Friday, 16 August 2019

நாகரிகங்கள் .... READ & SHARE YOUR FRIENDS


** அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .. (பண்ணவும் நினைக்காதீர் ) ** முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ... ** கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... ** பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுஙகள் .. செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ... ** பெருமைக்கு எருமை மெய்க்காதீர் ** ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள் ... வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம் ... அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள் ... ** பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .... ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள் ... த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் ... பைகளை சீட்டில் வைக்காதீர்கள் ... ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள் ... ** நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ... ** கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ... ** ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ... அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ... ** ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ , பதவியிலோ, முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்து விடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும் ... ** பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள் ... கேமாராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள் ... ** பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்த பின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள் ... ** பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் ஏற வேண்டும் ... ** பொது இடங்களில் பேசும் போது கத்திப் பேசாதீர்கள் ... மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள் ... டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ... அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ... ** நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ... உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ... ** சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others ! ** ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ... ** ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள் ... no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும் ... ** நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ... அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ... ** முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ... ** நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc ) ** யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் ... அவர்கள் கொஞ்ச தூரம் போகும் வரை காத்திருங்கள் ... ** வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ... ** உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ... (no one likes advices.) ** வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ... அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள். ** புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ... 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ... 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ... ** உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள் ... நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள் .... ( allow them freedom !) அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் ... 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள் ... ** ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it . ** பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ... உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ... ** ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள் ... ** உறவினர்களுக்கு சமைக்கும் முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டு விட்டு சமையுங்கள் ... ** ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ... 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ... (unless they are your spouse / lovers ) நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ... 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ... ** வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள் ... 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள் ... அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள் ... சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள் ... ** ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ... ** கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள் ... ** பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ... ** ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ... ( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல ) ** டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ... ** Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள் ... ** மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ... ( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!) ** ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள். ** அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள் ... ** முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள் ... ** குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ... ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள் #நாகரிகங்கள் .... குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ... நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ... -------------------------------------- M.T.M.WASEEM

அறிவியல்_உலகில்_முஸ்லிம்களின்_பங்கு


#அறிவியல்_உலகில்_முஸ்லிம்களின்_பங்கு - மிஸ்துரா லாவல்-அரோவோனா Misitura Lawal-Arowona காசநோயை எதிர்த்துப் போராடும் உலோகக் காசநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளார். - நைஜீரிய விஞ்ஞானி இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளார். - மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகள் அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது மற்றொரு நைஜீரியர் மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Misitura Lawal-Arowona ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காசநோயைக் குறைக்க உதவும் ஒரு தீர்வை வழங்கியுள்ளார். இந்தியாவின் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் கூட்டு திட்டத்திற்கு உட்பட்ட மிஸ்துரா(Misitura Lawal-Arowona ), உலோகத்தால் இயக்கப்பட்ட காசநோய் எதிர்ப்பு (காசநோய்) மருந்தை வெற்றிகரமாக கொண்டு வந்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. கோபால்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு உலோக வழித்தோன்றல்களைப் பயன்படுத்தி உலோக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிப்ரோஃப்ளோக்சசின் எச்.சி.எல், ஆஃப்லோக்சசின், பைராசினமைடு மற்றும் மோக்ஸிஃப்ளோக்சசின் எச்.சி.எல் போன்ற மருந்துகள் அவரால் உருவாக்க முடிந்தது. m.t.m.waseem

மனைவியை பிரிந்து வெளி நட்டில் வாழ்வோர்க்கு சமர்ப்பணம்.


(#மனைவியை பிரிந்து வெளி நட்டில் வாழ்வோர்க்கு சமர்ப்பணம்.உங்கள் மனைவியும் இப்படி நடந்து கொண்டால் உடனடியாக வீடு வந்து சேருங்கள்) *வாசித்து விட்டு கருத்துகளையும் கூறுங்கள் அன்று காலை தன் தோழியோடு இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஒரு சகோதரி கவுன்சிலிங் செய்ய வந்திருந்தாள், உயர் தரம் வரை படித்த நிதானமான 26 வயது அழகான பெண் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து 2 வயதில் ஒரு பிள்ளையும் உண்டு. அந்தப் பிள்ளையை கூட மிகவும் அழகாகவே வளர்த்து வைத்திருக்கும் இவளுக்கு என்ன நடந்தது என்ற எண்ணத்துடன் அவளுடன் கதை கொடுக்க.. கண்ணீர் வழிய "எனக்கு என்ன நடக்கிறது டாடக்டர்.."என்று அழுது கொண்டே ஆரம்பித்தாள்... திருமணம் முடித்து வெறும் 55 நாட்களில் அவளைக் கர்ப்பமாக்கி விட்டு வெளி நாடு சென்று பிள்ளைக்கு 2வயதாகும் போது தான் முதல் முறையாக பிள்ளையை பார்க்க நாட்டிற்கு வந்திருந்தான் அவளது கணவன். அவன் வெளி நாட்டில் இருக்கும் நாள் எல்லாம், "அங்கே இருக்க வானம் வந்து விடுங்கள், வந்து விடுங்கள்," "வாழ வீடு இருக்கு என் நகை எல்லாம் வித்து சரி சின்னதாக எதாச்சும் செய்யுங்கள்," " கஞ்சி குடித்துக் கொண்டு சரி வாழலாம், " " முடிந்தால் நானும் வீட்டில் எதாவது தொழில் செய்கிறேன்," " எனக்கு உங்கள் பக்கத்திலேயே இருக்க வேணும்," " உங்கள பார்த்துக் கொண்டே வாழ வேண்டும், " " எனக்குப் பெரிதாக எதுவுமே வேண்டாம்" என்று உண்மை அன்பாலும், கணவன் மீதான காதலாலாலும், வேதனைப்பட்டு, கெஞ்சியும், அன்பாகவும் நச்சரிப்பாகவும் தினமும் கூறிக் கொண்டே இருந்திருக்கிறாள், என்றாலும் இன்னும் இரண்டு மாசம், மூன்று மாசம், இந்த முறை வந்தால் இனி மேல் நான் போகவே மாட்டேன் என்றெல்லாம் சமாளித்து கூறி ஒருவாரு இரண்டு வருடத்தை முடித்து நாட்டிற்கு வந்து சேர்ந்தார் அவள் கணவன், வெறும் 55 நாள் வாழ்ந்த இல்லற வாழ்க்கையை இனிமேல் இன்பமாக தொடர்ந்தும் வாழலாம், இனி மேல் என் பக்கத்திலேயே என் மனதின் காதலன் தினமும் இருப்பான் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி புதிய வாழ்க்கைக்கு ஆனந்தமாக தாயாராகி இருக்கிறாள் இந்த பெண். அவனும் வந்து ஒரு மாதம் கடந்து செல்கையில் மீண்டும் கர்ப்பமானாள் அவள், அவனது லீவில் 2 மாதங்கள் கடந்ததும், மெதுவாக அவளிடம் சென்று நான் இன்னும் இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வெளி நாடு சென்று வந்துவிடுகிறேன், இத்தனை வருடம் வேலை செய்தமைக்காக என் கொம்பனி தரும் 5 இலட்சம் பணத்தை கையில் எடுத்த உடன் அடுத்த விமானத்தில ஏறி வீட்டில் இருப்பேன், அந்த பணத்தையும் சேர்த்து வீட்டுக்கு முன்னால் கடை ஒன்று திறப்போம், அப்போ இருவரும் ஒன்றாகவே இருக்கலாம் என்றெல்லாம் அவளிடம் (பொய்) கூறி, சமாதானம் செய்து சரியாக 65 ஆவது நாள் நாட்டை விட்டு மீண்டும் பறந்து சென்று விட்டான். அவன் சென்ற ஏக்கத்தில் அந்தப் பச்சிளம் பிள்ளை அடிக்கடி அழுவதும், மழலை மொழியில் தகப்பனை தேடுவதும், ,போனை காதில் வைத்து டெடா டெடா என முத்தம் வைப்பதுமாக ஒரு மாதம் இரண்டு மாதம் ஆகி, மூன்று ஆகி கடைசியில் ஐந்து மாதமும் ஆகிவிட்டது, அவன் வந்து சேர்ந்த பாடில்லை. கணவனின் அன்பிற்கு, ஆதரவிற்கு, அரவணைப்பிற்கு ஏங்கிய அவள் உள்ளம், அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஏங்கிய அவளது காதல் ❤️ உள்ளம் பொறுமையை மீறி கொந்தளித்து அடிக்கடி அவனிடம், " எப்போ வரப்போகின்றாய், எப்போ வரப்போகிறாய் " என நச்சரித்து சண்டை பிடிக்க, அதில் இருந்து தப்பித்துக் கொள்ள அவளுடன் கதைப்பதையும், மெசேஜ் வைப்பதையும் வெகுவாக குறைத்து அவளை தவிர்க்கத் தொடங்கி இருக்கிறான், அவளும் வெறி பிடித்தவளைப் போல் தினமும் இரவு பகலாக நூறு, நூற்றைம்பது என்று கோல் மேல் கோல், மெசேஜ் மேல் மெசேஜ் வைத்தாலும், ஒரு மெசேஜ் இற்கும் பதில் வைக்காமல், வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ கடமைக்கு கதைத்து விட்டு கோலை வைத்து விடத் தொடங்கி உள்ளான். அதனால் இன்னும் மன உளைச்சல் கொண்ட அவளது நிலை தடுமாற்றம் கொள்ளத் தொடங்கியது, பிள்ளையை கவனிப்பதை விட, அன்றாட வேலைகளை செய்வதை விட போனும் கையுமாகவும், அறையைப் பூட்டிக் கொண்டும் இருக்க ஆரம்பித்து விட்டாள். போதாக் குறைக்கு வீட்டில் மாமியாரும், அவருக்கு பெற்றோல் ஊத்தும் மைனியும் சேர்ந்து அவளின் நிலையை புரிந்து கொள்ளாமல், அவளை கண்டதற்கெல்லாம் நச்சரிக்க, இத்தனை காலம் அமைதியாகவே இருந்தவள் பூகம்பமாக மாற வீடும் சண்டையில் இரண்டாக பிளந்தது, தன் கோபத்தை காட்ட இடம் இன்றி அவளது பச்சிளம் பிள்ளை மீதும் அதை அடிக்கடி காட்டத் தொடங்கியவள், படிப்படியாக வீட்டுப் பொருட்களை தூக்கி வீசவும், உடைக்கவும், கண்ணாடியை. உடைக்கவும், தனியாக முனு முனுக்கவும் என ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு குணத்தை காட்டத் தொடங்கியிருக்கிறாள், இதைப் பார்த்த குடும்ப #விஞ்ஞானிகள் " இவளுக்கு பேய் மூடி விட்டது " என்று உள்ளூர் மந்திரவாதிகள் துனையை பல முறை நாடியும் பேய் அவளை விட்டு ஓடிய பாடில்லை. அவன் கணவன் வந்து சேர்ந்த பாடுமில்லை, விபரம் கேள்விப்பட்ட அவள் நெருங்கிய தோழி அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருக்காவிட்டால் சில சமயம் தற்கொலை வரை கூட அவளது நிலை சென்றிருக்கலாம். ஆம் கணவன் மீது கொண்ட அளவு கடந்த பாசம், உண்மைக் காதலின் ஏக்கம் அவளை #டிப்ரெஷன் இல் தள்ளி, #பைத்தியக்காரி என்றும் மதம் பிடித்தவள் என்றும் பட்டம் கொடுத்து வைத்திருந்தது, இவளுக்கு மருந்து கொடுத்து போதையில் தூங்கப் போட்டால், அவளுக்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் கூட ஆபத்தாகலாம், இவளுக்கு இப்போதைக்கு ஒரே மருந்து இவள் அன்பு வைத்த கணவனின் அன்பும், அரவனைப்பும் மாத்திரம் தான் என்பதை உணர்ந்து கொண்ட வைத்தியர் மூலம் தகவல் வெளி நாட்டுக்கு பறந்தது, அவனும் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்பவனைப் போல் எமெர்ஜென்சியில் பறந்து வர தயாராகிக் கொண்டிருக்கிறார். உங்கள் மனைவியைப் பற்றி அவளின் தேவைகளை பற்றி புரிந்து கொள்ளாத, புரிந்துன்கொள்ள முடியாத, புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் முட்டாள் தனமான கணவனாக வாழவேண்டாம். ₹ ஒரு சில பெண்களுக்கு ஒரு வாரம் இல்லை, ஒரு நாள் சரி தன் கணவனை பிரிந்து வாழ முடியாத அன்பும், பிணைப்பும் அந்தக் கணவனோடு இருக்கும், அவர்களுக்கு கணவன் பக்கத்தில் இருந்தால் போதும், பம்பரம் போல் சுழன்று சுழன்று அனைத்தையும் செய்வார்கள், அவர்களின் எனேர்ஜியே (Energy ) கணவன் தான். ₹ இன்னும் சில பெண்கள் கடன், வறுமை போன்ற காரணங்கள் காரணமாக பொறுமை காத்தலும் அந்தப் பொறுமை காலமெல்லாம் கனிந்தே காணப்படாது. ₹ இன்னும் ஒரு கூட்டம் உண்டு, அவர்களுக்கு கணவனும் தேவை கிடையாது, பிள்ளைகள் மீது அக்கறையும் கிடையாது. பணம் வர வேண்டும், அதை வைத்து ஊர் சுத்தி திரிய வேண்டும்( இவர்களை பற்றி இங்கு கதைக்க தேவையே இல்லை) ₹ இன்னும் சில பெண்களுக்கு உடல் ரீதியான தேவைகள் அதிகமாக தேவைப்படலாம், ஏன் சில சமயம் அவர்களுக்கு தினமும் இல்லறத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று கூட இருக்கலாம். ( இதில் எந்த அசிங்கமோ, பிழையோ கிடையாது) பெண் என்றால் தன் உணர்ச்சியை அடக்கி மறைத்துக் கொள்ள வேண்டும், ஆண் தான் அதனை வெளிக்காட்ட வேண்டும், போன்ற எண்ணங்கள் உங்களிடம் இருந்தால் அதனை குழி தோண்டி இன்றே புதைத்து விடுங்கள், அவளுக்கு அந்த தேவை இருந்தால் அதை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய எந்த விதத் தேவையும் கிடையாது. அதனை ஹலாலான விதத்தில் தன் கணவனிடம் தாராளமாக ஒரு முறையோ, பல முறையோ கேட்டு வாங்கி அனுபவித்திடும் உரிமை அவளுக்கு முழுமையாக, தாராளமாக உண்டு. சில சமயம் இது போன்ற தேவையுடையவள் உங்கள் மனைவியாக அமைந்து நீங்கள் வெளி நாட்டில் காலமெல்லாம் குப்பை கொட்டிக் கொண்டும், அந்த நாட்டில் இருக்கும் எதோ ஒரு வெளி நாட்டுக்காரியிடம் உங்கள் தேவையை முடித்துக் கொண்டும் மனைவியை கிடப்பில் போட்டு வைத்தால். அவள் கூட பொறுமையை இழந்து இது போன்ற நிலைக்கு ஆகலாம் அல்லது காலம் மாறிவிட்டது, ஒரு பெண் தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், உணர்ச்சிகளை தூண்டக் கூடிய எத்தனையோ விடயங்கள் உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது. இவர்களை குறி வைத்து கழுகள் குடும்பத்திலும், சமூகத்திலும் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். எங்கேனும் பிசகிடலாம். இது போன்ற நிலைகளில் இருந்து தம் பொண்டாட்டியை பாதுகாக்கவும், நச்சரிப்புகளில் இருந்து தப்பிக்கும் கேடயம் எனவும் நினைத்துக் கொண்டு, வெளி நாட்டில் வாழும் சில #அரவைக்கடுகளின் பேச்சு வழக்கில் பாவிக்கும் ஒரு சொல் தான், " வெக்கெஷன் போனால் #புள்ளயகுடுத்துரனும், அப்போ தான் அவள்கள் அடங்கி இருப்பார்கள்" என்பதாகும். வெட்கம் கெட்டவர்களே! உங்கள் மனைவியை இப்படி கேவளமாக கதைக்க மானம், ரோஷம், சூடு, சொரனை கிடையாதா? இவர்கள் பிள்ளையை கொடுத்து விட்டு (கர்ப்பமாக்கி விட்டு) வெளி நாடு சென்று விட்டால், மனைவியானவள் கர்ப்பம், பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல் என்று அலைந்து, கலைத்துப் போவதால் தமது உடல் தேவை மறக்கப்பட்டு வேறு ஆண்களிடம் வழி தவறி செல்ல மாட்டர்கள், தொன தொனப்பும் குறைவாகவே இருக்கும், அதற்குள் அப்படி இப்படி என இரண்டு வருடங்கள் ஆகும் போது அடுத்த வெக்கேஷன் வந்துவிடும், அப்போது நோகாமல் நுங்கு நின்னலாம் என, ₹ தன் மனைவியின் உண்மை தேவை என்ன? ₹ அவளின் அன்பின் ஆழம் என்ன? என்பதை புரிந்து கொள்ளாது திட்டம் போட்டவர்களில் ஒருவர் தான் இவளின் கணவனும், திட்டம் பிசகி கை மீறும் தறுவாயில் தப்பித்து விட்டார். புரிந்து கொள்ளுங்கள், ஒரு கணவன் என்பவன் வெறும் பணம் சம்பாதிக்கும், குழந்தை உருவாக்கும் இயந்திரமாக இருப்பதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, அவளுக்கு அன்பு செலுத்த, அரவனைக்க, ஆதரவு கொடுக்க, பாதுகாப்பு கொடுக்க, தேவையான இன்பங்களை அனுபவிக்க ஒரு துனையகவே கணவனை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இளமைகாலமெல்லாம் வெளி நாட்டில் செலவு செய்து வாழ்வை நாசம் செய்யாதீர்கள் இவற்றை உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்க இல்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல கணவனாக வாழ்க்கையில் தோத்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை உணராமல் மனைவியின் நச்சரிப்பை பார்த்து "என் பொண்டாட்டிக்கு பைத்தியம்" என கூறித் திரிந்தால் உண்மையில் பைத்தியம் அவளுக்கு கிடையாது. From: m.t.m.waseem

Saturday, 20 July 2019

கினிகத்தேன நகரில்


கினிகத்தேன நகரில் மண்சரிவில் சிக்கிய வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு, பத்துக்கு மேற்பட்ட கடைகள் சரிவு. -பொலிஸ்

Monday, 15 July 2019

இஸ்லாத்தை விட்டு விட்டு தங்கள் காரியங்களில் மேற்கத்திய கலாசாரத்தை அனுவனுவாக பின் தொடர்வோர் பலர் நம்மில் இருக்க..


இஸ்லாத்தை விட்டு விட்டு தங்கள் காரியங்களில் மேற்கத்திய கலாசாரத்தை அனுவனுவாக பின் தொடர்வோர் பலர் நம்மில் இருக்க.. மேற்கத்திய மண்ணின் வெற்றிக்காக விளையாடிய போதும் இஸ்லாமிய வரம்புகளை மீறாது இஸ்லாமியன் என்ற அடையாளத்தை தனித்துவமாக காட்டிய வீரர்களே இவர்கள்.. நிர்பந்தம் என்ற பெயரில் அடுத்தவர்களை திருப்திபடுத்த இஸ்லாமிய பெயரில் தடைகளை மீறி செயல்படுவோருக்கு இவர்களில் சிறந்த முன்னுதாரணம் உண்டு #முயீன்_அலி #ஆதில்_ரஷீத் இன்திகாப் உமரீ

Saturday, 6 July 2019

வளைந்த கால்கள்


வளைந்த கால்கள் “டொக்டர், புள்ளட கால் உள்நோக்கி வளைஞ்சி” “எத்தனை வயது” “இப்பதான் ஒரு வயது” “எத்தனை வயதுல நடக்க தொடங்கின?” “10மாசத்திலயே நடக்க தொடங்கிட்டாரு” “கொஞ்ச நாள் பார்ப்பம்” ............................................. எங்களுடைய உடல் எடையானது கால்களினூடாக பூமிக்கு சீராக கடத்தப்பட, கால்கள் நேராக இருப்பது அவசியமாகும். குழந்தை பிறக்கும் போது, இரண்டு கால்களும் முழங்காலில் சிறிது உள்நோக்கி வளைந்து இருக்கும். இது 2 வயதளவில் நேராக மாறும். இரண்டரை வயதளவில் சிறிது வெளிநோக்கி வளையும். 4-6 வயதளவில் கால் நேராக மாறும். சில குழந்தைகளில் முழங்காலுக்கு கீழே உள்ள கால் மிக அதிகமாக உள்நோக்கி வளைந்து காணப்படும் (infantile Blount’s disease). இது எதனால் வருகிறது என கண்டறியப்படாத போதும், மிக இளவயதில் நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகளில் அதிகம் வருவதாக அறியப்பட்டுள்ளது ( வோக்கரில் பிள்ளைகளை போடுவதை தவிர்ப்பது நல்லது). மிகப் பெரும்பாலானோருக்கு இது தானாகவே 3-4 வயதுகளில் சரியாகும். இதன் அளவைப் பொறுத்து சில குழந்தைகளுக்கு சில braceகள் அணியவேண்டியேற்படும். மிகச் சில குழந்தைகளுக்கு சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியேற்படும். பதின்மவயதினர் சிலருக்கும் இதேவிதமான வளைவு ஏற்படலாம் ( Adolescent blount disease). இவர்களில் அதிகமானோருக்கு சத்திரசிகிச்சை அவசியமாகும். Dr Ahamed Nihaj MBBS, MD- Orthopaedics

Friday, 5 July 2019

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.


உலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்டியிலாவது விளையாடிவிட்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் டராம் நகரில் வைத்து எமது ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்