Wednesday, 24 October 2018

INDvsWI


#மேற்கிந்தியதீவுகள் VS #இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் ஒருநாள் போட்டியில் #ஷெய்_ஹோப்பின் அதிரடி சதம்; போட்டி சமநிலையில் முடிந்தது #INDvsWI

மிகப்பெரிய ஆலிம் பெருந்தகை ஷைகுனா சித்தாரி ஹம்ஸா ஹழரத் கிப்லா அவர்கள் சற்று முன் வஃபாத்தானார்கள் انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مدخله واكرم نزله

Tuesday, 23 October 2018

🇱🇰🦁💪💪#கு #ஹூ... 2.0 #LANKAN #BIG #BIG #WON #BY 219RUNS!💪💪😁🦁🦁 #WELL #BOWLING #AKILA #DUSMANTHA #RAJITHA


நீண்ட காலத்திற்கு பின்னர் அருமையான ஒரு ஆட்டம்...🇱🇰🦁💪💪#கு #ஹூ... 2.0 #LANKAN #BIG #BIG #WON #BY 219RUNS!💪💪😁🦁🦁 #WELL #BOWLING #AKILA #DUSMANTHA #RAJITHA வாழ்த்துக்கள் சிங்கங்கள்.. இதே சினத்துடன் சீறி பாய்ந்து அடுத்து நடக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆரம்ப வீரர்களின் அட்டகாசமான ஆட்டத்துடனும் மத்திய வரிசை வீரர்களின் சிறந்த ஆட்டமும் கை கொடுக்க இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு 366 ஓட்டங்களை பெற்றது ... துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிறோசன் டிக்வெல்ல 95 ஒட்டங்களையும் சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் அணித்தலைவர் சந்திமால் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களையும் அதிரடியாக ஆடிய குசல் மென்டிஸ் 1 பவுன்டரி 6 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்... பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரொம் கரண் , மோயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர் பதிலுக்கு துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே விக்கட்டுக்கள் சரிந்தன துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் பென்ஸ் ஸ்டொக்ஸ் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார் பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டுஸ்மந்த சமீர 3விக்கட்டுக்களையும் அகில தனஞ்சய 4 விக்கட்டுக்களையும் கைப்பெற்றினார் இங்கிலாந்து அணி 26 ஓவர் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்து தோல்வியை தழுவிக் கொண்டது. "..

மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள், நன்பர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!


மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள், நன்பர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்! உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள், *''உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.''* (ஆதாரம்: அபூதாவூத்) நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் து'ஆச் செய்வார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ? எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் ! ஒரு ஹதீஸ், அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; *''நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.* ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை து'ஆ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும். மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம். மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள். "உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்." ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் து'ஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். *மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் து'ஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!* எனவே அந்த து'ஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும். *அல்லாஹ் மிக்க அறிந்தவன்.* நன்றி

Sunday, 21 October 2018


1. பர்ஜ் கலீபா - துபைய் - 2016 ( World tallest ) 2. பர்ஜ் கலீபா மஹிந்த பின் நெலும் குல்லும் - கொழும்பு - 2018 எம் தேசமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது !

இலங்கையினை சேர்ந்த இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் டில்சாட், இங்கிலாந்தை சேர்ந்த லங்லி மில்ஸ் அணிக்கு விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள்!

#கட்டாரில்_பலத்த_மழை கடும் மழை காரணமாக கட்டார் தோஹா நகரம் நீரில் மூழ்கியுள்ளது. வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. -சர்வதேச ஊடகம்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்