Wednesday, 6 September 2017

Waseemlanka.blogspot.com

இலங்கையில் அதிக பெறுமதி கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான துனேஷ் டீ சில்வா இலங்கையிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த வாகனங்களை தம் வசம் வைத்துள்ளார்.

அவர் வைத்திருக்கும் வாகனங்களின் பெறுமதி இலங்கை மதிப்பில் 100 கோடி ரூபாவிற்கு மேல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு Awenra கார்டன், ஹிக்கடுவ Awenra பீச், வென்னப்புவ Awenra ஹொட்டல் என்பவற்றின் உரிமையாளரே இவராவார் . உலகில் காணப்படும் அதிநவீன வாகனங்களுடன் ஒப்பிடக்கூடிய பல வாகனங்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் உள்ள வாகனங்கள் போல இலங்கையில் எந்தவொரு வர்த்தகரிடமும் வாகனங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தந்தையின் வாகனங்களை ஓட்டி அதிசொகுசு வாழ்க்கை வாழும் அவரது மூத்த மகனான ஷகித் டீ சில்வா, அண்மைக்காலமாக இணைய வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்