Tuesday, 8 January 2019

சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்....


சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்.... 1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களும் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டுமே. 2. டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக பந்துகளை சந்தித்து அவுட் ஆகாமல் இருந்த ஒரே வீரர் சிவ்னரைன் சந்தர்பால். 2002-ல் இந்தியாவுக்கு எதிராய் 1051 பந்துகளை சந்தித்து இந்த சாதனையை செய்துள்ளார். 3. 1983 உலக கோப்பை ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது களமிறங்கி கபில் தேவ் விளாசிய 175 ரன்கள் தான் முதன்முதலாக ஒரு இந்தியா வீரர் ஒரு நாள் போட்டியில் அடித்த முதல் சதமாகும். கிரேட் இன்னிங்ஸ். (துரதிஷ்டவசமாக அன்று ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் இந்த வீடியோ புட்டேஜ் கிடைக்காமலேயே போயிடுச்சு....) 4. சவுத் ஆப்ரிக்கன் கிரிக்கெட் வீரர் ஹாசிம் ஆம்லா Castle பீர் கம்பெனி லோகோவை தனது டிஷர்ட்டில் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் இவருக்கு முழு மேட்ச் பணமும் கிடைப்பதில்லை. ஆட்ட நாயகன் போன்ற அவார்ட் பணம் தவிர. அதை பற்றி கவலைப்படாமல் மதுவுக்கான விளம்பரத்தை பண்ண மாட்டேன் அது தனது மத கோட்பாட்டிற்கு எதிரானது என்று கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டார். கிரேட் மேன் 5. 60 ஓவர் மேட்ச் (1979 WC final), 50 ஓவர் மேட்ச் (92 WC final) மற்றும் 20 ஓவர் மேட்ச் (2013 Championship & 2016 world T20) என்று அனைத்து விதமான பைனலிலும் தோற்ற ஒரே அணி இங்கிலாந்து தான். 6. ரன் அவுட்டை டிவி ரீபிளே மூலம் செக் பண்ணும் முறை அமுலுக்கு வந்ததும் முதல் பலிகடா யார் தெரியுமா... நம்ம சச்சின் தான். 7. ஒரு நாள் போட்டிகளில் கிரேட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் இலங்கை ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யாவை விட குறைவான விக்கெட்களையே எடுத்துள்ளார். ஆம் ஜெயசூர்யா 323 விக்கெட். ஷேன் வார்ன் 293 மட்டுமே.

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்