Friday, 5 July 2019

அன்றும் இன்றும் ll


அன்றும் இன்றும் ll
பேராதனை பலகலைகழகத்தில் மலையில் உயரமான இடத்தில் ஒரு பள்ளிவாயல் கட்டப்பட்டு இருக்கு நான் உள்ளே போய் பார்க்கும் ஆசையில் ஒரு முறை ஏறினேன் 1970 களில் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சில வரூடம்களின் பின் கலாநிதி பதியுதீன் 1977 தேர்தல் தோல்வி யடைந்து அரசும் மாறி. ஜேஆர் இலங்கையில் வரலாறு படைத்த ஶ்ரீ கங்கா சுதந்திரக்கட்சி எட்டு ஆசனத்துடன் ஶ்ரீமாவோ அம்மையார் தோல்வி அடைய, 12 ஆசனம் பெற்ற தமிழர்களின் கட்சிக்கு அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் பதவியும் போன பின்னர் கலாநிதி பதி அவர்கள் தனது கம்பளை வீட்டில் ஓய்வாக இருந்தார். அப்போது கம்பளை ஸாஹிராவில் என்று உறவுக்காற ஒரே குடும்ப மூன்று பிள்ளைகள் படித்து வந்தார்கள் 1977 தேர்தலில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஸாஹிரா போகும் போதெல்லாம் கலாநிதி அவர்களை சந்திக்கத்தவறுவது இல்லை. ஒரு நாள் நேரடியாக கேட்டேன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அந்த மலை உச்சியில் போய் பள்ளிவாயல் கட்டி உள்ளீர்கள் இதில் யாராவது போய் தொழ ஏலுமா? என்று உடனே சொன்னார் சற்று பக்கத்தில் இருக்கும் ஸாஹிரா பாடசாலைக்குப்போய் உயரே பார்த்து விட்டு வாருங்கள் நான் பதில் சொல்கின்றேன் என்றார், அங்கும் அதே போல் ஒரு பள்ளிவாயல் மலை உச்சியில் கட்டப்பட்டு இருந்தது. திரும்பி வந்ததும் சொன்னார் இந்த கண்டி மாநகரம் எங்கு பார்த்தாலும் மலைஉச்சியில் அவர்களது கோபுரம் உண்டு முஸ்லிம்களும் இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் அல்ல தொன்று தொட்ட வரலாறு உண்டு அதனால் நமது வரலாறை அங்கு புரிய வைத்துள்ளேன் அரச செலவில் கட்டி காட்சிக்கு வைத்துள்ளேன். இந்த வேலையை என்னைத்தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது இனி அது அரச சொத்து யாரும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றார், ஜே ஆர் ஜயவர்த்தன கொண்டுவர இருக்கும் புதிய அரசியல் அமைப்பு இந்த நாட்டை படு குளியில் தள்ளிவிடும் உலகில் இதுவரை யாரும் கொண்டிருக்காத அதிகாரத்தை வைத்திருக்கும்தலைக்கனம் அவரிடம் உண்டு என்றார். அது மட்டுமல்ல 1977 தேர்தல் முடிவு வரத்தொடங்கியதும் நள்ளிரவில் நான் தோல்வி அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கொண்டு இருந்தேன் இந்த 8 ஆசனத்துடன் 9 ஆக நானும் வந்து இருந்தால் என்னை படாத பாடு படுத்தி விடுவார்கள் என்றார். அன்று கலாநிதி பதியுதீன் செய்ததை இன்று யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலையில் இன்று நமது அரசியல் வாதிகள் மட்டு மல்ல இனவெறியும் தலை விரித்து தாண்டவம் ஆடுகிறது அல்லவா? Courtesy: Seyed Ahmed

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்