ முஸ்லிம் இளைஞர்கள் சிலரின் தாக்குதலால் 42 வயதான சாரதி குமாரசிங்கவின் மரணத்தை தொடர்ந்தே கண்டியில் இனவாத தாக்குதல்கள் ஆரம்பித்தன. இந்த சம்பவங்களால் உயிரிழந்த இருவருமே இன நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள். அப்துல் பாசித் நல்லிணக்கம் தேசப்பற்று போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டவர் என்பதை அவரது முகநூலைப் பார்த்த சிங்களவர்களும் புரிந்துகொண்டனர். அதேபோன்று, குமாரசிங்கவும் முஸ்லிம்களுடன், பள்ளிவாசல் நடவடிக்கைகளுடன் இணக்கமாக செயற்பட்ட ஒருவர் என பல முஸ்லிம்களும் சான்றுபகர்ந்தனர். மனிதாபிமானத்தை மீறிய இனவாதம் அப்பாவிகள் இருவரது உயிரையே காவுகொண்டுள்ளது. சம்பவம் குறித்து உயிரிழந்த குமாரசிங்கவின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ‘எனது மகன் உயிரிழந்துவிட்டார். சட்டத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இப்போது நடக்கின்றவைகளை பார்த்து கவலையடைகின்றோம். மகன் முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். மகனின் மரணத்தால் இவ்வளவு பிரச்சினைகள் நடைபெறுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இவ்வாறான இனவாத நடவடிக்கைள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.’ நாம் கெங்கல்லை பகுதியில் உள்ள முஸ்லிம் வீடொன்றுக்குச் சென்றோம். வீட்டின் வரவேற்பறையில் பல பாத்திரங்களிலும் நீர் நிரப்பி வைத்திருந்தனர். இவ்வாறு நீர் நிரப்பி வைத்திருப்பது ஏன்? என்று நாம் வீட்டுத் தலைவரைக் கேட்க முன்னரே அவர் கதைக்க ஆரம்பித்தார். ‘நேற்றும்(வெள்ளிக்கிழமை-9) வீட்டுப் பகுதிக்கு நால்வர் வந்தனர். நாம் அவர்களை விரட்ட முற்படும்போது பொலிஸார் எம்மை விரட்டிவிட்டனர். நேற்றிரவும் வீடுகளைக் கொளுத்துவார்களோ! என்ற பயத்திலேயே இருந்தோம். அன்றும் வீடுகளை கொளுத்த முன்னர் குழாய் நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. வீட்டைக் கொளுத்தினால் விரைவில் அணைத்துவிடவே இவ்வாறு பாத்திரங்களில் நீர் சேகரித்து வைத்துள்ளோம்’ என்று அவர் கூறி முடிக்க, மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் கசித்ததை அவதானித்தோம். கட்டுகஸ்தோட்டை எந்தருதென்னை கிராமத்தில் 48 வீடுகளும் 2 பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. 350 பேரளவில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வீடுகளை நோக்கிச் சென்றுள்ளனர். அவர்களின் வீடுகளின் கதவுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பான தங்குமிடமின்றி தவிக்கின்றனர். இன, மத வெறி பிடித்த சிங்கள பௌத்தர்களே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்களே தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் அதிகமானோர் தெரிவித்தனர். பிரதேசத்தில் இனவாதிகளை ஆதரிப்போர் முஸ்லிம் வீடு, கடைகளை அடையாளம் காட்டியுள்ளனர். இதேநேரம், முஸ்லிம்களை பாதுகாத்த, வீடுகளில் தங்கவைத்த எத்தனையோ சிங்கள பௌத்த நல்லுள்ளங்களையும் நாம் சந்திக்க தவறவில்லை. அவர்கள் மீது இனவாதிகளின் மோசமான பார்வை திரும்பக் கூடாது என்பதற்காக அவர்களின் விபரங்கள் இங்கு வெளியிடப்படவில்லை. இலங்கையின் கண்டி உட்பட பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதை சாதாரண ஒருவருக்கும் புரிந்துகொள்ள முடியும். பள்ளிவாசல்களை தீக்கிரையாக்க பெரிய லொரி டயர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வீடுகளையும் வியாபாரஸ்தளங்களையும் விரைவாக தீ வைப்பதற்கு பைகளில் மரத்தூள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் எஞ்சியவைகள் பாதையில் சிதறிக் கிடப்பதை நாம் கண்டுகொண்டோம். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 24க்கு மேற்பட்ட பெற்றோல் குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அண்மையில் தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பெற்றோல் குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேற்படி இனவெறி தாக்குதல்கள் முஸ்லிம்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் இலக்குவைத்து, மேலும் சில அரசியல் இலாபங்களை அடைந்துகொள்வதற்காக பெரியதோர் குழு பின்னணியில் இருந்து திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதையே நிரூபிக்கின்றன. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் இனவாதத்தை ஆதரிக்காத அனைவருமே நம்பிக்கையிழந்துள்ளனர். அளுத்கமைக்கு ஆணைக்குழு அமைத்து, இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்கள் மேலும் பல ஆணைக்குழுக்களை அமைக்கும் தேவையை ஏற்படுத்திவிட்டனர். இலங்கையில் பல சம்பவங்களுக்கும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதும், நியமிப்பதாக வாக்குறுதியளிப்பதும் வேடிக்கையாகிவிட்டது. வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்வதற்காக பிணைமுறி மற்றும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை போட்டிபோட்டுக்கொண்டு வெளியிட்ட அரசாங்கம், தேர்தல் முடிந்ததும் சிபாரிசுகளை செயற்படுத்துவது குறித்த சிந்தனையே இல்லாதிருக்கின்றது. அதுபோன்றல்லாமல், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, அண்மைக்கால இனவாத சம்பவங்கள் அனைத்தையும் ஆராய்ந்து இனவாதத்திற்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ‘வத பெஹெத்’ வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். (ஆதில் அலி சப்ரி)

Monday, 12 February 2018

கல்சியம் குறைபாடிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்போம்... அனைவருக்கும் பகிருங்கள்... உங்களை உணர வைக்கும் கல்சியம் குறைபாடு 21-அறிகுறிகள் இதோ... நீங்கள் போதுமான கல்சியம் கிடைக்கவில்லையென்றால், கவலைப்பட வேண்டியிருக்கும் ஆஸ்டியோபோரோஸிஸ் அல்ல. சிகிச்சை நுட்பங்களுடன் இந்த கல்சியம் குறைபாடு அறிகுறிகளை பாருங்கள். மனித உடலின் மிகுதியான கனிம கல்சியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்புப்புரையின் பாதுகாப்பு ஆகியவற்றில் அதன் முக்கிய பாத்திரத்திற்காக அறியப்படுகிறது. இருப்பினும், எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை தரும் முக்கிய பங்கிற்கு கூடுதலாக கால்சியம் உடலில் உள்ள செல்-சமிக்ஞை வழிவகைகளில் ஒரு தூதுவராக ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. சாதாரண செல்ப் செயல்பாடு, நரம்பு சமிக்ஞைகள், ஹார்மோன் சுரப்பு, இரத்தம் சோர்வு, தசை சுருக்கம் மற்றும் தசை தளர்வு. எனவே கல்சியம் குறைபாடு அறிகுறிகள் இந்த செயல்பாடுகள் மற்றும் ஏராளமான வழிகளில் வெளிப்படலாம். கல்சியம் குறைபாடுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் துரதிர்ஷ்டவசமாக, அநேகமானேர் போதுமான கல்சியம் உட்கொள்வதன் மூலம் உணவில் மட்டும் அல்லது உணவு மற்றும் கல்சியம் சத்துக்கள் மூலம் தற்போதைய பரிந்துரைகளை சந்திக்கவில்லை, எனவே குறைந்த கல்சியம் அறிகுறிகள் பாதிக்கப்படுகின்றனர். [1] மேலும், கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் / அல்லது இரத்தத்தில் கால்சியம் அளவைக் குறைப்பதற்கான பல காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. [2] இந்த காரணிகள் பின்வருமாறு: வைட்டமின் டி(D) குறைபாடுமெக்னீசியம் குறைபாடுஉயர் சோடியம் உட்கொள்ளல்உயர் பாஸ்பரஸ் உட்கொள்ளல் (கோலா மென்மையான பானங்கள் மற்றும் உணவு சேர்க்கைகள் காணப்படும்)நாள்பட்ட சிறுநீரக நோய்அசாதாரண ஒட்டுரோராய்டு செயல்பாடு (கழுத்து / தைராய்டு அறுவைசிகிச்சை அல்லது ஆட்டோ இம்யூன் நோய் காரணமாக)பாரிட்ரிக் அறுவை சிகிச்சை (இரைப்பை பைபாஸ்) [3]மருந்துகள் (புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள், கீமோதெரபி , வலிப்புத்தாக்க மருந்துகள்) கல்சியம் குறைபாடு அறிகுறிகள் கல்சியம் குறைபாடு அறிகுறிகள் பரவலாக வேறுபடுகின்றன-இல்லாத அல்லது லேசான, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. நாள்பட்ட சிகிச்சையளிக்கப்படாத கால்சியம் குறைபாடு பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இதில் கரும்புள்ளிகள் , ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவை அடங்கும் . இருப்பினும், கல்சியம் குறைபாடு எந்தவொரு அறிகுறிகளுடனும் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், குறிப்பாக ஆரம்பத்தில், வளர்சிதை மாற்ற மாற்றங்கள் அல்லது சாத்தியமான செயலிழப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. [4] குறைந்த இரத்தக் கல்சியம் அளவு மற்றும் கல்சியம் இல்லாமை பின்வரும் குறைந்த கல்சியம் அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம்: 1.மயக்கம் 2.இதய செயலிழப்பு 3.நெஞ்சு வலி 4.வாய் அல்லது விரல்கள் மற்றும் கால்விரல்கள் சுற்றி உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு 5.குறிப்பாக முதுகுவலி மற்றும் கால்கள் உள்ள தசைப்பிடிப்பு ;தசை பிளேஸ்(டெடானி) 6.மூச்சுத்திணறல் 7.சிக்கல் விழுங்குகிறது 8.குரல்வளைகளின் பிளேஸ் காரணமாக குரல் மாற்றங்கள்எரிச்சல், 9.பலவீனமான அறிவுசார் திறன்,மன அழுத்தம், பதட்டம், மற்றும் ஆளுமை மாற்றங்கள் 10.களைப்பு 11.கைப்பற்றல்களின் 12.கரடுமுரடான முடி 13.உடையக்கூடிய நகங்கள் 14.சொரியாஸிஸ் 15.உலர்ந்த சருமம் 16.நாள்பட்ட அரிப்பு 17.பல் சிதைவு 18.உட்புறங்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு 19.தசை பலவீனம் 20.கண்புரை 21.ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகள்(முதுகெலும்பு, உயரத்தின் படிப்படியான இழப்பு மற்றும் அதனுடன் இணைந்த குணமுடைய தோற்றம், முதுகெலும்பு, மணிக்கட்டு அல்லது இடுப்பு எலும்பு முறிவுகள்) கால்சியம் குறைபாடு தடுப்பு முறை 50 வயதிற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு தினமும் 1,000 மில்லி கிராம் கல்சியம் சேர்த்து உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் கல்சியத்தையும், வயது வந்தவர்களில் 51க்கு கீழ் 1,200 மி.கி. ல்சியத்தையும் எடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, பெரும்பாலான மக்கள் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர்..... கல்சியம் குறைபாட்டிலிருந்து உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் காப்பதற்கு நாம் உலக தரம் வாய்ந்த இயற்கையான முரையில் தயாரிக்கப் பட்ட நமது கல்சியம் Calcium Powder ஐ உங்கள் வீடுகளுக்கே பெற்றுத் தர முன்வந்துள்ளோம். நாலாவிய ரீதியில் பெற... தகவல்களுக்கு (நாடு முழுவதும் எம்மிடம் மட்டுமே) 0775990507 Mr:-Waseem

Thursday, 8 February 2018

இலங்கையில் மாபெரும் தொழிற்புரட்சி... 400,000Rs-2,400,000Rs வரை மாதாந்தம் ஈட்டும் வாய்பு... இளைஞர்களுக்கு முன்னுரிமை .... வாய்பை கைவிடாதீர்கள்... உலகளாவிய ரீதியில் " முதலீட்டுடனான " ஆரோக்கியம் சம்பந்தமான செயற் திட்டங்கள்... மூலதனம் அற்ற பங்குதாரர்களாக மாற அனைவருக்கும் வாய்ப்பு ... இலங்கை மக்களாகிய நமக்கும் ஒரு உலகளாவிய வாய்ப்பு .... எதிர் பாராத வெற்றிக்கு வழி.... சமூக சேவைக்கு சிறந்த சலுகைகலும், கை நிறைய முதலீட்டும் வாய்ப்பு.... வருடாந்தம் போனஷ் மற்றும் , நவீன "கார்"களை வெல்ல அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப் படும்... உங்கள் திறமைக்கு ஏற்ப வாராந்தம் 600,000 வரை முதலீட்ட நாம் உங்களுடன் கைகோர்ப்போம்..... இன்றே எம்முடன் கைகோர்த்து இனைந்து உங்கள் கணவுகளை நணவாக்கிடுங்கள்... மேலதிக தகவல்களுக்கு :- 0772787797- M.Waseem. ( business partner) :- 0775990507- whatsapp

Friday, 26 January 2018

சிறுவர்கள் மற்றும் பெரியோரது உடல் சமிபாட்டு தொகுதியிலுள்ள அசுத்தங்களை நீக்கி, அதிகூடிய Antibiotics போசனையுடன் ,உணவு ஜீரணித்தல் மற்றும் சமிபாட்டுத் தொகுதியிலுள்ள நச்சுத் தன்மையை நீக்க சிறந்த ஒரு நிவாரணம் , nano technology மூலம் 100% இயற்கை அடங்கிய tienshi FOS SYRUP. 1700Rs only(6 pack's) https://youtu.be/HH_eZudx8ZQ https://youtu.be/yG-jsreS8-E ☝ watch this videos ☝ Online Oder now highland wide :- Whatsapp 0775990507 mr:waseem

Tuesday, 28 November 2017

G.C.E O/L mathematics exam paper

மாணவர்கள் ஆசிரியர்களின் நலன் கருதி கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக பரீட்சையில் வரும் 15 பாடங்களுக்குமான வினாக்களின் தொகுப்பை கா.பொ.த (சா/த) மாணவர்களுக்காக வெளியிடுகிறேன். (ஆசிரியர்களின் வியாபார நோக்கத்திற்கு அல்ல). இதனை இலவசமாக எங்கள் (www.jobstimess.com) இணையத்தில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்யவும். நன்றி ஆசிரியர் - Mr. N. Pirasanna 👇 1)பின்னங்கள் i https://goo.gl/xW4Eb9 2)பரப்பளவு i https://goo.gl/Q77oNz 3)விகிதம் & சதவீதம் i https://goo.gl/1Sxk9L 4)தொடை நிகழ்தகவு i https://goo.gl/2XDKfh 5)தரவுகளை வகைகுறித்தல் i https://goo.gl/23D1oy 6)பங்குகள் & சதவீதம் ii https://goo.gl/Q4vkzD 7)வரைபுகள் ii https://goo.gl/y1xgmf 8)அட்சரகணிதம் ii https://goo.gl/8F5Qdc 9)கூட்டல் & பெருக்கல் விருத்தி ii https://goo.gl/NW65JF 10)திரிகோணகணிதம் ii https://goo.gl/Y1cnWd 11)கனவளவு & மடக்கை ii https://goo.gl/r8uwMz 12)அமைப்பு ii https://goo.gl/1c3SQY 13)தரவுகளை வகைகுறித்தல் ii https://goo.gl/BLVAzV 14)தொடை & நிகழ்தகவு ii https://goo.gl/6pdht4 15)தேற்றங்கள் ii https://goo.gl/awVHwa கேத்திர கணித தொகுப்பு https://goo.gl/JCeEDh முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் How to download this file? DOWNLOAD செய்யும் முறை கீழ் உள்ள link லிங்கை கிளிக் Click செய்து எமது இணையத்தில் உள்ள “DOWNLOAD NOW” என்ற பட்டானை கிளிக் செய்து DOWNLOAD செய்யுங்கள். இதனை மறவாமல் குறைந்து 10 குறூப்களுக்காவது ஷேர் செய்யுங்கள் அதகமான மாணவர்களுக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்.. தினமும் பயனுள்ள தகவல்களை அறிய கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து எமது facebook லைக் பக்கத்தை லைக் செய்ய மறவாதீர்கள் FB Link >> https://goo.gl/D5uZ1q Shared by: www.facebook.com/Al.muhmin.9

Sunday, 19 November 2017

Lagoon facing Coconut Land for sale.

PROPERTY DESCRIPTION 210 perches , Free Hold (Sinnakkara), Beautiful Lagoon facing, Coconut Land for Sale in Kalpitiya tourist area. A rare investment opportunity. This land is ideal for tourist hotels, cabanas and other tourist activities....... Water and power suply available, From the main road 150 meeters ,Kalpitiya town and hospital 1km, Urgent sale.... One perches > 100000 Rs ADDITIONAL INFORMATION Fully grown Coconut Trees and wide road access available. Kalptiya is one of the best tourist areas popular among both locals and foreigners. After end of war land value of Kalpitiya tourist area ever increasing 35% yearly. The Ministry of Tourism Sri Lanka hopes to convert the area to an up market destination with golf courses, cable cars, amusement parks and night entertainment facilities. Deeds are very clear no any encumbrances. More detail :- Waseeim Muhammad Thahir 0775990507 whatsapp/ 0772787797 mobile

Thursday, 2 November 2017

Real religion islam

இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார் டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் ( பிறப்பு: 1959). ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா? “என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” என்பதை அவரே கூறக் கேட்போம் இன் ஷா அல்லாஹ். _______________ “ 1990 ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் ஹன்னா பிறந்தாள். மற்ற குழந்தைகளைப் போன்று அவளின் நிலைமை இல்லை. பிறந்தவுடனேயே அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறும் குழாயில் அவளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஓன்று. இதனைக் கேள்விப்பட்ட நான் அதிர்ந்தே போனேன். எவ்வளவு செலவானாலும் மகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை பரிசோதித்த அந்நிபுணர் சொன்ன வார்த்தை எனக்கு பேரிடியாக விழுந்தது. “அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைப்பது கடினம். அவ்வாறு பிழைத்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை! ” என்றார். அதிர்ச்சியில் உறைந்து போனேன். எனது நிலைமையைப் பார்த்த அவர் கடைசியில் சொன்னார், “ இறைவனிடம் வேண்டுங்கள். சிகிச்சை பலனளிக்கலாம்.” வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் இறைவனைப் பற்றி கேள்விப்பட்டதாக உணர்ந்தேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்க விமானப்படையில் கண் மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். நிறைவான சம்பளம். அழகிய மனைவி, குழந்தை, பெரிய பண்ணை வீடு, இது கடையா? வீடா? என்று கேட்குமளவுக்கு ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைவான வசதிகளுடன் வாழ்ந்தேன். தெளிவாக கூறுவதெனில் பொருளாதார மோகத்தில், உலக சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தேன் எனலாம். ஆதலால், வாழ்க்கையில் எனக்கு இறைவனின் தேவை ஏற்பட்டதில்லை. வேலை பார்ப்பதால் பணம் வருகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றே கற்பனை செய்திருந்தேன். மொத்தத்தில் இறைவனை நம்பாத நாத்திகனாக வாழ்ந்திருந்தேன். இப்போது எனது மகளின் விஷயத்தில் பணம் தோற்றுப் போய்விட்டது.மருத்துவ உலகமும் கைவிரித்து விட்டது. மருத்துவரே, “இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்த பிரார்த்தனை அறையினுள் நுழைந்தேன். எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும் **************** வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன். இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது. மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள். உண்மையான இறைவனைத் தேடி எனது ஆராய்ச்சி . *************** சரியாக நான்கு வருடங்கள் கழிந்திருந்தன. இறைவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராகவே இருந்தேன். எனினும் அதில் நான் தோற்றுத்தான் போனேன். ஏனெனில், உண்மையான இறைவனைத் தேடி யூத மத நூலான தோரா ( பழைய ஏற்பாடு ) மற்றும் யூத மத நூல்களை படிக்கவே செய்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்தியத்தைத் தேடி பல சர்ச்சுகளுக்கு சென்று போதனைகளைக் கேட்டேன்.அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பலமணி நேரங்களை செலவிட்டுள்ளேன்.எனினும் கிறிஸ்தவத்தை என்னால் தழுவ இயலவில்லை. ஏனெனில், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளின் போதனைகள் பைபிளில் நான் படித்தவற்றுடன் ஒத்துப்போகவில்லை. மோசஸின் வழியில் மூன்று இறைத்தூதர்கள் ************** யூத நூல்களில் நான் படித்திருக்கிறேன். இறைத்தூதர் மோசஸை ( அரபியில் மூஸா நபி ) மூன்று இறைத்தூதர்கள் பின்பற்றுவார்கள் என்று. இயேசு கிறிஸ்து ( ஈஸா நபி ) திருமுழுக்கு யோவான் ( John the Baptist - அரபியில் யஹ்யா நபி ) ஆகியோரே இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் யாரென்று தெரியாமல் இருந்தது. பைபிளைப் படித்த பொழுது தெரிந்து கொண்டேன். இயேசு கிறிஸ்துவே பைபிளில் இறுதி இறைத்தூதரை பின்பற்றுவது தொடர்பாக கூறியுள்ளார். இயேசுவுக்கு பின்பு இறைத்தூதர் ஒருவர் உள்ளார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. சத்தியத்தை அறிந்தேன் இஸ்லாத்தை ஏற்றேன் . ********************** பிரபல இங்கிலாந்து அறிஞர் மார்டின் லிங்க்ஸ் (1909 – 2005). 1940 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்ற இவர், 1983 ஆம் ஆண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதினார். ‘ MUHAMMAD HIS LIFE BASED ON THE EARLIEST SOURCES ‘ ( இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது) என்ற பெயரில் வெளிவந்த அந்நூலே ஆங்கிலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு குறித்து வெளிவந்த முதல் நூலாகும். தற்செயலாக இந்நூல் எனது கைகளில் கிடைத்தது. படித்தேன். பைபிளில் வாக்களிக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதைப் புரிந்து கொண்டேன். அந்நூலைப் படித்த பிறகு திருக்குர்ஆனைப் படித்தேன். இறைவன் தொடர்ந்து தனது தூதர்களை அனுப்பி இருப்பதை அறிந்தேன். மோசஸையும், இயேசுவையும் அனுப்பிய இறைவன்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இறைத்தூதராக அனுப்பியுள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டேன். மேலும், ‘ இறைவன் ஒருவன் ‘ என்பதில் இஸ்லாம் முந்தைய யூத – கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் தனித்துவத்துடன் திகழ்வதை அறிந்தேன். இறைவனின் ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம், இஸ்லாத்தின் கொள்கைகள் ஆகியவற்றினால் கவரப்பட்டேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்பதை நம்பத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஏற்றேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகள். *************** இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள் . இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது, வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன். எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது. அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன். இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன். மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன். “ இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு. நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா ? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா ? நான் சவாலாக கேட்கிறேன். இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? இறைவனின் உதவி. ********** இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன். “ _____________________ தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவை, 1) The First and Final Commandment – By Laurance B Brown. 2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown. 3) The Eighth Scroll – By Laurance B

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்